சோடியம் இருகாபனேற்று என அழைக்கப்படுகின்ற அப்பச்சோடாவானது நமது சமையல் பயன்பாட்டுக்கும் மேலதிகமாக பல வீட்டு செயற்பாடுகளுக்கு பயனுள்ள ஒரு பொருள். உங்களுக்கு சமையலைக் கடந்து சிறிது பயன்படலாம் என்று ஓரளவு எண்ணம் இருக்கலாம்: ஆனால் அதனைக்கடந்து பல சுகாதார நன்மைகளையும், பல வித்தியாசமான பயன்களையும் உடையது. அவ்வாறான 15 நன்மைகளைக் காண்போம்.
சமையல் யுக்திகள்
- மென்மையான ஒம்லேட்டுகள்
முட்டைகளை விரும்பி சாப்பிடாதவர்களையும் சாப்பிடச்செய்ய இது சிறந்த முறை. மூன்று முட்டைகளுக்கு அரைத் தேக்கரண்டி அப்பச்சோடா என்ற வீதத்தில் கலக்கும்போது அவை முட்டைகளில் காபனிரோட்சைட்டு வாயுவை குமிழிக்கச்செய்து முட்டையை மென்மையாக்கும் அத்துடன் சுவையும் சிறப்பாக இருக்கும்.
- காய்கறிகளை சுத்தப்படுத்துங்கள்
உங்களுடைய காய்கறிகள் மற்றும் பழங்களை பூச்சி, பீடைகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ள இது சிறந்த வழி. ஒரு தேக்கரண்டி அப்பச்சோடாவினை இரண்டு குவளை நீரில் கலந்து அதற்குள் உங்கள் பழங்கள் மற்றும் காய்கறிகளை மூழ்க வைத்து எடுக்கவும் / சுத்தமான ஸ்போஞ் கொண்டு உரஞ்சவும்.
அப்பச்சோடாவால் சுத்தப்படுத்தல்
- கம்பளிகளையும் கார்ப்பெட்களையும் சுத்தப்படுத்தல்
உங்களுடைய கம்பளிகளில் அல்லது கார்பெட்டுகளில் அழுக்கு இருப்பின் அதன் மீது சோடியம் இருகாபனேற்றை சிறிதளவு தூவி விட்டு அதன் மீது சுடுநீரை ஊற்றி இரவுமுழுவதும் ஊற அனுமதிக்கவும். பின்னர் வெற்றிட சுத்தமாக்கி (vaccum cleaner) மூலம் சுத்தப்படுத்தி விடலாம். சிறிது பிடிவாதமான கறை எனின் இந்தக் கலவை மீண்டும் மீண்டும் சில தடவைகள் இடுவதன் மூலம் சுத்தமாக்கலாம்.
- வாய்சுத்தமாக்கி
வாய் துர்நாற்றத்தால் அல்லலுறுகிறீர்களா ? பற்தூரிகை அடையாத இடங்களையும் அடைய சிறந்த வழி, வாய் சுத்தமாக்கி (மவுத் வாஷ்). வெதுவெதுப்பான நீரில் அரைத் தேக்கரண்டி அப்பச்சோட இட்டுக் கலக்கி வாய் கொப்பளியுங்கள். புத்துணர்வு சுவாசம் மற்றும் கிருமிகளற்ற வாய் தயாராகி விடும்.
- பற்தூரிகையை சுத்தப்படுத்தல்
தினமும் வாய்க்குள் செல்லும் பற்தூரிகை சுத்தமாக இருப்பது அவசியம். சிறிதளவு சோடியம் இருகாபனேற்று இட்டு அதில் வினிகர் மற்றும் நீரை சேர்த்து முப்பது நிமிடங்கள் வைத்து எடுத்தால் சுத்தமான தூரிகை தயார்.
- அடிப்பிடித்த பாத்திரம்
அடிப்பிடித்த பாத்திரங்களை கறை நீக்குவது வேண்டாத வேலை. அனால் அதனை சற்று இலகுவாக்க அப்பச்சோடாவை இட்டு கொதிநீரை ஊற்றவும். பசைத்தன்மையாக மாற அனுமதித்து பின்னர் சுரண்டினால் கரைகள் நீங்கும்.
