Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
கல்வி

இணையவழிக் கல்வியின் சாதக பாதகங்கள் ஒர் ஆய்வு..!

  • June 4, 2021
  • 616 views
Total
28
Shares
28
0
0
Coronavirus: LIVE classes, blogs, videos; how to study online during  lockdown | Education News,The Indian Express
image source

Online வகுப்புகள் எனப்படும் புதிய Digital கல்வி முறை தற்போது covid-19 ஆரம்பம் முதல் தற்போது வரை அதிகமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. இதனால் ஏற்படும் சாதகங்கள் மற்றும் பாதகங்கள் என்ன? உளவியல் ரீதியான சிக்கல்கள் என்ன?, அதை நாம் எவ்வாறு எதிர்கொள்வது என்பதைப் பற்றிப் பார்ப்போம் .

இதைப்பற்றி நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் இதனை அதாவது பாடசாலைக்கு சென்று மட்டுமே படித்து கொண்டிருந்த மாணவர்களுக்கு, இது எப்படி இருக்கிறது? அவர்களுக்கு பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு எப்படி இருக்கிறது? மற்றும் இதை பெற்றோர்கள் எப்படி பார்க்கிறார்கள்? என்ற பல்வேறு மாறுபட்ட கண்ணோட்டங்களில் இதை நாம் அணுக வேண்டி உள்ளது. நமக்கு இந்த Online வகுப்புகள் புதுமையானதாகவும், வித்தியாசமான அனுபவமாக இருப்பதால் இதில் பல சிக்கல்கள் ஏற்படுகிறது.

E-Commerce and Education in Nowadays | LaptrinhX / News
image source

முதலில் நன்மைகள் என்று எடுத்து கொண்டால், யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் இந்த digital கல்வி முறையை பயில முடியும். உதாரணமாக. வெளிநாடுகளுக்கு சென்று படிக்க வேண்டும் என்ற நிலை மாறி தற்போது அவரவர் இருக்கும் இடத்தில் இருந்து பல வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் Online வகுப்புகள், பயிற்சிகளில் பங்கு பெற முடியும். மற்றும் பாடசாலைப்பாடங்களுடன் இணைந்து பலருக்கும் விருப்பமான பல்வேறு துறைகள் பற்றி கற்றுக்கொள்வதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.

இணையதள வகுப்புகள் ஒருசில செயல்முறைகளினை எளிமையாக்குகிறது. அதாவது ஒரு மாணவர் பாடசாலை சென்று படிக்க வேண்டும் என்று எடுத்துக்கொண்டால் அவனுக்கு ஆகும் நேரம், பொருள்செலவை விட online வகுப்புகளுக்கு செலவிடும் நேரம், பொருள் செலவு குறைவாகவே உள்ளது எனலாம் .

பாடசாலை சென்று தான் கல்வி கற்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்து விடுபட்டு பல வாய்ப்புகளினை இணையவழிக் கல்வி அமைத்துத்தருகிறது. உதாரணமாக, தற்போதுள்ள இயற்கை பேரிடர் போன்ற காலகட்டங்களில் கல்வி என்பது தடைப்படாமல் இருப்பதற்கு வழி வகை செய்கிறது.

Zoom is Now Free for K-12 Schools! What You Need To Know
image source

மாணவர்களுக்கு பாடசாலைப்படிப்பினை தாண்டி அவர்களுக்குப் பிடித்தமான பல செயல்களை செய்வதற்கு நேரமும், வாய்ப்பும் கிடைக்கிறது. சில மாணவர்களுக்கு பாடசாலை செல்வது என்பது பயமாகவும், தயக்கமாகவும் இருப்பது போன்ற உளவியல் பாதிப்புகள் இருப்பதைக்காணலாம்.( உ+ம்).(யுத்த பாதிப்பு மற்றும் தாய் தந்தை இழந்த குழந்தைகள், சமூகத்தில் வேறு வன்புணர்வுகளால் பாதிக்கப்பட்ட அவர்களுக்கு) இதுபோன்ற கல்வி முறை சௌகரியமாக இருக்கக்கூடும்.

தற்போது அனைத்தும் இணையதள மூலம் செயல்பட தொடங்கி உள்ளது என்பதால் இந்த இணையவழி தொழில்நுட்பம் பற்றிய திறன் அனுபவத்தை வளர்த்துக்கொள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இது உதவுகிறது.

இந்த Online கல்வி முறை என்பது நமக்கு தற்போது தான் அறிமுகமாகி உள்ளது என்பதாலும் இதன் பயன்களை இன்னும் முழுமையாக அனுமதிக்காத நிலையில் இதன் பாதகங்கள் சற்று அதிகமாகவே தற்போது காணப்படுகின்றது அதற்கு முக்கிய காரணம் இணையவழி வகுப்புகள் அனைத்து மாணவர்களையும் சென்றடைவதில் சில தடைகள், மற்றும் சிக்கல்கள் உள்ளமை முக்கிய காரணமாக உள்ளது .

