சூப்பர்ஹிட் தமிழ் படமான கில்லி படத்தில் விஜய்யின் நண்பராக நடித்தார்.
கோவிட் -19 காரணத்தால் தமிழ் நடிகர் மாறன் இன்று புதன்கிழமை காலமானார். அவருக்கு வயது 48. சூப்பர் ஹிட் படமான கில்லியில் விஜய்யின் நண்பராக நடித்த பின் மாறன் குருவி,பாஸ் என்கிற பாஸ்கரன் , வேட்டைக்காரன்,தலை நகரம், ஏழு மலை போன்ற படங்களில் நடித்ததிலும் அவர் பிரபலமானார். நடிகர் மாறன் சமீபத்தில் பா ரஞ்சித் இயக்கத்தில் சர்பட்டா பரம்பரை என்ற படத்தில் நடித்தார்.
2004ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான ‘கில்லி’ படத்தில் ஆதிவாசி என்ற கதாபாத்திரத்தில் நடிகர் விஜய்யின் நண்பராக இவரது கதாப்பாத்திரம் மிகவும் புகழ்பெற்றது. அதன் பிறகு, டிஷ்யூம், கே.ஜி.எஃப் உள்ளிட்ட பல படங்களில் துணை நடிகராகவும், காமெடி கதாப்பாத்திரங்களிலும் நடித்துள்ளார். இதுமட்டுமில்லாமல், கானா பாடல்கள் பாடுவது, மேடை கச்சேரிகள் என இதிலும் கவனம் செலுத்தி வந்தார் மாறன்.
செங்கல்பட்டு நத்தம் பகுதியில் வசித்து வந்த இவர் கொரோனா தொற்று காரணமாக அங்கிருக்கும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில்தான் நடிகர் மாறன் உயிரிழந்துள்ள சம்பவம் திரைத்துறையினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாறனின் மரணத்துக்காக அவரது குடும்பம், ரசிகர்கள் மற்றும் நலன் விரும்பிகளுக்கு எமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.