வேறு நன்மைகள்
- மணம் நீக்கும் பொருள்
சிறிதளவு நீரும் சோடியமிருகாபனேற்றும் கலந்து உங்களுடைய கைகளுக்கு கீழ் (அக்குள்) பகுதியில் பயன்படுத்தும் போது சுத்தமாக மற்றும் புத்துணர்வாக இருக்கும். இது உங்கள் உடலை இரசாயனங்களுக்கு அர்ப்பணமாக்குவதை விட நல்ல வழி.
- வெண்மையான மற்றும் பளிச்சென்ற ஆடைகள்
ஆடைகளை துவைக்கும்போது, உங்கள் வழக்கமான துவைக்கும் பொடியுடன் ஒரு குவளை அப்பச்சோடாவையும் கலந்து விடுங்கள். சோடியம் இருகாபனேற்று ஓர் காரம் என்பதால் அமிலங்களுடன் தாக்கம் புரிந்து கறைகளை அகற்றி பளிச்சிட உதவும்.
- வெள்ளியை துலக்குதல்
வெள்ளிப் பொருட்கள் காலத்துடன் கறுத்துப்போகும். அவற்றை மீண்டும் பளிச்சிட செய்ய முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். வெள்ளியை கறுக்கச்செய்யும் வெள்ளி ஒட்சைட்டுகளுடன் சோடியம் இருகாபனேற்று சுடுநீரில் தாக்கம் புரிந்து அதனை வீழ்படிவாக்கும். ஆகவே சுடுநீரில் வெள்ளிப்பாத்திரங்களை இட்டு சோடியம் இருகாபனேற்று இட மீண்டும் பளிச்சிடும்.
- பூச்சிக் கடிகளுக்கு எதிராகப் பயன்படுத்தலாம்
அப்பச்சோடாவை அடிக்கடி உங்கள் தோலில் பயன்படுத்துவது நன்மையல்ல. ஆனால் சிவத்தல், சொறிதல் மற்றும் சுனைத்தல் போன்ற பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு. கடித்த பூச்சி அமிலத்தன்மையுடைய பூச்சியானால் இது நல்ல தீர்வு.
- புற்றுநோய் சிகிச்சை
புற்றுநோய் சிகிச்சைகளுக்கு கீமோதெரப்பி சிறந்த ஒரு முறையாகும். அப்பச்சோடவை பயன்படுத்தும் போது புற்றுநோய்க் கலங்கள் வளர்வதற்குத் தேவையான அமிலச்சூழலை தடுக்க முடியும்.
- பீடை அகற்றி
உங்களுடைய வீட்டின் வெளிமூலைகளிலும் நடைபாதைகளிலும் சிறிது அப்பச்சோடாவை தூவிவிட களைகள் கொஞ்சம் கொஞ்சமாக இல்லாமல் போவதை காணலாம்.
ஸ்பா பராமரிப்பு
- குளித்தல்
உங்கள் வீட்டிலேயே உள்ள குளியறையில் ஸ்பா செய்யலாம். உங்களுடைய முன் செயற்பாடுகளை செய்து விட்டு, குளிக்க முன் நீரை சூடாக வைத்துக்கொள்வதோடு அதில் சிறிதளவு பன்னீரையும் அப்பச்சோடவையும் இட்டு கலக்குங்கள். சுத்தமான நறுமணமான உடல் உங்களுடையதாக இருக்கும்.
- வெண்மையான நகங்கள்
உங்களுடைய நீண்ட கால பூச்சால் நகங்கள் மஞ்சளடித்து விட்டதா ? சிறிதளவு பெரோக்சைட்டுடன் அப்பச்சோடாவைக் கலந்து நகங்களில் இட்டுத் துடையுங்கள். பழைய வெண்மையான நகங்கள் தயார்.
- பொடுகுத்தொல்லை நீங்க
பல வழிகள் தேடியும் கிடைக்கவில்லையா ? இது இன்னொரு சிறந்த வழி. கையளவு அப்பச்சோடா கொண்டு ஒரு வாரம் தலையை மசாஜ் செய்து (ஷாம்பூவை தவிர்க்கவும்) வர பொடுகு குறைவதற்கான வாய்ப்புகள் ஏராளம் உள்ளது
கம்பளிகளை மடித்து வைக்க முன்னர் என்ன செய்ய வேண்டும் தெரியுமா ? இங்கே படிக்கவும்
Wall Image source: https://parenting.firstcry.com/articles/baking-soda-for-babies-benefits-and-ways-to-use/