இது தொடர்பில் பல பெற்றோர்களுடன் மற்றும் ஆசிரியர்களுடன் அதிபர்களுடன் உளநல வழிகாட்டிகளுடன் கலந்துரையாடினேன் .அவர்கள் கூறியவற்றில் இருந்து சில.

Google is making your Meet and Zoom calls run better on Chromebooks -  TechRepublic
image source

பாடசாலை சென்று கல்வி கற்கும்போது தான் மாணவர்களுக்கு சுயஒழுக்கம், நேர முகாமைத்துவம், சமூகத்திறன், போன்றவை கிடைக்கும் என்பது அவர்கள் வாதமாக உள்ளது.இந்தக் கருத்தையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டியது முக்கியமான ஒன்றுதான் ஏனெனில் பாடசாலை சென்று கல்வி கற்கும்போது உடன் படிக்கும் மாணவர்களின் நட்புறவு,விடையமாற்று கலந்துரையாடல், செயற்பாட்டுத்திறன் ஒப்புநோக்கு, போன்றவை அவர்களின் சமூகத்திறனை வளர்க்க உதவுகின்றது, அதேபோல கவனச்சிதறல், இடையூறுகள் என்பது online வகுப்புகளினை ஒப்பிடும்போது பாடசாலை வகுப்புகளில் இவை மிகக்குறைவு, மற்றும் இணைய வழிக்கல்வி என்பது அனைத்து மாணவர்களுக்கும் புரியும் வகையில் உள்ளதா? அவர்களின் சந்தேகங்கள் தீர்க்கப்படுகின்றதா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

Online Classes & Camps | Kidwise
image source

இதே பாடசாலை வகுப்பு என்றால், மாணவர்களின் புரிதலுக்கு ஏற்ற வகையில் ஆசிரியர்கள் பாடங்களினை திரும்ப நடத்துவதற்கும், சந்தேகங்களினை ஆசிரியர் மற்றும் உடன் படிக்கும் நண்பர்களிடம் கேட்டு அறிந்து கொள்ளுவதற்கும் நல்ல வாய்ப்பினை வழங்குகிறது.மேலும் இணையத்தளத்தினை அதிக நேரம் பயன்படுத்துவதால் குறிப்பாக ஒரு வீட்டில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பிள்ளைகள் இருக்கும் இடத்தில் அவர்களுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும், இணைய Data GB என்பவற்றின் செலவுகள் அதி உச்சமாக இருக்கும், இதனை வசதி குறைந்த குழந்தைகளினால் சமாளிக்க முடியாமல் உள்ளது.

National Governors Association, Teachers Unions to Congress: Finish Work on  NCLB | US News
image source

மேலும் சில சமயம் சிறுவர்கள், ஆரம்ப பருவ மாணவர்கள் தவறான வழிகளில் பயன்படுத்துவதற்கும், இணையத்தளத்திற்கு அடிமையாவதற்கும் இது ஒரு காரணமாக உள்ளது. எனவே இதை கண்காணிக்கும் பொறுப்பு பெற்றோரிடம் தான் உள்ளது. ஆனால் சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை கண்காணிக்கிறேன் என்ற பெயரில் அவர்களுடன் அருகிலேயே அமர்ந்து Online வகுப்புகளிலும் சிலர் பங்கேற்கின்றனர். இது குழந்தைகளுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையூறாக இருக்கும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். Online வகுப்புகள் நடக்கும் போது போதுமான சுதந்திரத்தை கொடுப்பது சௌகரியமாக இருக்கும்.

மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இந்த Online வகுப்புக்கான முறையான திட்டமிடுதல், அட்டவணையிடல் போன்றவற்றில் குறைபாடுகள் காணப்படுகிறது.மற்றும் சிறுவர்களுக்கும், சில ஆசிரியர் மற்றும் பெற்றோர்களுக்கும் இந்த இணையவழி தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் அனுபவமின்மையும், கையாள சிக்கல்களும் உள்ளது. இது அனைவருக்கும் சில சமயங்களில் மன உளைச்சலை ஏற்படுத்தலாம்.ஏற்படுத்தியும் உள்ளது ( சில தாழ்வு மனப்பான்மையை கொண்டு வர கூடும்)

இந்த Digital கல்வி முறை என்பது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சில பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. அதாவது அதிக நேரம் கணினி மற்றும் கைபேசி திரைகளை பார்த்துக்கொண்டே இருப்பதால் கண் குறைபாடுகளும், ஒரே இடத்தில் அதிக நேரம் அமர்ந்து இருப்பதால் குறைந்த உடல் செயல்பாடுகள் காணப்படுகிறது(law activity). அதேபோல் உளவியல் ரீதியாக அதிக நேரம், கணினி மற்றும் கைபேசி பயன்படுத்துவதால் குழந்தைகளின் மூளை வளர்ச்சி திறன் பாதிக்கும் அபாயம் உள்ளது. இதன் மூலம் அவர்களுக்கு கவனச்சிதறல், தூக்கமின்மை, படைப்பாற்றல் குறைவு, கற்பனைத்திறன் குறைவு மற்றும் பதட்டம், பயம், மனஅழுத்தம் போன்ற பாதிப்புகள் ஏற்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது.

