1983 ஆம் ஆண்டில் வெளியான ‘மண்வாசனை’யில், முத்து பேச்சி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை ரேவதி.
தமிழ்த் திரையுலகில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல இந்திய மொழி திரைப்படங்களில் இன்றுவரை நடித்து வரும்
மூத்த நடிகைகளில் இவரும் ஒருவர்.
இவர் இதுவரை அனைத்து மொழி படங்களிலும் சேர்த்து 145 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். நடிகையாக மட்டுமில்லாமல் பின்னணி பேசும் கலைஞராகவும், பின்னணிப் பாடகியாகவும், சின்னத்திரை நடிகையாகவும் தன் திறமையை வெளிப்படுத்தியவர்.
அத்துடன் நில்லாது. ‘மித்ர மை ஃப்ரண்ட் என்ற படத்தின் மூலம் இயக்குனராகவும் தனி முத்திரையை பதித்தவர்.
அதைத்தொடர்ந்து ஃபிர் மிலேங்கே’ என்ற ஹிந்தி படத்தையும் இயக்கிய இவர், பதினாறு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஹிந்தியில் தயாராகும் த லாஸ்ட் ஹுர்ரா என்ற படத்தை இயக்குகிறார்.
இந்தப்படத்தில் நடிகை பொலிவூட் நடிகை கஜோல் கதையின் நாயகியாக நடிக்கி
கிறார்.
படத்தைப் பற்றி இயக்குனர் ரேவதி பேசுகையில், உண்மை சம்பவத்தை மையப்
படுத்தி தயாராகும் இந்த படத்தில் நாயகியாக நடிக்க கஜோல் பொருத்தமாக இருப்பார் என்பது என்னுடைய குழுவினரின் அசைக்க முடியாத நம்பிக்கை.
அவர் முதன்மையான தெரிவாகவும் இருந்தார். இப்படத்தின் பணிகள் தற்போது தொடங்கியிருக்கிறது.படப்பிடிப்பு நடைபெறும் திகதி விரைவில் அறிவிக்கப்படும்.
அடுத்த ஆண்டில் இப்படம் வெளியாகும் வகையில் திட்டமிடப்பட்டு வருகிறது என்றார்.