இந்த பூமி மனிதர்களாகிய நமக்கு என்றுமே மர்மங்களுக்கு குறைவில்லாத ஒன்றாகத்தான் இருக்கிறது. நம்முடைய ஒவ்வொரு தேடலிலும் எதிர்பாராத ஏதேனுமொரு முடிவு கிடைத்துக்கொண்டே இருக்கிறது. அந்த வகையில், இன்றைய தினம் கட்டுரையில் நாம் கடலுக்கடியில் கண்டுபிடிக்கப்பட்ட 5 பண்டைய நகரங்களை பற்றி பார்ப்போம்.
துவாரகை – இந்தியா
துவாரகா அல்லது துவாரகை என்பது ஒரு பண்டைய நகரம் மற்றும் வடமேற்கு இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் உள்ள தேவபூமி துவாரகா மாவட்டத்தின் நகராட்சி ஆகும். இது கோமதி ஆற்றின் வலது கரையில் ஓகமண்டல் தீபகற்பத்தின் மேற்குக் கரையில் அமைந்துள்ளது. 2011 இல் இதன் மக்கள் தொகை 38,873 ஆகும். துவாரகா நான்கு புண்ணியஸ்த்தலங்களுள் ஒன்றாகும். துவாரகை நாட்டின் ஏழு மிகப் பழமையான மத நகரங்களான சப்த பூரியில் ஒன்றாகும். கிருஷ்ணனின் பண்டைய இராச்சியமான துவாரகை இராச்சியமாக துவாரகை நகர் அடையாளம் காணப்படுகிறது. இது குஜராத்தின் முதல் தலைநகரம் என்று நம்பப்படுகிறது.
கரையோரங்களுக்கு எதிராக அடித்துக்கொண்டிருந்த கடல், இயற்கையால் அதற்கு வழங்கப்பட்ட எல்லையை திடீரென உடைத்தது. கடல் நகரத்திற்குள் விரைந்தது. இது அழகான நகரத்தின் தெருக்களில் சென்றது. நகரில் இருந்த எல்லாவற்றையும் கடல் மூடியது. அழகான கட்டிடங்கள் ஒவ்வொன்றாக நீரில் மூழ்குவதை நான் கண்டேன். ஒரு சில நொடிகளில் அது முடிந்துவிட்டது. கடல் இப்போது ஒரு ஏரியைப் போலவே அமைதியாகிவிட்டது. நகரத்தின் எந்த தடயமும் இல்லை. துவாரகா ஒரு பெயர் மட்டுமே; ஒரு நினைவாகிவிட்டது .
மஹாபாரதம்
கடல் தொல்பொருளியலில் இந்திய நகரம் என்ற முறையில் அதிகம் பேசப்படுவது, பண்டைய நகரமான துவாரகையாகத்தான் இருக்கும். நாட்டுப்புறக் கதைகளின்படி, துவாரகா கிருஷ்ணரின் சொந்த ஊர் எனப்பட்டது. இடிபாடுகள் கடலுக்கு 131 அடி கீழே கண்டுபிடிக்கப்படும் வரை இது ஒரு பழைய பாட்டிக் கதை, ஒரு கட்டுக்கதை என்று நம்பப்பட்டு வந்தது. நவீனகால துவாரகையின் மேற்பரப்பிற்கு அடியில் இடிபாடுகள் காணப்பட்டன. இந்த நகரத்தின் சிக்கல் வாய்ந்த வடிவமைப்பும் அழகும் மாபெரும் நிபுணர்களைக் கூட குழப்பிவிட்டன.
