சிந்திக்கக் கூடிய கதைகள், தருணங்கள், தகவல்கள் மற்றும் வித்தியாசமான படைப்புக்களுடன் செவ்வாய் தோறும் சிந்தனை செவ்வாய் உங்களுக்காக, இரண்டாவது பதிப்பில் சும்மா
சும்மா
சும்மா இதை படியுங்கள். நிச்சயம் நீங்கள் அசந்துதான் போவீர்கள்
உலகில் தோன்றிய பல மொழிகள் அழிந்து இருந்த இடமே தெரியாமல் போயிருக்கின்றன.தமிழ் மட்டும் இன்றளவும் பேச்சிலும், எழுத்திலும் நீடித்து நிலைத்து தன்னையும், தான் சார்ந்த இனத்தையும் பெருமைப் படுத்திக் கொண்டி ருக்கிறது.
அடிக்கடி நாம் பாவிக்கும் வார்த்தை தான் இது. அது சரி சும்மா என்றால் என்ன? பேச்சு வழக்கு சொல்லாக இருந்தாலும் தமிழ் மொழியில் உள்வாங்கப்பட்டுள்ள ஒரு வார்த்தை இது.
சும்மா என்கிற இந்த வார்த்தைக்கு மட்டும் தமிழில் 15 அர்த்தங்கள் உண்டு என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
வேறு மொழிகளில் இல்லாத சிறப்பினை, நாம் அடிக்கடி கூறும் இந்த வார்த்தை எடுத்துக் காட்டும்.
- கொஞ்சம் சும்மா இருடா? (அமைதியாக/Quiet)
- கொஞ்ச நேரம் “சும்மா” இருந்து விட்டுப் போகலாமே? (களைப்பாறிக்கொண்டு/Leisurely)
- அவரைப் பற்றி “சும்மா” சொல்லக்கூடாது?
(அருமை/in fact) - இது என்ன “சும்மா” கிடைக்கும்னு நினச்சியா?
(இலவசமாக/Free of cost) - “சும்மா” கதை அளக்காதே?
(பொய்/Lie) - “சும்மா” தான் இருக்கு.
நீ வேண்டுமானால் எடுத்துக் கொள் – (உபயோகமற்று/Without use)
- “சும்மா” “சும்மா” கிண்டல் பண்ணுறான். (அடிக்கடி/Very often)
- இவன் இப்படித்தான்.. சும்மா சொல்லிக்கிட்டு இருப்பான். (எப்போதும்/Always)
- ஒன்றுமில்லை “சும்மா” சொல்கின்றேன் – (தற்செயலாக/Just)
- இந்த பெட்டியில் வேறெதுவும் இல்லை “சும்மா” தான் இருக்கின்றது. (காலி/Empty)
- சொன்னதையே “சும்மா” சொல்லாதே (மறுபடியும்/Repeat)
- ஒன்றுமில்லாமல் “சும்மா” போகக் கூடாது – (வெறுங்கையோடு/Bare)
- “சும்மா” தான் இருக்கின்றோம் – (சோம்பேறித்தனமாக/ Lazily)
அவன் சும்மா ஏதாவது உளறுவான் – (வெட்டியாக/idle)
எல்லாமே சும்மா தான் சொன்னேன் -(விளையாட்டிற்கு/Just for fun)
நாம் அன்றாடம் பாவிக்கும் இந்த சும்மா என்கிற ஒரு சொல். நாம் பயன்படுத்தும் இடத்தின்படியும், தொடரும் சொற்களின் படியும், பதினைந்து விதமான அர்த்தங்களைக் கொடுக்கிறது என்றால் அது சாதாரணம் இல்லை
சிந்தித்தீர்களா இதனை..?
உலகில் உள்ள மற்ற மொழி அனைத்தும் வாயினால் பேச, செவிக்குக் கருத்தை உணர்த்துகின்றவை
ஆனால் தமிழ் மொழி இதயத்தாலே பேசி இதயத்தால் உணர வைக்கும் மொழியாகும்.
இது போன்ற சிந்திக்க வைக்கும் கட்டுரைகளை எமது சமூகவியல் மற்றும் கதைகள் பகுதிகளில் காணலாம்.
எம்மை எமது பேஸ்புக் பக்கத்தில் பின்தொடரவும்