இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!! இணையத்தில் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்.
எந்தெந்த ராசிக்காரர்கள் யாரை வழிபட வேண்டும்?
மேஷ ராசி :
செவ்வாய்க்கிழமைதோறும் வராஹி அம்மனை வெள்ளைநிற பூக்களினால் பூஜை செய்து வழிபாடு செய்துவர நீண்ட நாட்களாக மனதை உறுத்திக் கொண்டிருக்கக்கூடிய விஷயங்களுக்கு தீர்வுகள் கிடைக்கப் பெறுவீர்கள்.
ரிஷப ராசி :
புதன்கிழமைதோறும் துளசியை கொண்டு பெருமாளை வழிபாடு செய்துவர குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமையும், சிந்தனையும், தெளிவும் கிடைக்கப் பெறுவீர்கள்.
மிதுன ராசி :
புதன்கிழமைதோறும் துளசி இலைகளினால் சயனகோலத்தில் இருக்கக்கூடிய பெருமாளை வழிபாடு செய்துவர முயற்சி மற்றும் உத்தியோகம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கி சுபிட்சம் ஏற்படும்.
கடக ராசி :
வியாழக்கிழமைதோறும் சிவப்பு நிறப்பூக்கள் மூலம் ராகவேந்திரரை வணங்கி வர எண்ணங்களில் தெளிவும், புத்துணர்ச்சியும் கிடைக்கப் பெறுவீர்கள்.
சிம்ம ராசி :
சனிக்கிழமைதோறும் நல்லெண்ணெயில் தீபமேற்றி ஆஞ்சநேயரை வழிபாடு செய்துவர கணவன்-மனைவிக்கு இடையே இருக்கக்கூடிய கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும்.
கன்னி ராசி :
வெள்ளிக்கிழமைதோறும் வெள்ளைநிற பூக்களின் மூலம் மகாலட்சுமியை வழிபாடு செய்துவர எதிர்பார்த்திருந்த உதவிகளும், அதிர்ஷ்டங்களும் கிடைக்கப் பெறுவீர்கள்.
துலாம் ராசி :
செவ்வாய்க்கிழமைதோறும் செவ்வரளி பூக்களினால் முருகப்பெருமானை வழிபாடு செய்துவர சுபகாரியம் தொடர்பான செயல்களில் இருந்துவந்த தடை, தாமதங்கள் நீங்கும்.
விருச்சிக ராசி :
செவ்வாய்க்கிழமைதோறும் நரசிம்மரை வழிபாடு செய்துவர நெருக்கடியான சூழ்நிலைகள் மறைந்து மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும்.
தனுசு ராசி :
வெள்ளிக்கிழமைதோறும் வெள்ளைநிற தாமரை பூக்களினால் மகாலட்சுமியை வழிபாடு செய்துவர உத்தியோகம் தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்பும், லாபமும் கிடைக்கப் பெறுவீர்கள்.
மகர ராசி :
சனிக்கிழமைதோறும் நீலநிற பூக்களினால் சனீஸ்வரரை வழிபாடு செய்துவர எண்ணங்களில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும்.
கும்ப ராசி :
சனிக்கிழமைதோறும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி ஆஞ்சநேயரை வழிபாடு செய்துவர எண்ணங்களில் இருந்துவந்த குழப்பங்கள் யாவும் நீங்கி தெளிவு பிறக்கும்.
மீன ராசி :
செவ்வாய்க்கிழமைதோறும் வராஹி அம்மனை வழிபாடு செய்துவர செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் நீங்கி எதிர்பாராத உதவிகளும், முன்னேற்றமான வாய்ப்புகளும் கிடைக்கப் பெறுவீர்கள்.
பிலவ வருடத்தில் எந்தெந்த ராசிக்காரர்கள் எவ்விதம் செயல்பட வேண்டும்?
எமது தமிழ்க்கலாச்சாரம் பகுதிக்கு செல்வதன் மூலம் இது போன்ற இன்னும் பல சுவாரசிய கட்டுரைகளை வாசியுங்கள்..