இன்ஸ்டாகிராமில் மிகப்பெரிய செல்வம் லைக்குகள். உங்களுக்கும் அதே போல உங்கள் புகைப்படங்கள் அதிக வாக்குகளை பெற வேண்டும் என்ற ஆசை உள்ளதா ?
இன்றைய நாட்களில் இன்ஸ்டாகிராம் ஆனது ஒவ்வொரு தனிநபருக்கும் மிக முக்கியமான விருப்புக்குரிய சமூக வலைத்தளமாக மாறியிருக்கிறது. பிரபல்யம் பெற்ற நடிகர்களும் நடிகைகளும் கூட தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தினை மெருகூட்டுவதற்கு தினமும் பதிவுகளை பதிவிட்டு லைக் வேட்டை நடத்துகிறார்கள்.
நீங்கள் அதிக லைக்குகளை பெற்றால் உங்களுடைய பதிவானது தகவல் உள்ளிட்ட மேல்நிலைக்கு வரும். இந்தப் பக்கத்தின் அல்கோரிதம் ஆனது ஒருவர் எந்த விடயத்தில் விருப்பை காட்டுகிறாரோ அதனை அதிகமாக பரிந்துரைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருப்பதனால் அதிக லைக்குகளை பெறுவது என்பது உங்களுடைய எதிர்கால பதிவுகளை சிறப்புடையதாக்க உதவும்.
அதுமட்டுமில்லாமல் உங்களுடைய பதிவுகள் நன்றாக இருந்தால் உங்களுடைய ஒட்டுமொத்த கணக்கையும் கூட தேடி வந்து பார்ப்பதற்கு தயாராக மக்கள் இருப்பார்கள். ஒழுங்காகத் திட்டமிட்டு நடைமுறைப்படுத்தினால் உங்களுடைய இன்ஸ்டாகிராம் லைக்குகளே உங்களை அந்த தளத்தில் ஒரு ஆதிக்கவாதி ஆக மாற்றும்.
இன்ஸ்டாகிராமில் அதிக லைக் பெற 6 வழிகள்
செயற்படக்கூடிய புகைப்படங்களை பகிருங்கள்
உங்களுடைய இன்ஸ்டாகிராம் வியூகத்தில் மிகவும் முக்கியமான காரணி புகைப்படங்கள் ஆகவே அதில் இருந்து ஆரம்பிப்போம்.
உங்களுடைய புகைப்படங்கள் அதிக விருப்பங்களை பெறுவதற்கு எந்த மாதிரியான புகைப்படங்களை மக்கள் அதிகம் விரும்புகிறார்கள் என்பது தொடர்பாக கவனம் செலுத்துங்கள். உங்களுடைய புகைப்படங்களில் அதிக விருதுகளை பெற்ற புகைப்படம் எது என சற்று ஆராய்ந்து பாருங்கள்.
உங்களுடைய பக்கமானது புதிதானது ஆகவோ அல்லது அதிகமாக பதிவுகள் இல்லாமலோ இருந்தால் நீங்கள் செய்ய வேண்டியது உங்களுடைய போட்டியாளர் அல்லது நண்பர்களுடைய பக்கங்களை பார்வையிட்டு எவ்வாறான புகைப்படங்களுக்கு அதிகம் விருப்பு வருகின்றது என்பது தொடர்பாக கண்டறிந்து அதுபோன்ற புகைப்படங்களை உருவாக்க வேண்டும்.
இன்ஸ்டாகிராமில் பொதுவாக இரண்டு வகையான படப்பதிவுகள் உங்களுடைய முக்கிய தகவல் உள்ளீட்டில் இருக்கலாம். அவை புகைப்படங்கள் மற்றும் வடிவமைக்கப்பட்ட படங்கள்.
