நாம் இந்த உலகம் பற்றியும் பிரபஞ்சம் பற்றியும் அறிகிறோம், தினமும் பல உறவுகளைக் கடக்கிறோம். ஆனால் நாம் என்றுமே உணராமல் நம்முடனே இருக்கும் பல ஆச்சரியங்கள், வெளிப்படும்போது நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகின்றன. இதுவரை நாம் அறியாத விசித்திரத் தகவல்கள் பற்றிய தொகுப்பு இது.
இதுவரை நாம் அறியாத விசித்திரத் தகவல்கள்
நீர்யானையின் பால் உண்மையில் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். அத்துடன் நீர்யானைகள் சைவ விரும்பிகள்.
தேன் ஒருபோதும் கெட்டுப்போவதில்லை. ஒரு வருடம் கழித்து அல்ல, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அல்ல – ஒருபோதும் இது நிகழாது.இந்தக் காரணம் மற்றும் அதன் அடர்த்தி என்பவே இறைச்சி முதலிய உணவுகளை காக்க அதை பயன்படும் வண்ணம் வைத்துள்ளது.
டூரிடோப்சிஸ் நியூட்ரிகுலா ஜெல்லிமீன் பூமியில் அறியப்பட்ட இது உயிரியல் ரீதியாக அழியாத உயிரினமாகும். வேறு வார்த்தைகளில் சொன்னால் சிரஞ்சீவி.
உலகில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் இந்த உலகில் உள்ள எல்லா எறும்புகளையும் சமமாக பிரித்து கொடுக்க முடிவெடுக்கிறோம் என்போம். ஒரு நபருக்கு சுமார் 1.6 மில்லியன் எறும்புகள் கிடைக்கும். இந்த எறும்புகளின் ஒட்டுமொத்த எடை உலகின் மனித மக்கள் தொகையின் ஒருங்கிணைந்த எடைக்கு சமம்.
இன்று நீர் மற்றும் தீ முதலான சக்திகளை கட்டுப்படுத்தும் கலையாகக் கூறப்படும் ஃபெங் சுய், முதலில் ஒரு கல்லறைக்கு பொருத்தமான இடத்தைத் தேர்ந்தெடுக்கும் கலையாகவே ஆரம்பமானது.
ஒரு நீல திமிங்கலத்தின் இதயம் மனிதன் அதன் தமனிகள் வழியாக நீந்தக் கூடியளவு மிகப் பெரியது. கிட்டத்தட்ட 35 கலன் வர்ணப் பூச்சு வாளிகளின் நிறைக்கு சமனான நிறையுடையது.ஆனாலும் கூட அதன் தொண்டை ஒரு தேநீர்க் கோப்பை வைக்கும் தட்டை விட பெரியது அல்ல.
திமிங்கிலத்துக்கே ஒரு இதயம்தான் தேவைப்படுகிறது. ஆனால், ஒரு ஆக்டோபஸுக்கு மூன்று இதயங்கள் உள்ளன.
ஆண்களின் குரல் சற்று தடிப்பமாகவும் பெண்களது குரல் இனிமையாகவும் இருப்பதை உணர்ந்திருப்போம். இதற்கான காரணம் நம்முடைய குரல்வளையில் அதிரும் தசையின் தடிப்புதான். ஆண்களது தசைகள் தடிப்பானவை, அசைக்க கடினம்: ஆகவே குறைந்த மீடிறனில் அதிரும். தாழ் சுருதி ஒலி தோன்றும். பெண்கள் தசை மெலிது : அசைப்பது இலகு; ஆகவே உயர் சுருதி ஒலி எழும்.
நீங்கள் ஹீலியம் வாயுவை எடுத்துக் கொண்டதும் உங்கள் குரல் காட்டூன் ஒலி போல ஆகக் காரணம் இதன் எதிரானது. இப்போது தொண்டையில் அதிரப்போகும் வாயு அடர்த்தி குறைந்தது என்பதால் அதிக மீடிறனில் அதிர்கிறது.
சனி மற்றும் வியாழன் ஆகிய கிரங்களில் வைரங்களிலான மழை பெய்யும் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.இதனாலேயே வியாழன் பூமியிலிருந்து சந்திரனைப் போன்ற சிறிய தொலைவில் இருந்தால்எப்படி இருக்குமோ அப்படி வானம் இருக்கிறது.
மனித உடலில் உயிரணுக்கள் இருப்பதை விட மனித பத்து மடங்கு அதிக பாக்டீரியாக்கள் உள்ளன. உடலில் 30,000,000,000,000 உயிரணுக்கள் உள்ளன.
நீங்கள் குடிக்கும் ஒரு குவளை நீரில் உள்ள ஏதேனுமொரு நீர் மூலக்கூறு ஒரு டைனோசரின் உடலுக்குள் போய் வந்திருப்பதற்கான வாய்ப்பு 100% ஆகும். அதாவது நிச்சயம் ஒவ்வொரு துளி நீரும் டைனோசர் குடித்ததுதான்.
கெளுத்தி மீனில் 27,000 சுவை மொட்டுகள் உள்ளன. இது மனிதர்களிடம் இருப்பதை விட நான்கு மடங்கு அதிகம்.
நீங்கள் மீன் வளர்ப்பதில் ஆர்வமுடையவராக இருந்து அதிலும் தங்க மீன்களை விரும்பினால் இதனை நினைவில் கொள்ளுங்கள். தொட்டி எளிமையாக இருக்கட்டும். மிகவும் அலங்கரித்து கடல் போன்ற ஒரு போலி அமைப்பை உருவாக்க முயற்சித்தால் அதுவே அவைகளுக்கு மோசமாகி விடும்.
