ஆங்கில புது வருடத்தை நினைத்து எம் மனம் சந்தோஷத்தில் பூரிப்படைந்து இருந்தாலும் மனதில் இந்த ஆண்டை எப்படி கடக்க போகின்றோம் என்ற பயமே அதிகமானவர்களின் மனதில் தற்போது எழுந்துள்ளது.
இவ்வாறான மனநிலையில் இருந்து விடுபடவும் இந்தப் பண்டிகை காலத்தை மிகவும் சந்தோஷமாக எப்படி திட்டமிடலாம் எனவும் பார்ப்போம்.
பண்டிகை நாட்களில் கவலை அல்லது மன அழுத்தம் ஏற்படுவது இயற்கையானது. ஆனால், இதனால் நீங்கள் பண்டிகை மனநிலையை இழக்க வேண்டிய எந்தவொரு அவசியமும் இல்லை.
ஆங்கில புது வருடத்தை நினைத்து எம் மனம் சந்தோஷத்தில் பூரிப்படைந்து இருந்தாலும் மனதில் இந்த ஆண்டை எப்படி கடக்க போகின்றோம் என்ற பயமே அதிகமானவர்களின் மனதில் தற்போது எழுந்துள்ளது.
இவ்வாறான மனநிலையில் இருந்து விடுபடவும் இந்தப் பண்டிகை காலத்தை மிகவும் சந்தோஷமாக எப்படி திட்டமிடலாம் எனவும் பார்ப்போம்.
பண்டிகை நாட்களில் கவலை அல்லது மன அழுத்தம் ஏற்படுவது இயற்கையானது. ஆனால், இதனால் நீங்கள் பண்டிகை மனநிலையை இழக்க வேண்டிய எந்தவொரு அவசியமும் இல்லை.
பண்டிகையை நாம் மகிழ்ச்சியுடன் வரவேற்கலாம். கடந்த ஆண்டுகளை விட இது ஒருபோதும் மோசமாக இருக்காது என நாம் முதலில் மனதார நம்பிக்கை கொள்ள வேண்டும். கடந்த கொரோனா காலங்களில் நாம் அனைவரும் தொடர்ந்து மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் அனுபவித்திருக்கிறோம். பண்டிகைகள் எவ்வளவு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறதோ, அதே அளவு மன அழுத்தத்தையும் ஏற்படுத்தும் என்பது யதார்த்தமான உண்மை.
இருப்பினும், பண்டிகைகளை மகிழ்ச்சியாக கொண்டாடுவதற்கான வழிகளை நாம் எப்படி கண்டறிவது?
உடல்நலம்
ஒரு வழக்கமான அட்டவணையை பராமரியுங்கள் பண்டிகை காலம் ஒரு பரபரப்பான நேரம். வாழ்க்கை மிகவும் பரபரப்பாக இருப்பதால், உங்கள் சாதாரண சுய-கவனிப்பு நடைமுறைகளில் சில இடையூறு ஏற்படலாம். முதலில் போதுமான தூக்கத்தைப் பெற முயற்சி செய்யுங்கள். முடிந்தவரை ஆரோக்கியமாக சாப்பிடுங்கள், குடி பழக்கங்களை கைவிடுங்கள். உங்களுக்கு குழந்தைகள் இருந்தால், அவர்களின் அட்டவணையை முடிந்தவரை ஒழுங்காக வைக்க முயற்சி செய்யுங்கள்.
திட்டமிடல்
நீங்கள் திட்டமிடத் தொடங்குவதற்கு முன், திட்டமிட்டபடி விஷயங்கள் சரியாக நடக்காமல் போகலாம் என்பதை அறிந்து கொள்ளுங்கள். இது சரியானதாக இருக்க வேண்டிய அவசியமில்லை மற்றும் தவறுகளை ஏற்றுக்கொள்ளுங்கள்.நாம் செய்த தவறை ஏற்றுக்கொள்ளல் என்பது, மனிதரின் மேலான குணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகின்றது.
எப்படி அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று எண்ணுவதை தவிர்த்து, நாம் எப்படி சந்தோஷமாக இருக்கலாம் என்று சிந்திக்க ஆரம்பியுங்கள். அனைவரும் உங்களை போலவே மகிழ்ச்சியாக இருக்க செல்கிறார்கள் அல்லது அவர்களின் தேவைக்காக நிற்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.
சரியானவழி
உங்கள் சொந்த வரம்புகளை அங்கீகரிக்கவும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எது வசதியாக இருக்கிறதோ அதுவே இந்த ஆண்டு பண்டிகையை கொண்டாட ‘சரியான வழி’ என்பதை புரிந்து கொள்ளுங்கள். இது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நிறைவான சந்திப்புகள், கலந்துரையாடலில் ஈடுபடுங்கள். பாரம்பரிய நிகழ்வுகளில் கலந்துகொள்ளுங்கள்.
பண்டிகை காலங்களின் போது மக்கள் தங்கள் மீது அழுத்தம் கொடுப்பது பொதுவானது. ஆதலால், நேர்மறையான அணுகுமுறையை மேற்கொள்ளுங்கள். விவாதங்களில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
நல்ல நினைவுகள்
நாம் எதிர்கொள்ள போகும் இந்த புதிய ஆண்டை வரவேற்கும் முகமாக நாம் கடந்து வந்த ஆண்டுக்கு நன்றி தெரிவித்து புது வருடத்தை இன்முகத்தோடு வரவேற்போம்.