மாணவர்களின் கிரகிக்கும் திறன் மற்றும் கற்றல் திறன் போன்றவற்றில் இந்த இணையதள கல்வி பாதிப்புகளையும், மாற்றங்களையும் ஏற்படுத்துகிறது. அதாவது மாணவர்களுக்கு Active Listening என்பது குறைந்து Passive Listening என்ற நிலைக்கு செல்கின்றனர். இது அவர்கள் கற்றல் திறனுக்கு தடையாக உள்ளது.நம் மொழியில் சொல்வதானால் பிள்ளைகள் மனஅழுத்த புத்தக பூச்சிகள் போல ஆகி விடுகிறார்கள்.

அத்துடன் பாடசாலை, கல்வி, தேர்வு மீது பயம், பதட்டம் உள்ள மாணவர்களுக்கு இந்த புதிய கல்வி முறையானது அவர்களின் அச்சத்தை மேலும் அதிகரிக்கிறது. இதனால் இவர்களுடைய படிப்பின் மீதுள்ள ஆர்வம் குறைதல், தன்னம்பிக்கையின்மை, போன்றவை பாதிக்கப்படுகிறது. வெகு நாட்களாக சமூக பங்களிப்பு இல்லாமல் ஒரே அறையில் அமர்ந்திருப்பது நண்பர்கள், ஆசிரியர்கள் ஒருவரை ஒருவர் நேரடியாக சந்தித்து பேசுவதற்கான வாய்ப்பு இல்லாததால் தனிமை உணர்வு, எரிச்சல் உணர்வு, சுய உந்துதல் நாளடைவில் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

இதை எவ்வாறு திறன்பட எதிர்கொள்வது?

Students share their opinions on the return to distance learning – Bronco  Round Up
image source

கல்வி என்பது ஒரு மனிதனின் அறிவுத்திறனை வளர்க்க உதவுவது. இதை நாம் பாடசாலைகல்வி, பாடப்புத்தகங்கள் மூலமாக மட்டுமே கிடைத்து விடாது. எனவே நாம் அறிவை விரிவு செய்வதற்கு பல முயற்சிகளில் ஈடுபட வேண்டும். இதற்காக நாம் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். அதாவது பாடசாலை புத்தகங்களினை தவிர ஏனைய புத்தகங்கள் படிப்பதன் மூலமாகவும், தானாக கற்றுக்கொள்வதன் மூலமாகவும் நம் அறிவினை வளர்த்துக் கொள்ள முடியும். இதற்கு பெற்றோர்களும், ஆசிரியர்களும் மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

பெற்றோர்கள் Online வகுப்புகளினை மட்டும் தன் பிள்ளைகளை கவனம் செலுத்த வேண்டும் என்பதையும் தாண்டி வீட்டிலுள்ள பல வேலைகளை செய்வதற்கும் பழக்கப்படுத்தப்பட வேண்டும்.அன்றாட வீட்டில் உள்ள சராசரி வேலைகள் எதுவாயினும்.

தொடர்ந்து Online வகுப்புகள் கவனிப்பதால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க ஒவ்வொரு முப்பது நிமிடத்திற்கும் ஒருமுறை 5நிமிட இடைவேளை எடுப்பது நல்லது. இந்த Online வகுப்புகள் பற்றிய புரிதல் குறைவாக இருக்கும் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் அதைப்பற்றிய புரிதலை ஆசிரியர்கள் ஏற்படுத்த வேண்டும். பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு இடையில் தெளிவான தகவல் பரிமாற்ற திறனை அதிகரித்து கொள்ள வேண்டும்.

இதன்மூலம் மாணவர்களை கண்காணிப்பதற்கும், வழிநடத்துவதற்கும் உதவியாக இருக்கும்.மாணவர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் எளிமையாக புரியும் வகையிலும் வகுப்புகள் அமைய வேண்டும். இது தொடக்க கல்வி பயிலும் மாணவர்களுக்கு, இந்த வகுப்பின் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரிக்கும்.இது முன்னர் சொன்னது போல் புதுமையான அனுபவம் என்பதால் மாணவர்களுக்கு இதன்மீது அச்சமும், ஆர்வமின்மையும் ஏற்படுவதற்கு சாத்திய கூறுகள் உள்ளது. அதைக் கண்டறிந்து அதன் பங்களிப்பை பெற வேண்டும்.

