நாம் இனியும் Facebookஐ நம்பவேண்டுமா ?
பேஸ்புக்ற்கு உங்களைப் பற்றி எவ்வளவு தெரியும் ? வழக்கமான உங்கள் பிறந்த நாளையும், உறவு நிலையையும் தவிர திரு.Zukerberk அவர்களும் அவரது மினியன் கூட்டமும் வேறென்னவெல்லாம் அறிவார்கள் ? உங்கள் மூளைக்குள் என்ன தகவல்களெல்லாம் வருகிறதோ, அவை, கவனக்குறைவால் நீங்களாக வலிந்து சென்று அவர்களுக்கு அள்ளிக் கொடுத்திருக்கும் தகவல்களோடு ஒப்பிடும்போது ஒன்றுமேயில்லை. பேஸ்புக்ற்கு உங்களைப் பற்றி கிட்டதட்ட எல்லாமே தெரியும். அவற்றை தனிப்பட்டதாக வைத்துக்கொண்டிருக்கும் Facebookன் பாதுகாப்பு வெறும் மெல்லிய திரைச்சீலைதான், அதிலும் ஏற்கனவே Hackerகளால் நன்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஆக, $540 ளால் உங்களுக்கு என்ன பெற்றுத்தந்துவிட முடியும் ? ஒரு நல்ல மடிக்கணனி, செல்லிடத்தொலைபேசி அல்லது நன்கு விலையுயர்ந்த ஒரு ஹெட்போன். அவற்றுக்குப் பதிலாக 267 மில்லியன் பேஸ்புக் கணக்குகளை வாங்க உங்களால் முடியும் என்று நான் கூறினால் உங்கள் எண்ணம் யாதாக இருக்கும் ? நல்லது, பிரபல்யமற்ற அனால் இந்த செயலை செய்யும் அளவு திறன்மிக்கதான, இணையத்தின் தீண்டத்தகாத பாகமான DarkWeb தான் அது. இங்கு உலவும் சில “சுவாரசியமான” மனிதர்களால் தான் இதனை தீண்டத்தகாதது என்கிறோம்.இவ்வாறான மனிதர்களுள் விரும்பத்தகாத ஒருவர், அச்சுறுத்தலுக்குரியவர் ஒருவரே இந்த் செயலுக்கு பின்னால் இருக்கிறார்.
Cybleன் கடுமையாக உழைக்கும் குழுவொன்று இவ்வாறான கணக்குகளின் விற்பனை தொடர்பான தகவல்களை கட்டவிழ்த்துள்ளது. அதிஷ்டவசமாக எந்த வகையான கடவுச்சொற்களும் வெளியிடப்படவில்லை.களவாடப்பட்ட தகவல்கள் செல்லிடத்தொலைபேசி இலக்கம், பெயர், facebook கணக்கு மற்றும் மின்னஞ்சல் தகவல்களையே கொண்டுள்ளது. “இந்த நிலையில், தகவல்கள் எவ்வாறு வெளியாகின என்பது தொடர்பாக கூற முடியவில்லை. மூன்றாம் நிலை API அல்லது சுரண்டுதல் மூலம் பெறப்பட்டிருக்கலாம். வழங்கப்பட்டிருக்கும் தகவல்கள் பயனாளர்கள் பற்றிய நூதனமான தகவல்களை உள்ளடக்கியுள்ளது. அவை இணைய குற்றவாளிகளால் பித்தலாட்டங்களுக்கும் ஏமாற்று வேலைகளுக்கும் பயன்படலாம். ”என Cyble ஆனது தனது வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளது.
நீங்கள் இதை நினைத்து வருந்த வேண்டுமா ? அவ்வளவாக இல்லை, எனினும் உங்கள் இணைய உலவல் பழக்கவழக்கங்கள் தொடர்பாக நீங்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். அதாவது, வலைத்தூண்டிலிடல் (குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சலில் தங்களை பிரபலமான நிறுவனமாகக் காட்டிக்கொண்டு தகவல்களை சேகரித்தல் )செயற்பாட்டுக்கு நீங்கள் ஆளாக வாய்ப்புண்டு. உதாரணமாக உங்களுடைய வங்கிக்கணக்குக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்பதற்காக “அவசரமான நடவடிக்கைகளை ” மேற்கொள்ளுமாறு கேட்டு மின்னஞ்சல்கள் ஒன்றிலிருந்து, பல தடவைகள் வரை வரலாம்.இவற்றை தவிர்த்தாலே நீங்கள் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
Cyble பரிந்துரைப்பதன்படி, உங்களுடைய தனியுரிமை செட்டிங்களில் சற்று இறுக்கத்தன்மை காட்டுவது நல்லது. முக்கியமாக உங்கள் கடவுச்சொல்லானது ஒரே சொல் வேறு வேறு தளங்களில் பயன்படுவது தவிர்க்கப்பட வேண்டும். இது இலகுவாக உங்கள் கணக்குகளை பின்தொடர்ந்து தாக்க வழிவகை செய்யும். அதைத் தவிர Facebookல் உள்ள இரண்டு கட்ட உறுதிப்படுத்தலை பயன்படுத்துவது பயனளிக்கும். வெற்றிகரமாக தாக்கப்பட்ட கணக்குகளோடு ஒப்பிடும்போது இது 99% பாதுகாப்பளிக்கும்.
உங்களுடைய தனிப்பட்ட மின்னஞ்சலை Facebok மற்றும் Twitter ஆகியவற்றுக்கு நீங்கள் பயன்படுத்துவதிலிருந்து வேறுபட்ட ஒன்றாக வைத்திருப்பது நிச்சயமாக பயனளிக்கும்.
இந்த தகர்ப்பு நிச்சயமாக பேஸ்புக்கின் நற்பெயருக்கு கடந்த ஆண்டு டிசம்பரில் 267 மில்லியன் அமெரிக்க தரவுகள் இணையத்தில் கிடைக்கப் பெற்றபோது ஏற்பட்டதைப் போலவே மாபெரும் அவமானமாகும். Facebook இவ்வாறான தாக்குதல்களுக்கு அடிக்கடி உட்படுகிறது. இம்முறை எந்த கடவுச்சொற்களும் போகவில்லை என்றாலும் இந்த் தகர்ப்பு Facebookற்கும் அதன் வாடிக்கையாளர்களுக்குமிடையிலான நம்பிக்கைக்கு ஏற்பட்ட தகர்ப்பேயாம். நாம் Facebook இந்த தவறுகளை திருத்தி தம்மை வளர்த்துக்கொள்ளும் என நாம் எதிர்பார்க்க மட்டும் தான் முடியும்.
உங்களுடைய தகவலைப் பற்றி நீங்கள் வருந்தினால், உங்களை பற்றிய தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டுள்ளதா? இல்லையா? என கண்டறிய இந்த பக்கத்துக்கு செல்லவும்.
பேஸ்புக் தொடர்பான மேலதிக தகவல்களுக்கு இங்கே செல்லவும்
image source:https://outthisyear.com/267-million-facebook-profiles-sold-on-the-dark-web/