போர்ட் ரோயல் – ஜமைக்கா
போர்ட் ராயல், ஜமைக்கா, பொதுவாக “பூமியில் மிக மோசமான நகரம்” என்று குறிப்பிடப்படுகிறது. கொள்ளையர்கள், துணிச்சலான கடற்படைத் தாக்குதல்கள் , கொள்ளை, செல்வத்திருட்டு, அழிவு மற்றும் பேரழிவு ஆகியவற்றின் வெளிப்பாடுகளை இது காட்டுகிறது. இது புதிய உலகில் மிக முக்கியமான வர்த்தக நகராக வேகமாக வளர்ந்ததால் இது ஒரு புதிரான மற்றும் கொந்தளிப்பான வரலாற்றைக் கொண்டுள்ளது. நகரம் செல்வச்செழிப்பின் உச்சத்தில் இருக்கும்பொழுது, ஜூன் 7, 1692 இல், போர்ட் ராயல் ஒரு பூகம்பத்தால் தாக்கப்பட்டது. நகரத்தின் மூன்றில் இரண்டு பங்கு கடலில் மூழ்கியது. தொடர்ச்சியான தீ மற்றும் சூறாவளிகள் அடுத்தடுத்து வந்தன, அதன் பின் நகரம் அதன் முந்தைய மகிமைக்கு ஒருபோதும் மீளவில்லை. போர்ட் ராயல் ஒரு பிரிட்டிஷ் கடற்படை நிலையமாக இருந்து, இன்று ஒரு சிறிய மீன்பிடி கிராமமாக உள்ளது.
யோகனாய் ஜீமாவின் பிரமிட்டுக்கள் – ஜப்பான்
நீருக்கடியில் கிடக்கும் இந்த பிரமிட்டுகள் மர்மத்தால் நிறைந்தவை. இந்த பிரமிடுகள் மனிதனால் உருவாக்கப்பட்டதா அல்லது இயற்கையாக நிகழும் நிகழ்வுதானா என்று நிபுணர்கள் சிந்தித்து வருகின்றனர். இந்த கட்டமைப்புகள் கி.மு 10,000 இனி அண்மித்த பனி யுகத்தில் செய்யப்பட்டன. இன்னும் விசித்திரமாக, இந்த பிரமிடுகள் மெக்ஸிகோ மற்றும் மத்திய அமெரிக்காவில் காணப்படுவதை ஒத்திருக்கின்றன. இங்குதான் எல்லாமே குழம்புகிறது. இந்த இடத்திற்கு அண்மையில் வேறெந்த கட்டிட அமைப்புகளும் இல்லை. இது எப்படி இங்கே வந்தது என்று யாருக்கும் தெரியவில்லை.
“மிகப்பெரிய கட்டமைப்பு 25 மீட்டர் [82 அடி] ஆழத்திலிருந்து உயரும் ஒரு சிக்கலான, ஒற்றைக்கல், படிப்படியான பிரமிடு போல் தோன்றுகிறது” என்று கிமுரா (மூத்த ஆய்வாளர் ஒருவர்) கூறுகிறார். 2007 ஜூன் மாதம் ஒரு அறிவியல் மாநாட்டில் இந்த தளத்தைப் பற்றிய தனது கோட்பாடுகளை முன்வைத்தார்.
ஆனால் மூழ்கிய நகரங்களின் மற்ற கதைகளைப் போலவே, கிமுராவின் கூற்றுகளும் சர்ச்சையை ஈர்த்துள்ளன.
“இதிலுள்ள எந்தவொரு முக்கிய அம்சங்களும் கட்டமைப்புகளும் மனிதனால் உருவாக்கப்பட்ட படிகள் அல்லது மொட்டை மாடிகள் என்று நான் நம்பவில்லை, ஆனால் அவை அனைத்தும் இயற்கையானவை” என்று பாஸ்டன் பல்கலைக்கழகத்தின் அறிவியல் மற்றும் கணித பேராசிரியரான ராபர்ட் ஸ்கோச் கூறினார்.
