இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!! இணையத்தில் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்.
கை, கால்களில் மருதாணி வைப்பது எதற்கு?
பலர் திருமண நிகழ்ச்சிக்கு செல்லும்போதும், விசேஷங்களுக்கு போகும்போதும் அந்த மகிழ்ச்சியான தருணங்களில் மருதாணி வைக்கிறார்கள். அவை அழகிற்கு அல்ல. நமது உடலில் உள்ள வெப்பத்தை தணித்து குளிர்ச்சியாக்குவதற்காகவும், அத்துடன் நமக்கு ஏற்படும் தலைவலி, காய்ச்சல் போன்ற பிணிகள் வராமல் தவிர்ப்பதற்காகவும் வைக்கிறார்கள்.
பால் இனிப்பாக இருக்கிறது, ஆனால் தயிர் ஏன் புளிப்பாக இருக்கிறது?
பாலில் லாக்டோஸ் என்ற சர்க்கரை உள்ளது. இந்த சர்க்கரையின் காரணமாக பால் இனிப்பாக இருக்கின்றது. ஆனால் இது தயிராக மாறும்போது லாக்டோபாகிலஸ் பாக்டீரியா லாக்டோஸை, லாக்டிக் அமிலமாக மாற்றுகிறது. இந்த அமிலம் காரணமாக தயிர் புளிப்பாக உள்ளது.
வெங்காயம் வெட்டும்போது நம் கண்களில் ஏன் தண்ணீர் வருகின்றது?
நாம் வெங்காயம் வெட்டும்போது, வெங்காய செல்கள் கந்தகத்தை(சல்பர்) காற்றில் விடுகின்றன. சல்பர் நம் கண்களுடன் வினைபுரிந்து சிறிய அளவிலான சல்பூரிக் அமிலத்தை உருவாக்குகிறது. சல்பூரிக் அமிலம் நம் கண்களை எரித்து நம்மை அழ வைக்கிறது.
ஆப்பிள் வெட்டியவுடன் நிறம் மாறுவது எதனால்?
ஆப்பிளில் அதிகப்படியான இரும்பு சத்து உள்ளதால் இது வெட்டி வைத்த உடன் காற்றில் பட்டு துருப்பிடித்தலுக்கு உள்ளாகிறது. இதுவே ஆப்பிள் நிறம் மாறுவதற்கான காரணம்.
ஆம்புலன்ஸ்-னு ஏன் Reverse-ல எழுதுறாங்க தெரியுமா?
ஆம்புலன்ஸ் என்று Reverse-ல எழுதுவதற்கான காரணம் சாலையில் முன்னாடி வாகனங்களில் சென்று கொண்டிருப்பவர்கள் ஓரக் கண்ணாடியை பார்த்தால் ஆம்புலன்ஸ் என்று தெரியும். அதனால் முன்னே செல்லுவதற்கு வழி விடுவார்கள்.
ரயில் பாதையில் ஏன் ஜல்லி கற்கள் இருக்கின்றது?
ரயில் பாதையில் செல்லும் ரயில்கள் அதிக எடை கொண்டவையாக இருக்கும். அது மட்டுமல்லாமல், ரயில் வண்டிகள் மிகவும் வேகமாக செல்லும். அவ்வாறு வேகமாக செல்லும்போது அழுத்தம் மற்றும் அதிர்வுகள் அதிகமாகும். அந்த அழுத்தத்தைத் தாங்கிக்கொண்டு தண்டவாளங்களின் மீது ரயில் பாதுகாப்பாக செல்ல கருங்கல் ஜல்லிகள் உதவுகின்றன. மேலும் தண்டவாளத்தின் அருகில் உள்ள தண்ணீரை தண்டவாளத்தின் உள்ளே வருவதை இக்கற்கள் தடுக்கின்றன.
கடல் நீரில் ஏன் உப்பு இருக்கிறது? ஆனால் நதி நீரில் ஏன் உப்பு இல்லை?
மழையில் இருந்து வரும் புதிய நீரால் நதிகள் தொடர்ந்து நிரப்பப்படுகின்றன. மழைநீரில் உப்பு இல்லாத காரணத்தால் நதி நீரில் உப்பு இல்லை. நதி நீர் மணல், தாதுக்கள் மற்றும் அழுக்குகளுடன் கடலில் கலக்கிறது. கடலில் உள்ள நீர் காற்றில் ஆவியாகிறது. ஆனால் மணல், அழுக்கு மற்றும் பாறைகளில் இருந்து கரைந்த உப்பு ஆவியாகாது. அது கடலில் தங்கி கடல் நீரை உப்பு ஆக்குகிறது.
வீட்டு வாசலில் மாட்டுச்சாணக் கரைசல் தெளிப்பது எதற்காக?
மாட்டுச்சாணம் பாக்டீரியாவை எதிர்க்கும் தன்மை கொண்டது. வீட்டு வாசல் முன் மாட்டுச்சாணக் கரைசல் தினமும் தெளிப்பதால் தேவையில்லாத நுண்ணுயிரிகள், கிருமிகள் வெளியே இருந்து வீட்டிற்குள் வராமல் தடுப்பதற்காகதான்.
டாக்டர் வெள்ளை நிற கோர்ட் அணிவதற்கான காரணம் என்ன?
வெள்ளை நிறம் சுலபமாக கறையாகி விடும். அதன்மூலமாக கிருமிகள் பரவும். வேறு நிறத்தில் உடை அணிந்தால் கறை சரியாக தெரியாமல், அந்த உடையை சரியாக துவைக்காமல் உபயோகப்படுத்த வாய்ப்புகள் உண்டு. ஆகவே வெள்ளை நிற கோர்ட்டை அணிகிறார்கள்.
வக்கீல் கருப்பு நிற கோர்ட் அணிவதற்கான காரணம் என்ன?
கருப்பு அதிகாரத்தையும், பலத்தையும், நேர்மையையும் வெளிகாட்டும் சின்னமாக விளங்குகிறது. உண்மையை வெளிச்சம் போட்டுக்காட்ட இம்மூன்றும் அடிப்படையாக இருக்கிறது. ஆகவே வக்கீல்கள் அனைவரும் கருப்பு நிற கோர்ட்டை அணிகிறார்கள்.
கைகளை குலுக்கும் பழக்கம் வந்ததன் காரணம் என்ன?
முதலில் கைகுலுக்கும் பழக்கம் வெளிநாட்டில்தான் கடைபிடித்தார்கள். அதாவது, போர்க்காலத்தில் மன்னர்கள், மந்திரிகள், சிப்பாய்கள் எதிர் அணிகளிடம் கை கொடுப்பார்கள்.
ஏனெனில் அவர்கள் ஆயுதம் ஏதாவது வைத்திருக்கிறார்களா என்பதை தெரிந்து கொள்ளதான். பிறகு, கைகளை குலுக்குவதற்கான காரணம் அக்காலத்தில் போருக்கு செல்லும்போது முழு உடை அணிந்து இருப்பதால் கை நுனிகளில் ஏதாவது ஆயுதம் இருந்தால் கூட கை குலுக்குவதால் கீழே விழுந்துவிடும் என்பதால்தான். மேலும் இந்த பழக்கம் மருவி நமது நாட்டிலும் வழக்கத்திற்கு வந்தது.