நீங்கள் ஒரு புகைப்படத்தை பகிர போகின்றீர்கள் என்றால் அதற்கு ஒரு பில்டரை பயன்படுத்தினால் அது வெளியிட தயாராகி விடும். அதிகளவு இடைத்தொடர்பாடலை மேற்கொள்வதற்கு நீங்கள் Mayfair பில்டர் இனை பயன்படுத்த வேண்டும் அல்லது எதையுமே பயன்படுத்தாமல் போடுவது நல்லது என Track Maven எனப்படும் நிறுவனத்தின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆனால் நீங்கள் முன்னரே வடிவமைக்கப்பட்ட ஒரு படத்தை பதிவிட போகின்றீர்களாயின் நீங்கள் அதற்கு மேலாக ஏதேனும் சொற்களையோ அல்லது ஒரு தத்துவத்தையோ அல்லது ஒரு கருத்தையோ சுவாரஸ்யமான முறையில் பதிவிடுவது அதிக லைக்குகள் பெற்று தரும். பொதுவாகவே இன்ஸ்டாகிராமில் சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள உள்ளடக்கங்கள் நன்கு செயல்படும்.
செயல்பட அழையுங்கள், கப்ஷனில் ஹேஷ்டேக் பயன்படுத்துங்கள்.
உங்களுக்கு விருப்புகள் வேண்டுமானால் அவர்களிடம் கேளுங்கள்.
Social Bakers நிறுவனம் செய்த ஆய்வின்படி டுவிட்டரில் ரீட்வீட் செய்யப்பட்ட அதிகளவான பதிவுகள் அவர்கள் கேட்டதாலேயே இடம்பெற்றுள்ளன.
அதேபோல உங்களுக்கு இன்ஸ்டாகிராமில் லைக்குகள் வேண்டுமென்றால் நீங்கள் அதனை அவர்களிடம் கேட்க வேண்டும்.
இதனை இன்ஸ்டாகிராமில் சில வித்தியாசமான முறைகளில் கேட்கலாம்.
தயவுசெய்து இந்த பதிவை லைக் செய்யவும் / ஏதேனும் ஒரு கருத்தை பதிவிட்டு, உண்மை என நினைத்தால் லைக் செய்யவும் என பல்வேறு வித்தியாசமான முறைகளில் நீங்கள் இதனை வேண்டலாம்.
Track Marven நிறுவனத்தின் உடைய மற்றுமொரு ஆய்வானது நீங்கள் பயன்படுத்தும் ஹேஷ்டக் அதிகரிக்க அதிகரிக்க லைக் அதிகரிக்கின்றன என கூறியுள்ளது.
நீங்கள் ஒவ்வொரு முறை பதிவிடும் போது குறைந்தது 11 ஹாஷ்டக் ஆவது பயன்படுத்த வேண்டும். ஆனால் 15 க்கு மேலாக பயன்படுத்த வேண்டாம்.
உங்களுடைய பதிவு சற்று முக்கியமானது என்றால் இன்ஸ்டாகிராமில் Hashtagify போன்ற கருவிகளை பயன்படுத்தி தேவையானவற்றை கண்டுபிடிக்கலாம்.
சிறந்த நேரங்களை கண்டுபிடியுங்கள்.
Track Maven நிறுவனம் கண்டுபிடித்துள்ளது படி இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 3 மணிக்குள் பகிரப்படும் பதிவுகள் அதிகளவான விருப்புகளை பெறுகின்றன.
இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், முக்கியமான காரணம் போட்டி குறைவாக இருக்கின்ற நேரத்தில் உங்களுடைய பதிவுகள் முன்னிலை பெறுவது தான்.
அந்த நேரத்தில் மிகக் குறைந்த அளவு ஆட்கள் பதிவிடுவதன் காரணமாக உங்களுடைய பதிவுக்கு அதிகரித்த கவனம் கிடைக்கும். இது உங்களுக்கு instaakiraamilஅதிகரித்த வழிகாட்டுதலை பெற்றுக் கொடுத்தாலும் கூட நீங்கள் விரும்புகின்ற பார்வையாளரை போய் சேருகிறதா என்பதனை நீங்கள் ஆராய்ந்து தான் கண்டுபிடிக்க வேண்டும்.
சிறிதளவு ஆராய்ச்சியின் மூலமாக உங்களுடைய வியாபாரத்தின்/துறையின் பதிவுகளை எந்த நேரத்தில் பதிவிட்டால் லைக்கை அதிகரிக்க முடியும் என்பதனையும் நீங்கள் கண்டுபிடிக்கலாம். இதனை அதிகரிப்பதற்கு பயன்படுத்தப்படும் சில கருவிகளை நீங்கள் பயன்படுத்த வேண்டும்.