சிங்க நகரம் – சீனா
ஷி செங் என்று அழைக்கப்படும் சிங்க நகரம் , வு ஷி மலையின் (ஐந்து சிங்க மலை) அடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு பழங்கால நீரில் மூழ்கிய நகரமாகும், இது இப்போது சீனாவில் கண்கவர் கியாண்டாவோ ஏரிக்கு (ஆயிரம் தீவு ஏரி) கீழே 25 – 40 மீட்டர் ஆழத்தில் அமைந்துள்ளது. 2014 ஆம் ஆண்டில், அதிகாரிகள் இந்த மூழ்கிய நகரம் தொடர்பாக ஒரு புதிய ஆர்வம் பெற்றனர். 50 ஆண்டுகளுக்கும் மேலாக நீருக்கடியில் இருந்தபோதிலும், முழு நகரமும் முற்றிலும் அப்படியே பாதுகாக்கப்பட்டு, அதை ஒரு கண்கவர் பிரதேசமாக மாற்றியது. 2017 ஆம் ஆண்டளவில், இந்த இடம் சுற்றுலாப்பயணிகளுக்கு ஒரு டைவிங் தளமாகவும், 1400 ஆண்டுகளுக்கு முந்தைய நன்கு பாதுகாக்கப்பட்ட கட்டிடக்கலை மற்றும் செதுக்கல்களின் நீரடி அருங்காட்சியாகவும் அறிவிக்கப்பட்டது.
சிங்க நகரம் கிழக்கு ஹான் வம்சத்தின் ஆட்சியின் போது (கி.பி 25 – 200) கட்டப்பட்டது, இது கி.பி 208 இல் முதன்முதலில் ஒரு மாவட்டமாக அமைக்கப்பட்டது. இது ஒரு காலத்தில் கிழக்கு மாகாணமான ஜெஜியாங்கில் அரசியல் மற்றும் பொருளாதாரத்தின் மையமாக இருந்தது. ஆனால் 1959 ஆம் ஆண்டில், சீன அரசாங்கம் ஒரு புதிய நீர்மின் நிலையம் தேவை என்று முடிவு செய்தது – எனவே மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு ஏரியைக் கட்ட முடிவெடுத்தது, அவ்வாறு ஷி செங்கை 40 மீட்டர் நீரில் மூழ்கடித்தது.
பாவ்லோ பெட்ரி – கிரேக்கம்
பாவ்லோபேத்ரி உலகின் மிகப் பழமையான நீரில் மூழ்கிய நகரம். 2011 ஆம் ஆண்டில் பிபிசி இந்த இடத்திற்குச் சென்றதும், அங்கு சிறப்பு லேசர் ஸ்கேனிங் நுட்பங்களைப் பயன்படுத்தி அவ்விடத்தின் அமைவை சரியாக கண்டுபிடித்ததன் பின்னரே அந்நகரம் உலகிற்குத் தெரிந்தது.
1968 ஆம் ஆண்டில் டாக்டர் நிக்கோலஸ் பிளெமிங் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் இளம் தொல்பொருள் ஆய்வாளர்கள் குழுவுடன் பாவ்லோபெட்ரிக்குத் சென்றுள்ளார். பேராசிரியர் ஏஞ்சலோஸ் டெலிவோரியாஸுடன் இணைந்து, அவர்கள் மூழ்கிய நகரத்தை வரைபடமாக்கி தேதியிட்டனர். பல கட்டிடங்கள், வீதிகள் மற்றும் சதுக்கங்கள் கொண்ட ஒரு அரிய வரலாற்றுக்கு முந்தைய குடியிருப்பு நகரத்தை அவர்கள் கண்டுபிடித்தார்கள்!
கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் குழு கி.மு. 2800 இல் முதன்முதலில் மக்கள் அங்கு குடியேறியதாக அறிவித்தது, அதே நேரத்தில் மைசீனிய காலத்திலிருந்து (கிமு 1680-1180) கட்டப்பட்ட கட்டிடங்களும் தெருக்களும் கூட கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதுவும் பூகம்பத்தால் அழிந்ததாக கூறப்படுகிறது.
ஆவிகளை தம்முள்ளே கொண்ட 10 உலகின் மிகப் பயங்கரமான பொருட்கள் பற்றி படிக்க கீழுள்ள பொத்தானை அழுத்தவும்.
முகப்பு உதவி : pandotrip