இயக்குனரும் நடிகருமான மிஷ்கின் இயக்கத்தில் தயாராகி வரும் பிசாசு 2 வில் இரண்டு நடிகைகள் கதையின் நாயகிகளாக நடித்து வருகிறார்கள்.
இதில் துணிச்சலான வேடத்தில் நடிகை ஆண்ட்ரியா நடித்திருக்க இவருடன் மலையாள நடிகையும் ட்ரிபிள்ஸ் மற்றும் நவம்பர் ஸ்டோரி ஆகிய வலைத்தள தொடரில் நடித்து பிரபலமான நடிகையுமான நமீதா கிருஷ்ணமூர்த்தி நாயகியாக நடித்திருக்கிறார்.
தமிழ் திரையுலகில் ஏற்கனவே நமீதா என்றும் நமீதா பிரமோத் என்றும் நடிகைகள் இருப்பதால் இவர் தன்னை நமீதா கிருஷ்ணமூர்த்தி என்று தான் குறிப்பிட வேண்டும் என இவர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
பிசாசு 2 பெண் வயலின் இசைக் கலைஞர் ஒருவரின் வாழ்க்கையில் குறுக்கிடும் அமானுஷ்ய அனுபவங்களை சுவாரசியமான சம்பவங்களுடன் தயாராகும் திரைக்கதை என படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.