கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் தமிழ் 4 சீசன்கள் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. ஐந்தாவது சீசன் விரைவில் வெளியாக உள்ளது.
இந்த நிகழ்ச்சியின் புரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. திருமண நிகழ்ச்சி ஒன்றில் மணமகன் மணமகளை வரவேற்பது போன்றும், ஆரம்பத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மிகுந்த அக்கறையுடன் மணமக்களை கவனித்துக் கொள்வது போன்றும், மணமக்களின் வீட்டார்கள் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொள்வது போன்றுமான காட்சிகள் இந்த வீடியோவில் உள்ளது.
அதே போல் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் போட்டியாளர்கள் ஆரம்பத்தில் ஒற்றுமையாகவும் போகப்போக கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரச்சினை செய்வதை மறைமுகமாக இந்த புரோமோ வீடியோ குறிப்பிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆயிரம் பொருத்தம் பார்த்து நடக்கும் கல்யாண வீட்டிலேயே இவ்வளவு கலாட்டா இருக்கத்தான் செய்யும், இங்கேயே இப்படின்னா இங்க வீடும் பெருசு , கலாட்டாவும் பெருசு என்ற கமல் வசனத்துடன் இந்த புரமோ வீடியோ முடிவடைகிறது.
கமல்ஹாசனின் விக்ரம் பட ஆரம்பிக்கலாமா வசனத்தோடு தொடங்கியிருக்கிறது பிக்பாஸ் சீசன் 5