இதற்கு இந்த வகுப்புகள் ஒருவரின் தகவல் பரிமாற்றமாக இருப்பதை விட அவ்வப்போது கலந்துரையாடல்கள் போல கொண்டு செல்லலாம். இதன் மூலம் மாணவர்களிடையே ஏற்படும் சந்தேகத்தினை போக்குவதற்கும், அவர்களின் பங்களிப்பு எவ்வாறு உள்ளது என்பதை கண்டறிந்து கொள்ள முடியும்.

இந்த Online வகுப்புகளை அதன் பின்னர் மீள்தொகுப்பு Video வடிவில் மாணவர்களுக்கு வழங்குவதன் மூலம் புரியாதவற்றினை திரும்ப பார்த்து புரிந்துகொள்ளவும், கிடைக்கும் நேரத்தில் பார்ப்பதற்கும் உதவும்.இவற்றை இயலுமானவரை நாம் கடந்து செல்ல வேண்டிய அதிநவீன காலகட்டத்தில் இருக்கிறோம்.

அர்ப்பணிப்புடன் செயற்படும் ஆசிரியர்கள் பிள்ளைகளை மகிழ்விக்கும் வகையில் கற்பிப்பதுடன் அதிபர்களும் syllabus என்று அன்றி நாளாந்தம் பிள்ளைகள் மனநிலை அறிந்து சிறிது சிறிதாக கற்பிக்க தூண்ட வேண்டும்.
இந்த இடத்தில் அப்துல் கலாம் கூறியவிடயம் ஒன்று ஞாபகம் வருகிறது விதைகளை விதைக்கும் போது, வழி தவறி விழுந்த விதையின் மீது படும் மழைத்துளி போல,நாம் ஒவ்வொருவரும் கருணையுள்ளவர்களாக இருந்து அவர்களுக்கு ஏற்ற வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

மாணவர்களின் தேவைகளை அறிந்து ஆசான்,பெற்றோர் என்ற நிலையிலிருந்து விலகி சகபாடி போல சகல விடயங்களிலும் கைகோர்த்து அவர்களை மன அழுத்தங்களிலிருந்து மீட்டெடுத்து எதிர்காலத்திற்கு ஏற்றவாறான சிறந்த பிரஜைகளை உருவாக்குவதற்காக உழைக்கத்தவறி விடக்கூடாது.”

நன்றிகள் -பாரதிதாசன் சண்முகராஜா-

உங்கள் குழந்தைகள் சுதந்திரமாகவும் தன்னம்பிக்கையுடனும் மாற 5 குறிப்புகள்

இது போன்ற உதவிகரமான கட்டுரைகளை எமது சமூகவியல் மற்றும் மனித உறவுகள் பகுதிகளில் காணலாம்.

wall image

Post Views: 616
Total
28
Shares
Share 28
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
திருமணத்தில்

திருமணத்தில் மூன்று முடிச்சு ஆசீர்வாதம் ஆரத்தி எதற்கு?

  • June 4, 2021
View Post
Next Article
நீங்கள் பிறந்த மாதம் உங்களைப் பற்றி என்ன சொல்கிறது ? - 1

நீங்கள் பிறந்த மாதம் உங்களைப் பற்றி என்ன சொல்கிறது ? – 1

  • June 5, 2021
View Post
You May Also Like
இயற்கை
View Post

இயற்கை அழகுசாதனப் பொருட்களை அளவுக்கு மீறி பயன்படுத்தினால் என்ன ஆகும்?

இயல்பாய்
View Post

இயல்பாய் மலரட்டும்..!

பால்குடம்
View Post

பால்குடம் எதற்காக எடுக்கப்படுகிறது? அதன் நன்மைகள் என்ன?

இதோ
View Post

இதோ எளிய மாற்றங்களைச் செய்து உங்களது சிறந்த தோற்றத்தைப் பெறலாம்..!

ஐயப்ப
View Post

ஐயப்பனுக்கு நெய் கொண்டு செல்வது ஏன்?

ஐயப்பனின்
View Post

ஐயப்பனின் பதினெட்டு படி உணர்த்தும் குணங்கள்..!

துணையை விட்டு தனியாக உறங்குவது உங்கள் உறவைப் பலப்படுத்தும் 5 வழிகள்
View Post

துணையை விட்டு தனியாக உறங்குவது உங்கள் உறவைப் பலப்படுத்தும் 5 வழிகள்

சபரி
View Post

சபரிமலையில் நடக்கும் இந்த விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.