நாம் வாழும் இந்த உலகில் நம்மை விட வித்தியாசமான நம் அறிவுக்கு எட்டாத பயங்கரமான விலங்குகள் வாழ்கின்றன.வெறுமனே நகத்தையும், பல்லையும் கொண்டு தாக்கும் விலங்குகளை விட வேறு சில நுணுக்கமான முறைகளால் நம்மைக் கொள்ளக்கூடிய விஷம் படைத்த விலங்குகள் உள்ளன. அவ்வாறான விலங்குகள் பற்றி பார்ப்போம்.
அதற்கு முன்பதாக சிறிய எச்சரிக்கை;விலங்குகளுடைய உண்மையான மற்றும் நெருக்கமான புகைப்படங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. பார்வையாளர்கள் விவேகத்துடன் நடந்து கொள்வது வரவேற்கத்தக்கது. இவற்றிலுள்ள விலங்குகள் பற்றிய தகவல்கள் குறித்த தகவல் குழுமத்துக்கு ஏற்ப வேறுபடலாம். உதாரணமாக சிலர் அதிக பேரை கொல்லகூடிய விஷத்தை கொடியது என்பர். சிலர் குறுகிய நேரத்தில் கொள்வதை கொடியது என்பர். வாருங்கள் இந்த விசித்திர பயணத்துக்குள் போவோம்….
உலகிலேயே மிகவும் விஷம் நிறைந்த 10 விலங்குகள்.
- பொக்ஸ் ஜெல்லி மீன்
உலகின் மிகவும் விஷம் வாய்ந்த விலங்கு என்ற பட்டத்தைப் பெறுகிறது பொக்ஸ் ஜெல்லி மீன். 1954 முதல் குறைந்தது 5567 மரணங்களையாவது சம்பவித்திருக்கிறது இந்த ஜெல்லி. இதன் விடமானது, உங்கள் இதயம், நரம்புத்தொகுதி மற்றும் கலங்களைத் தாக்கும். இதில் பயங்கரமான விஷயம் என்னவென்றால் இது உச்சக்கட்ட வலியைக் கொடுத்து நீங்கள் கரையை அடைய முன்னரே உங்களை மூழ்கடித்து அல்லது இதயத்தை நிறுத்தி கொன்று விடும். உயிர் பிழைத்தவர்கள் தாக்கத்துக்குப் பிறகு வாரங்கள் கடந்தும் குணப்படவில்லை.
2. ராஜ நாகம்
ராஜ நாகம்தான் இந்த உலகின் மிக நீளமாக வளரக்கூடிய (5.6m) விஷப் பாம்பினம். இது பாம்புண்ணி என்றும் அழைக்கப்படுகிறது.அதாவது ஏனைய சிறிய பாம்புகளை சாப்பிடும். இதன் ஒரு கடி நன்கு வளர்ந்த மனிதனை 15 நிமிடத்தில் கொல்லக்கூடியது. தும்பிக்கை போன்ற மென்மையான இடங்களில் கடிபட்டால், நன்கு வளர்ந்த ஆசிய யானையைக் கூட 3 மணி நேரத்தில் கொன்று விடும். இது ப்ளக் மாம்பா போல விடம் உடையது இல்லாவிட்டாலும் அதிகளவு விடத்தை ஒரே நேரத்தில் செலுத்தகூடியது என்பதால் பயங்கரமானது.
3. பளிங்கான கூம்பு நத்தை
பார்க்க அழகாக பளிங்கு போலிருக்கும் இந்த கூம்பு நத்தை மிகவும் கொடூரமானது. அதன் ஒரு சொட்டு விஷம் 20 மனிதர்களைக் கொல்லப் போதும். இது வெதுவெதுப்பான உப்பு நீர்ப் பிரதேசங்களில் வாழும். இதனைக் கண்டால் கையில் எடுப்பதைப் பற்றி நினைக்கக் கூட வேண்டாம். இதன் விஷத்துக்கு எதிர் விஷம் இல்லை. கடித்தால் மூச்சுக் கோளாறு, பக்கவாதம் போன்ற நிலைகள் கூட ஏற்படலாம்.
4. நீல வளைய ஒக்டோபஸ்
இது மிகச்சிறியது. அதிக பட்சமாக கோல்ப் பந்து அளவு இருக்கும். ஆனால் 26 மனிதர்களைக் கொல்லகூடிய அளவு பயங்கர விஷத்தைக் காவித்திரியும். இதற்கும் மருந்து இல்லை.இதன் வலியில்லாத கடி பயங்கரமாகத் தெரியா விட்டாலும், தசை செயலிழப்பு மற்றும் மந்தத்தன்மையுடன் சுவாசக் கோளாறையும் ஏற்படுத்தி மரணத்தை உண்டாக்கும்.