ஏனைய வலையமைப்புகளில் பகிருங்கள்
உங்களிடம் வேறுபட்ட சமூக வலைத்தளங்களும் இருக்கும் ஆனால் உங்களுடைய இன்ஸ்டாகிராம் பதிவுகளை அந்த வலைத்தளங்களிலும் பதிவிடுதல் வரவேற்கத்தக்க ஒன்று.
இது உங்களை தொடர்பவர்கள் அனைவரையும் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு அழைத்து வரச் செய்வதற்கு மிகச் சிறந்த முறையாகும்.
இன்ஸ்டாகிராம் உங்களை பேஸ்புக் மற்றும் டுவிட்டர் ஆகிய வலைத்தளங்களில் பகிர்வதற்கு அனுமதிக்கிறது. அதைத்தவிர உங்களுடைய செல்லிடத் தொலைபேசி யைப் பொறுத்து உங்களுக்கு வேறுபட்ட சமூக வலைத்தளங்களிலும் பகிர்வதற்கான வாய்ப்பு உருவாகலாம். ஆகவே இதனை கட்டாயம் முயற்சி செய்து பாருங்கள்
மற்றவர்களின் பதிவுகளை லைக் செய்யுங்கள்.
Neil Patel என்பவர் தனக்கு யாரென்றே தெரியாத கணக்குகளில் பதிவிட்ட ஒவ்வொரு 100 லைக் இற்கும் பதிலுக்கு 21.7 லைக்குகளும் 6.7 பின்தொடர்களும் பெற்றுள்ளார். இவர் பதிலுக்கு அவர்களைப் பின்தொடரா விட்டாலும் அவை தொடர்ந்துள்ளது.
உங்களுடைய வியாபாரம் அல்லது துறை தொடர்பான வேறு பக்கங்களுக்குச் சென்று லைக்குகளை விடுவதோ அல்லது உங்களுக்கு பயனுள்ள அல்லது சுவாரஸ்யமான பதிவுகளை விருப்பு தெரிவிப்பது உங்களுக்கு நன்மையை பெற்றுத்தரும் என்பதனால் அது ஒரு பயனுள்ள செயற்பாடு.
லைக் மற்றும் டேக் செய்யும் போட்டிகளை நடாத்துங்கள்
லைக் செய்து வெற்றியை பெறும் வகையிலான போட்டிகள் மக்களை ஈர்ப்பதற்கு சிறந்த வழிமுறை. இது மிகவும் இலகுவான விடயம் என்பதனால் ஒரு படத்தை பதிவிட்டு அதனை லைக் செய்வதற்கு மக்களும் விரும்புவார்கள். உங்கள் பரிசு சிறிதளவு நன்றாக இருக்கும் என்றால் நிச்சயமாக உங்களுடைய பக்கத்தின் செயற்பாட்டை அதிகரிக்கலாம்.
வேண்டுமானால் லைக் மற்றும் டாக் செய்யும் இரண்டையும் செய்யுமாறு கூறி அதில் யாரேனும் ஒரு அதிர்ஷ்டசாலி தேர்ந்தெடுத்து பரிசு கொடுப்பது போன்ற போட்டிகளை நடத்தலாம். இது அதிக அளவான கூட்டத்தை வரவழைக்கும்.
பரிசானது உங்களுடைய துறை அல்லது வியாபாரம் சம்பந்தமானதாக இருந்தால் தொடர்ச்சியாக உங்களை பின்பற்ற விரும்புபவர்களே அதனை லைக் செய்வார்கள் என்பதும் உறுதி செய்து கொள்ளக் கூடியதே.
முதல் ஐந்தையும் கடைப்பிடித்து உங்கள் பக்கத்தை சற்று நிலை படுத்துங்கள் அதற்குப் பின்பாக சிறிது காலம் சென்ற பிறகு ஆறாவது வழி முறையை பயன்படுத்தலாம்.
இதே போன்ற வேறு தொழில்நுட்பத் தகவல்களுக்கு எங்கள் பக்கத்தின் தொழில்நுட்பப் பிரிவை பார்வையிடவும்.