மோசமான விளக்குகளில் படிப்பது அல்லது இருட்டில் கணினியைப் பயன்படுத்துவது உண்மையில் உங்கள் பார்வைக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என கேள்விப்பட்டிருந்தால் அது பொய் என புரிந்து கொள்ளுங்கள்.
இந்த உலகிலேயே அதிகம் பழைமை வாய்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் (கி.பி 1906) ஆஸ்டெக் பேரரசை (கி.பி. 1100) விட பழமையானது.
மணல் அல்லது மண் என்பது இன்னுமே விஞ்ஞானம் பதிலளிக்க கஷ்டப்படும் ஒரு விடயம். நாம் நினைப்பது போல அது உடைந்த கல் துகள்கள் மட்டுமல்ல. மணல் வித்தியாசமான கட்டமைப்புகளால் உருவானது. இதனை நுணுக்குகாட்டியூடு பார்க்கும் பொழுது புரியும்.
உலகம் முழுதும் கிறிஸ்துமஸ்காக கொண்டாப்படும் நத்தார் தாத்தா சாண்டா கிளாஸ் என்றே அழைக்கப்படுகிறார். ஆனால், சைப்ரஸில், சாண்டா கிளாஸ் பசில் என்று அழைக்கப்படுகிறார்.
யானைப் பாகர்கள் அதிகமாக யானைகளை வளர்ப்பதையும் கட்டுபடுத்தி நிர்வகிப்பதையும் நாம் கண்டிருப்போம். அதவும் இந்தியாவில் நடக்கும் பூசைகளில் மிகவும் சிறப்பாக அவை வணங்கப்படும். ஆனால் ஒரு ஆப்பிரிக்க யானையை அடக்க இதுவரை யாரும் முன்வரவில்லை.
தூக்கமின்மை நாம் நினைப்பதை விட மோசமான விளைவுகளை உங்களிடம் ஏற்படுத்தும்.அது உங்களை சுற்றியுள்ள மக்களைச் எதிரிகளைப் போல பார்க்க வைக்கிறது. உங்களுக்கு தூக்கம் முழுமையில்லாத ஒரு நாளில் இவ்வாறன நிலை ஏற்படுவதை உணர்ந்திருப்பீர்கள். எல்லோர் மேலும் எரிந்து விழுவோம்.
உங்கள் கைகளின் தோலில் தோன்றும் சுருக்கங்கள் (உதாரணமாக ஒரு குளியல் எடுத்த பிறகு) உங்கள் உடல் பாதுகாப்பில் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றன. உங்கள் உடல் அதிக அளவு ஈரப்பதத்தை எதிர்கொள்ளும்போது, சூழல் வழுக்கும் என்பதை இது புரிந்துகொள்வதால் இந்த நிகழ்வு ஏற்படுகிறது. எனவே உங்கள் கைகளில் உள்ள தோல் உடனடியாக மாற்றத் தொடங்குகிறது, இது மென்மையான மற்றும் வழுக்கும் மேற்பரப்புகளைப் பிடிப்பதை எளிதாக்கும்.
இடதுபுறத்தில் உள்ள படம் ஒரு மெழுகுவர்த்தி பூமியில் எரியும் போது எப்படி இருக்கும் என்பதாகும்; வலதுபுறத்தில் இது மிர் என்ற விண்வெளி நிலையத்தில் காணப்படுவது போல் பூஜ்ஜிய ஈர்ப்பு விசையில் எரிகிறது. அதாவது புவியீர்ப்பு விசை இல்லாத இடத்தில் நெருப்பு கோளமாக மாறி விடும்.
மூக்குக்கும் மேல் உதட்டிற்கும் இடையிலான பள்ளம் பில்ட்ரம் என்று அழைக்கப்படுகிறது. இந்த சிறிய உள்தள்ளல் உங்கள் தாயின் வயிற்றில் செலவழித்த நேரத்தை நினைவூட்டுவதாகும். உங்கள் முகத்தின் இரு பக்கங்களும் ஒன்றுக்கொன்று சுயாதீனமாக உருவாகி, உங்கள் முகத்தின் நடுவில் வந்து சந்தித்து, பில்ட்ரத்தை உருவாக்குகின்றன. இந்த இரு பக்கங்களும் சரியாக இணைக்கத் தவறும் போது, இதன் விளைவாக ஒரு பிளவு அண்ணம் உருவாகிறது. இது ஒவ்வொரு 750 பிறப்புகளில் ஒன்றில் நிகழ்கிறது.
சுற்று பிட்டம் பரிணாம வளர்ச்சியால் தீர்மானிக்கப்பட்டது. எங்கள் மூதாதையர்களின் முக்கிய தொழில் வேட்டையாடுவதும், இரையைப் பிடிப்பதற்காகவும் குறைந்தபட்சம் வேகமாக ஓடுவதற்கோ அமைந்திருந்தது அத்தகைய பணிக்கு நன்கு கட்டமைக்கப்பட்ட பிருஷ்டம்/ பிட்டம் ஒரு பெரிய உதவியாக அமைந்திருக்கும்.
பெண்களின் இதயங்கள் ஆண்களின் இதயத்தை விட வேகமாக துடிக்கின்றன. ஆனால் ஆண்களின் இதயங்கள் மிகப் பெரியவையாக அமைந்துள்ளன.
இது போன்ற சுவாரசியமான தகவல்களுக்கு எமது பக்கத்தின் பல்சுவை பகுதியை நாடவும்