5. கொலையாளித் தேள்
சாதரணமான தேள்களால் மனிதருக்கு பெரும் ஆபத்தில்லை. ஏனெனில் அவை சாதாரணமாக கடித்தால் எரிச்சல், கடுப்பு முதலியன மட்டுமே எழும். ஆனால் கொலையாளித் தேள் கடித்தால் தாங்கமுடியாத வலி ஏற்பட்டு, காய்ச்சல் ஏற்பட்டு, வலிப்பு எடுத்து, கோமா நிலைக்கு சென்று மரணிப்பீர்கள். ஆனால் இது எல்லாருக்கும் அல்ல. சற்று ஆரோக்கியமான ஒருவரை அவ்வளவு மோசமாக பாதிக்காது. சிறுவர் முதியோர் கவனமெடுப்பது நல்லது.
6. கல்மீன்
கல் மீன் உலகின் அழகான மீன் அல்லாவிட்டாலும் உலகின் மிகப் பயங்கரமான மீன் அல்லது விஷமிக்க மீன் என்ற பட்டத்தை வெல்லக்கூடியது. அதன் முதுகுப் பகுதியில் ஒவ்வொன்றும் இரண்டு விஷப் பைகளுடன் இணைக்கப்பட்ட 13 முள்ளந்தண்டெலும்புகள் நீட்டிக் கொண்டிருக்கின்றன. இவற்றின் விஷம் உள்ளிறங்கும் அளவைப் பொறுத்து தசை செயழிலப்பு, முடக்குவாதம், அதிர்ச்சி போன்றன ஏற்பட வாய்ப்புண்டு. பாதிக்கப்பட்டவர்கள் கருத்துப்படி, இதனை மிதித்தால் அந்த காலை வெட்டி நீக்க வேண்டி ஏற்படுமாம்.
7. பிரேசிலின் அலையும் சிலந்தி
பிரேசிலின் அலையும் சிலந்தி அல்லது வாழைப்பழ சிலந்தி 2007 ஆம் ஆண்டு கின்னஸ் புத்தகத்தில் அதிக மரணங்களை சம்பவித்த உயிரினமாக பதிவானது. சிலந்தி வகைகளிலேயே மிகவும், சக்திவாய்ந்த விடம் கொண்டது இது என நம்பப்படுகிறது. அதன் விஷத்தின் 0.006 mg கொண்டு ஒரு எலியைக் கொல்லலாம். இது வீட்டு சுற்றுப்புறங்களில் அலைந்து திரிவதால் இன்னும் அபாயகரமானது. மிகவும் பயங்கரமான வலியை மட்டுமன்றி தசை நோ மற்றும் ஏனைய நரம்பு வியாதிகளையும் கொடுக்க வல்லது.
8. உள்நில தாய்ப்பன்
உலகின் மிகப்பயங்கரமான விஷம் படைத்த பாம்பு என்ற பட்டம் இதற்குத்தான். இதன் ஒரு கடி 100 மனிதர்களையும் 250,000 எலிகளை கொண்ட படையையும் கொல்லப் போதுமானது. சாதாரண நாகத்தை விட 200-400 மடங்கு விஷம் படைத்தது. 45 நிமிடத்தில் வளர்ந்த மனிதனைக் கொல்லக்கூடியது.இந்த பாம்பு சிறிது வெட்க குணமுடையதால் எந்த மரணங்களும் பதிவாகவில்லை.
9. விஷ அம்புத் தவளை
இந்த உலகத்திலயே மிகவும் விஷம் படைத்த தரைவாழ் விலங்கினம் இதுதான். 5cm நீளமுடைய தங்க விஷ அம்புத் தவளை 10 மனிதர்களையும் 20,000 எலிகளையும் கொல்லகூடியது.2 மைக்கிரோ கிராம்கள் (ஊசி நுனியில் வைக்கக் கூடிய அளவு) விஷம் ஒரு மனிதனையோ அல்லது பாலூட்டியையோ கொல்லக்கூடியது. அதனைத் தொடும் அல்லது உண்ணும் எதுவும் இறந்துபோகுமாறு விஷத்தை தோலில் கொண்டிருக்கும்.
10. கோள மீன்
இந்த மீனின் சுவைக்காக இது ஜப்பானில் விரும்பி உண்ணப்படும் உணவாக உள்ளது.இந்த மீனின் விஷம் உடனடி மரணத்தைக் கொண்டு வரும்.இது நாக்கு மற்றும் உதட்டை செயலிழக்க வைப்பதோடு மயக்கம், வாந்தி, உடனடி இதய துடிப்பு அதிகரிப்பு, மூச்சு விடலில் கடினம் என்பவற்றோடு தசை செயலிழப்பையும் கொண்டு வரும்.பெரும்பாலான பாதிக்கப்பட்டோர் 4 – 24 மணி நேரத்துள் மரணித்துள்ளனர்.இது பயங்கரமானது என்பதால் காப்புரிமம் பெற்ற நபர்கள் மட்டுமே இதனை சமைக்கலாம்.
இந்தத் தொகுப்பு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இது போன்ற சுவாரசியமான தகவல்களுக்கு எங்கள் பக்கத்தை பார்வையிடவும்.
Image source :https://www.wallpaperup.com/614641/black_mamba_snake.html