கொரோனா தொற்றிலிருந்து சிகிச்சைக்குப் பிறகு மீண்டவர்களின் உடல்நிலை சகஜ நிலைக்கு திரும்ப குறைந்தது இரண்டு மாதங்கள் வரை ஆகலாம்.
நோய்த் தொற்றின் தீவிரத்தைப் பொறுத்து சிலருக்கு ஓராண்டு கூட ஆகும். இந்த காலகட்டத்தில் நீங்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டியது முக்கியம்.
அத்துடன் வழக்கமான பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுவதும் அவசியம் தொற்றிலிருந்து மீண்டவர்கள் பெரும்பாலும் மிகவும் சோர்வுடனேயே காணப்படுவார்கள்.
களைப்பு மற்றும் வறட்டு இருமலால் வலியும் ஏற்படும் நோய் தொற்று ஏற்பட்ட போது இருமியதால் ஏற்பட்ட சோர்வு மிகப்பெரும் தாக்கத்தை உடலில் ஏற்படுத்தியிருக்கும்.
வறட்டு இருமலை சமாளிக்க எளிய ஆலோசனைகள்
வரட்டு இருமல் நோயாளியின் தொண்டையில் மிகப்பெரும் ஒவ்வாமையை ஏற்படுத்தி இருக்கும் இது நோயிலிருந்து மீண்ட பிறகும் தொடரும் கொரோனா தொற்றிலிருந்து மீண்ட பிறகும் பலர் தொண்டை வலியை அனுபவிக்க நேரிடும் இதை சமாளிக்க பின்வரும் எளிய வழிமுறைகளை பின்பற்றலாம்
- அடிக்கடி வெதுவெதுப்பான குடிநீர் பருகவும்
- ஒவ்வொரு முறையும் சிறு சிறு அளவாக தண்ணீரை விழுங்கவும்
- தொண்டையில் அரிப்பு ஏற்படுவது போல உணர்ந்தால் சூடான பானங்களை மட்டுமே பருக வேண்டும்
- வெந்நீரில் தேன் மற்றும் எலுமிச்சை சேர்த்து பருகலாம் இது தொண்டைக்கு இதமளிக்கும்
- தினசரி மூன்று முறையாவது நீராவி பிடிக்க வேண்டும் இது நுரையீரலில் சளி பிடிப்பதைத் தடுக்கும்
- அறையைச் சுற்றி நடந்தால் நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்த உதவும்.
சோர்வைப் போக்க சில ஆலோசனைகள்
- உடல் சோர்வு என்பது ஆறு மாதம் வரை நீடிக்கலாம் இதை சமாளிக்க முதலில் மன ரீதியிலும் உடல் ரீதியிலும் உங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
- முழுமையான தூக்கத்தை உறுதி செய்ய வேண்டும்.
- மன அழுத்தம் இருக்கக் கூடாது
- தொடர்ந்து வைட்டமின் மாத்திரைகள் குறிப்பாக வைட்டமின் சி மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரையின்படி தொடர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- அதிக அளவில் பழச்சாறு பால் உள்ளிட்டவை பழகுவதன் மூலம் உங்கள் தசை வலு வடையும்.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும்.
- புரதச்சத்து நிறைந்த உணவுகளையும் நோய் எதிர்ப்பு தன்மை கொண்ட காய்கறிகளையும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
- அத்தோடு உங்கள் உடலில் ஆக்சிஜன் அளவை அடிக்கடி சோதித்துக் கொள்ள வேண்டும் கொரோனா தொற்றிலிருந்து மீண்ட பிறகு குறைந்தபட்சம் 10 நாட்களாவது ஓய்வெடுக்க வேண்டும்.
மூன்றாவது டோஸை நிறுத்தி வையுங்கள் உலக சுகாதார அமைப்பு மீண்டும் கோரிக்கை