சிந்திக்கக் கூடிய கதைகள், தருணங்கள், தகவல்கள், கவிதைகள் மற்றும் வித்தியாசமான படைப்புக்களுடன் சனிக்கிழமைகளில் உங்களை சந்திக்கிறோம். இந்த வாரம் நாம் மகளிர் தினத்துக்காக சிறப்பான கவிதைகளை வழங்குகிறோம்.
மகளிர் தின கவிதைகள்
கவிதை 1 : உங்கள் வாழ்க்கை உங்கள் உரிமை. நீங்கள் யாரென்பதும் என்ன செய்ய வேண்டுமென்பதும் உங்களால் முடிவெடுக்கப்பட வேண்டுமே தவிர அந்தத் தருணங்கள் உங்களை நடத்தக் கூடாது.
கவிதை 2 : சமூகம் ஆயிரம் கதைகள் சொல்லட்டும். உங்கள் ஆடைகள், செயல்கள், துறைகள், அலங்காரங்கள் எல்லாம் அவர்களுக்கு பேசுபொருளாக இருக்கலாம். ஆனால், நீங்கள் யாரென்பது உங்களுக்குத்தான் தெரியும்.
கவிதை 3 : வாழ்க்கை எளிதல்ல. பெண்கள் மலர்களாகவோ முட்களவாகவோ இருக்கத் தேவையில்லை. உங்களால் முடிந்ததை செய்யுங்கள். தோல்விகளை ஏற்றுக்கொண்டு தொடர்ந்து பயணியுங்கள். உங்கள் புன்னகையே உங்களுக்குத் துணை.
கவிதை 4 : சிந்தனைகளை சிறகடிக்க விட வேண்டியது உண்மை. ஆனால் அவற்றோடு இழுப்பட்டுச் செல்ல வேண்டாம். உங்கள் எண்ணங்கள் உங்கள் கையிலிருக்க வேண்டும், நீங்க அவற்றின் கையிலிருக்கக் கூடாது.
கவிதை 5 : ஒவ்வொரு ஆணுக்கும், முடிவிடுக்கும் உரிமை ஒவ்வொருவருக்கும் தனிப்பட்டது. அதனை உங்கள் கைகளுக்குள் வைப்பதோ அல்லது, முடிவுகளுக்கு கருத்து சொல்வதோ நாம் செய்யாமல் இருப்பது நன்மை.
கவிதைகள் : நேத்திரக்கைதி.
இது போன்ற சிந்திக்க வைக்கும் கவிதைகளை எமது சமூகவியல் மற்றும் கதைகள் பகுதிகளில் காணலாம்.
எம்மை எமது பேஸ்புக் பக்கத்தில் பின்தொடரவும்