வெளியிடங்களில் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு உகந்ததல்ல என்று தெரிந்தாலும் பலராலும் அதை தவிர்க்க முடிவதில்லை. அப்படி தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் வெளியில் சாப்பிட நேரும்போது கவனத்தில் கொள்வதற்கான சில விடயங்கள்
மெனு கார்டைப் படியுங்கள்
மெனு கார்டில் உள்ள அதிக எண்ணெய் அல்லது கொழுப்பு சேர்த்த உணவுகளை தவிருங்கள். நீங்கள் ஆர்டர் செய்யும் உணவுகள் எத்தனை கலோரிகள் கொண்டவை என்பதையும் ஆராயலாம். இதெல்லாம் சாத்தியமில்லை என்று நினைத்தால் ஏற்கனவே உங்களுக்குப் பழக்கப்பட்ட ஆரோக்கியமானது என நீங்கள் நம்பும் உணவை ஆர்டர் செய்து சாப்பிடவும்.
சாப்பிடுவதற்கு முன்
ஹோட்டலில் சாப்பிடுவது என முடிவாகிவிட்டதா? வீட்டிலிருந்து கிளம்புவதற்கு முன்பே கொஞ்சம் நட்ஸ்,பழங்கள் போன்று எதையாவது சாப்பிட்டு விட்டுக் கிளம்புங்கள்.
வெளியிடத்தில் நீங்கள் உங்களையும் அறியாமல் அதிகம் சாப்பிடுவதை இது தடுக்கும். சூப், கொண்டைக் கடலை அல்லது பழக்கலவை போன்றவற்றை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள். அல்லது சாப்பிடுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக ஒன்று அல்லது இரண்டு டம்ளர் தண்ணீர் குடியுங்கள். தண்ணீரில் கலோரி கிடையாது. ஆனாலும் அது வயிற்றை நிரப்பிவிடும்.
இனிப்புகளைத் தவிருங்கள்
சாப்பிட்டவுடன் கடைசியாக இனிப்பு ஐஸ்கிரீம் சாப்பிடும் பழக்கம் சிலருக்கு இருக்கலாம் ஆனால் இது மிகவும் மோசமான ஒன்று இது வயிறு,இடுப்பு மற்றும் தொடை பகுதிகளைச் கொழுப்பு சேரக் காரணமாகிவிடும்.
உணவுடன் வேண்டாமே பானங்கள்
சிலருக்கு சாப்பிட்டவுடன் தேநீர் அல்லது குளிர்பானம் பருகும் பழக்கம் இருக்கும் இந்த இரண்டு வழக்கங்களுமே தவறானவை. இவை இரண்டுமே நீங்கள் ஏற்கனவே உட்கொண்ட உணவுகளில் உள்ள சத்துக்களை உடல் கிரகிக்க விடாமல் செய்துவிடும்.