இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!! இணையத்தில் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்.
இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று (2021 மே 26ம் தேதி) நிகழ்கிறது. 101.6 சதவீதம் என முழு கிரகணமாக நடக்கும்.
மங்களகரமான பிலவ வருடம் வைகாசி மாதம் 12ஆம் தேதி (மே 26ஆம் தேதி) புதன்கிழமை பிற்பகல் 03.14 மணி முதல் மாலை 06.23 மணி வரை விருச்சிக ராசியில் அனுஷம் நட்சத்திரத்தில் கேது கிரஹஸ்த சந்திர கிரகணமாக நிகழ்கிறது. கேது உடன் சந்திரன் இணையும்போது இந்த சந்திர கிரகணம் ஏற்படுகிறது.
சந்திர கிரகணம் எப்போதும் பௌர்ணமி நாளில் ஏற்படும். அதாவது சூரியன் மற்றும் சந்திரன் ஒரே நேர் கோட்டில் சூரியனின் முழு ஒளியைப் பெறக்கூடிய நாளில் சூரியன் – சந்திரனுக்கு இடையே பூமி அதே நேர்கோட்டில் வருவதால் பூமியின் நிழல் சந்திரனின் மீது விழும் நிகழ்வு தான் நாம் சந்திர கிரகணமாக காண்கிறோம்.
சந்திர கிரகணம் எங்கெல்லாம் பார்க்கலாம்?
இந்தியாவின் சில நிமிடங்கள் மற்றும் சில பகுதிகளில் மட்டும் பார்க்கப்படும். இருப்பினும் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள், ஆசிய நாடுகள், ஆஸ்திரேலியா, வட ஆப்பிரிக்கா, மேற்கு ஆப்பிரிக்கா நாடுகள், தென் அமெரிக்கா, பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், இந்திய பெருங்கடல் மற்றும் ஆர்டிக் பகுதியில் இந்த அற்புத நிகழ்வைப் பார்க்க முடியும். இந்தியாவின் மற்ற பகுதிகளில் இந்த கிரகணம் தெரியாது. கிரகணம் தெரியாத இடங்களில் தோஷம் கிடையாது.
சந்திர கிரகண நாளில் நமது மாபெரும் இரண்டு இதிகாசங்களை படித்து முக்தியடையுங்கள்.
கிரகணத்தின் போது என்ன செய்ய வேண்டும்?
யோகத்தை அதிகளவில் தரக் கூடியது என்பதால் இந்த நேரத்தில் நம் இறைவனின் திருநாமத்தை ஜெபித்து வந்தால் நம் பாவங்கள் நீங்கப்பெறும்.
காயத்ரி மந்திரம் சொல்லலாம்
ஓம் பூர் புவ ஸஷுவ
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோந ப்ரசோதயாத்
இல்லை என்றால் ஓம் நமோ நாராயணா, ஸ்ரீ ராம ஜெயம், ஓம் நமசிவாயா என்ற எளிய மந்திரங்களை உச்சரித்து உங்களின் பாவங்களை தொலைக்கலாம்.
செய்யக்கூடாதது
கர்ப்பிணிகள் கண்டிப்பாக வெளியே வரக்கூடாது. கிரகண நேரத்தில் கர்ப்பிணிகள் அவர்களின் உடலின் ஏதேனும் ஒரு பகுதியில் சொரிந்தால், அந்த இடத்தில் குழந்தைக்கு கருப்பாக அல்லது ஏதேனும் அடையாளம் தோன்றும் என கூறப்படுகிறது.
இந்த நேரத்தில் கண்டிப்பாக வீட்டை சுத்தம் செய்தல் கூடாது. கிரகணத்திற்கு 3 மணி நேரத்திற்கு முன் சாப்பிட்டுவிட வேண்டும். கிரகண நேரத்தில் நம் வயிற்றில் உள்ள உணவு நன்றாக செரித்து முடிந்த நிலையில் இருப்பது நல்லது.
கிரகணம் முடிந்ததும் செய்ய வேண்டிய எளிய பரிகாரம்
கிரகணம் முடிந்த பின், வீட்டை நன்றாக கழுவி சுத்தம் செய்து, நாமும் நன்றாக சுத்தமான பின்னர் சுவாமி படங்களை சுத்தம் செய்து விளக்கேற்றி இறைவனை வணங்கவும்.
கிரகணம் முடிந்த பின்னர் பொதுவாக நம் முன்னோர்கள் கடலில் குளிக்க வேண்டும் என்பார்கள் அல்லது நம் வீட்டிலேயே குளிக்கும் நீரில் சிறிது கல் உப்பு போட்டு அந்த தண்ணீரில் குளிப்பதால் நம்மை சுற்றியுள்ள தீவினைகள் நீங்கும். அதே போல் நம் உடலில் உள்ள நுண் கிருமிகள் மடியும்.