கடந்த ஆண்டு உங்கள் வாழ்க்கையில் இடம்பெற்ற நல்ல விடயங்களையும் நல்ல நினைவுகளையும் மட்டுமே சுமந்து இந்த 2023 ஆம் ஆண்டிற்குள் காலடி எடுத்து வையுங்கள்.
கசப்பான நினைவுகள்
இந்த புதிய ஆண்டிற்கான தீர்மானங்களை அதாவது, உங்களுடைய வாழ்க்கையிலே நீங்கள் செய்யப் போகும் (இலட்சியமாக இருக்கலாம் ) விடயத்திற்கான அடித்தளத்தை இன்றே ஆரம்பியுங்கள். அதுவே, இந்த வருடத்திற்கான இலக்கு என உங்கள் மனதிலும் உங்கள் மூளையிலும் அதை பதிவு செய்து அதை நோக்கிய பயணத்தை ஆரம்பியுங்கள். கடந்த ஆண்டு உங்கள் வாழ்க்கையிலே மனக்கசப்புகள், கவலைகள், கண்ணீர், துன்பம், துயரம் என பல பல விடயங்கள் இடம் பெற்று இருந்தாலும் , அவற்றை ஒருபோதும் நினைவு கூற வேண்டாம்.
தேடல்
இந்த புதிய ஆண்டிலேயே புதிதாக கற்றுக் கொள்ள முயற்சி செய்யுங்கள். அதிகமாக தேடித்தேடி கற்றுக் கொள்ளும் திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள். எந்த ஒரு விடயம் செய்ய ஆரம்பிக்கும் முன்பும் அதற்கான முன்கூட்டிய திட்டத்தை ஒரு ஏட்டிலோ அல்லது உங்களுடைய தொலைபேசியிலோ அல்லது ஏதோ ஒரு நோட் புத்தகத்திலோ எழுதி ஆரம்பியுங்கள்.
சுற்றுலா
இந்த வருடமாவது ஒரு தனிமையான ஒரு பயணமோ குடும்ப சுற்றுலாவோ நண்பர்களுடனான சுற்றுலாவோ உங்களுக்கு எந்த வகையான சுற்றுலா பிடித்திருக்கிறதோ அந்த இடத்துக்கு பயணம் செய்யுங்கள்.
பணம் மற்றும் சேமிப்பு
இந்த புதிய வருடத்திற்கான உங்களுடைய நிதி நிலையை சரியாக திட்டமிடுங்கள். உங்களுடைய பணத்தை வீண்விரயம் செய்யாமல் உங்களுடைய பொன்னான பணத்தை ஒரு சரியான முதலீட்டில் முதலீடுங்கள்.
இவ்வளவு நாள் பணத்தை வீண்விரயம் செய்திருந்தாலும் இந்த ஆண்டிலாவது நான் ஒரு சிறிய சேமிப்பையாவது செய்ய வேண்டும் என்ற சேமிப்பு திட்டத்தை உருவாக்குங்கள்.
இந்த சேமிப்பு ஏதோ ஒரு நல்ல விடயத்திற்காகவோ அல்லது உங்களுடைய வாழ்க்கை தேவைக்காகவோ பயன்படக்கூடியதாக அமையும். ஆகவே, சேமிப்பு என்பது மனித வாழ்க்கையில் மிகவும் இன்றியமையாத ஒன்றாக தற்போது மாறி உள்ளது, என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
உங்கள் வாழ்க்கையில் நீங்கள் பட்டிருக்கும் கடன் அல்லது நிலுவையை நிவர்த்தி செய்வது எப்படி என்று யோசித்து அதற்கான திட்டத்தை ஆரம்பிங்கள்.
குடும்பம் மற்றும் நண்பர்கள்
முக்கியமாக வாழ்க்கையில் நாம் தவறவிட்டவர்கள் தான் நம் நண்பர்களும், அயலவர்களும், குடும்பத்தினரும் இவர்களோடு இந்த புது வருடத்திலாவது மனம் விட்டு பேச முயற்சி செய்யுங்கள். அவர்களுடன் நேரத்தை கொஞ்சம் பகிர்ந்து கொள்ளுங்கள்.
கடைசியாக இத்தனை வருட காலமும் நாம் ஏதோ ஒரு வகையில் ஏதோ ஒரு நல்லதும் செய்திருக்கலாம், கெட்டதும் செய்திருக்கலாம் அந்தக் கெட்டவைகளுக்காக நாமே நம் மனதை ஒருநிலைப்படுத்திக் கொண்டு நாம் செய்த நல்லவிடயங்களுக்கு நமக்கு நாமே நன்றி கூறிக்கொண்டு, எதிர்வரும் வருடம் ஒரு சிறந்த வருடமாக அமைய சிறந்த திட்டங்களை உருவாக்குங்கள்.
மேலும், இந்த வருடம் ஆரோக்கியமான வருடமாக அமையவும் , நாம் நல்ல முறையில் முன்னெடுத்துச் செல்ல அந்த இறைவனையும் பிரார்த்திப்பதோடு எமது மனதையும் தயார்படுத்தி முன் செல்வோம் என வாழ்த்துகின்றோம்.
புது வருட வாழ்த்துக்கள்!!
சி.டொரின்