இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!! இணையத்தில் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்.
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உண்டாகி இருக்கிறது, புயல் வர வாய்ப்பிருக்கிறது, புயல் அதி தீவிரமாக மாறியுள்ளது என்று நாம் அடிக்கடி செய்திகளில் கேட்பதும், படிப்பதும் வழக்கம்.
புயல், உலகின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் பெயர்கள் மட்டுமே மாறுபடுகிறதே தவிர அனைத்துமே ஒரே விஷயத்தைத்தான் குறிப்பிடுகிறது.
புயல்
புயல் (Storm) என்பது ஒரு பருப்பொருளின் அமைதி குலைந்த நிலையை, குறிப்பாக அப்பொருளின் மேற்பரப்பு பாதிக்கப்பட்ட நிலையைக் குறிக்கிறது. அதிலும் வலிமையாக காற்றின் ஆற்றலைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது.
புயலின் நிலைகள்
ஒரு புயலானது தோன்றுவது முதல் மறைவது வரை மூன்று நிலைகளில் நடக்கிறது. அவை தோன்றும் நிலை, வலுவடையும் நிலை மற்றும் வலுவிழந்த நிலை. இந்த அனைத்து நிலைகளும் ஒன்றின் தொடர்ச்சியாக மற்றொன்று நடைபெறுகிறது.
புயல் எவ்வாறு உருவாகிறது?
கடற்பரப்பில் 26°C அதிகமான வெப்பநிலை தொடர்ந்து நீடிக்கும் போது காற்று வேகமாக வெப்பமடைகிறது. இந்த காற்றானது மேல்நோக்கி செல்வதால் காற்றின் அழுத்தம் குறைந்து வெற்றிடம் உண்டாகிறது.
இந்நிலையில் காற்றின் அழுத்தம் அதிகம் உள்ள பகுதியிலிருந்து வெற்றிடத்தை நோக்கி காற்று வீச ஆரம்பிக்கிறது. மேலே செல்லும் வெப்பக்காற்று குளிர்வடைந்து வானில் தாழ்வு நிலையில் தங்குகிறது.
இந்த தாழ்வு நிலையில் தங்குவதால் காற்றின் அழுத்தம் அதிகரிக்கிறது. இவை தான் காற்றழுத்த தாழ்வு நிலையாகும். பூமியின் சுழற்சி காரணமாகக் காற்று அலைக்கழிக்கப்பட்டு அதன் வேகம் அதிகரித்து புயலாக உருவாகிறது.
11 விதமான புயல் கூண்டுகள் எதற்கு ஏற்றப்படுகிறது?
ஒன்றாம் எண் கூண்டு : புயல் உருவாகக்கூடிய வானிலைப் பகுதியாகும்.
இரண்டாம் எண் கூண்டு : புயல் உருவாகியுள்ளது என்று எச்சரிப்பதற்கு.
மூன்றாம் எண் கூண்டு : திடீர் காற்றோடு மழை பொழியக்கூடிய வானிலையால் துறைமுகம் அச்சுறுத்தப்படுவதற்கு.
நான்காம் எண் கூண்டு : துறைமுகம் புயல் அச்சுறுத்தலுக்கு ஆளாகலாம் என்பது உள்ளூர் மக்களுக்கான எச்சரிக்கை.
ஐந்தாவது எண் கூண்டு : துறைமுகத்தின் இடது பக்கமாகப் புயல் கடப்பதால் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படலாம் என்பதற்கான எச்சரிக்கை.
ஆறாவது எண் கூண்டு : துறைமுகத்தில் புயல் வலது பக்கமாகக் கரையைக் கடந்து செல்லும் நேரத்தில் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படலாம் என்பதற்கான எச்சரிக்கை.
ஏழாவது எண் கூண்டு : துறைமுகம் வழியாகவோ அல்லது அருகிலோ புயல் கரையைக் கடக்கலாம் என்பதற்கான எச்சரிக்கை.
எட்டாம் எண் கூண்டு : புயலானது தீவிர புயலாகவோ அல்லது அதி தீவிர புயலாகவோ உருவெடுத்துள்ளது. மேலும் துறைமுகத்தின் இடது பக்கமாகப் புயல் கரையைக் கடந்து செல்லும் நேரத்தில் கடும் புயலால் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும்.
ஒன்பதாம் எண் கூண்டு : புயலானது தீவிர புயலாகவோ அல்லது அதி தீவிர புயலாகவோ உருவெடுத்துள்ளது என்று பொருள். துறைமுகத்தைப் புயல் வலது பக்கமாகக் கரையைக் கடந்து செல்லும் நேரத்தில் கடும் புயலால் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும்.
பத்தாம் எண் கூண்டு : துறைமுகம் அல்லது அதன் அருகே கடந்து செல்லும் புயலால், பெரிய அபாயம் ஏற்பட்டிருப்பதாக அர்த்தம்.
பதினொன்றாம் எண் கூண்டு : மிகவும் உச்சபட்சமான புயல் உண்டாகும்.
வொர்க் ப்ரம் ஹோம் இப்படி முயற்சித்து பாருங்கள் சலிப்பே வராது