இயற்கை தான் எவ்வளவு அழகானது. நமக்கு தேவையான எல்லாமே வழங்குவது, தேவையற்றவற்றை நீக்குவது, அழகைப் படைப்பது, ரசிக்க வைப்பது என எல்லாமே இயற்கை தான். அவ்வாறு இயற்கையில் மிக அழகான இடங்கள் பற்றி பார்ப்போம்.
CAPPADOCIA – துருக்கி
Image source : https://www.al-monitor.com/pulse/originals/2019/12/cappadocia-a-winter-wonderland.html
இயற்கையில் மிகவும் விசித்திரமான விடயங்கள் அழகாக இருக்கும் என்பதற்கு இந்த இடம் வாழும் உதாரணம். தேவதைக் கதைகளில் இருந்து பெயர்த்து எடுக்கப்பட்ட நிலப்பரப்பும், ஏலியன்கள் வசிப்பதை போன்ற மலைகளும், வேறு கிரகங்களில் இருந்து எடுக்கப்பட்ட கற்களும் இணைந்து உருவானது போன்று ஓர் அழகிய இடம் இது. இங்கு இதற்கு முன்பு வாழ்ந்த மனிதர்கள் இங்கிருந்த மெல்லிய கற்களைப் பயன்படுத்தி உருவாக்கி இருக்கின்ற கட்டிட இடிபாடுகள் இன்றும் பார்க்க அழகாக இருக்கின்றன.
இந்த இடத்திலிருந்து நிலவோடு காட்சி மிக அருமையாக இருப்பதோடு இந்த இடத்தை பலூன்களில் பறந்து வந்து ரசிக்கக் கூடியதாக இருக்கிறது. சிவப்பு, மஞ்சள், செம்மஞ்சள் மற்றும் வெள்ளை கிரீம் நிறம் போன்ற அனைத்தும் இணைந்து இந்த இடத்தை மிகவும் அழகாக மாற்றியிருக்கின்றன
வெள்ளைச் சுவர்க்க கடற்கரை – அவுஸ்திரேலியா
Image source : https://theculturetrip.com/pacific/australia/articles/a-brief-guide-to-whitehaven-beach-queensland/
எழு கிலோமீட்டர்கள் பரந்து இருக்கின்ற வெள்ளைநிற மணல் இந்த இடத்துக்கே உரிய மிகவும் அழகான விடயமாக காணப்படுகிறது. இங்கே கடல் நீரானது ஒரு அவுரா போல வேறுபட்ட நிறங்களில் காட்சியளிப்பதால் நீங்கள் ஓய்வெடுக்க மிகவும் சிறந்த இடமாக இருக்கின்றது. இந்த இடத்தை ரசிக்க வேண்டுமானால் அங்கு நாவு பகுதி என்று சொல்லப்படுகின்ற இடத்துக்கு போக வேண்டும். குறைந்த அலைகளைக் கொண்ட நாட்களில் சென்றீர்கள் ஆனால் உங்களுக்காக மிக அழகான கடல் காட்சி காத்திருக்கிறது.
தேவதைகளின் குளியல் தொட்டி – ஸ்கொட்லாந்து.
Image source : https://giasbellavita.com/2018/04/03/bucket-list/
இதனை நீங்கள் பார்க்கின்ற நேரத்தில் உங்களுக்குள் நேரடியாக தேவலோக உணர்வு ஏற்படும். காண வரும் அனைவரையும் கொள்ளை கொள்கின்ற துல்லிய தெளிவான தண்ணீர், காட்சிக்கு இதமான மற்றும் மாயாஜால தனமான சூழல் இந்த இடத்தின் முக்கிய அம்சங்கள். இங்கே இருக்கின்ற நீரானது சில்லிடும் குளிராக இருந்தாலும் நீங்கள் அதிரடி நீச்சல் விரும்பி என்றால் இது உங்களுக்கான இடம். இங்கே அழகிய நீல நிற குளங்கள் தனித்தனியாகவும் இருக்கின்றன. அதைத் தவிர கற்களால் சூழப்பட்ட ஒரு முடிவிலி குளமும் இருக்கிறது. நீச்சல் விருப்பம் இல்லாவிட்டால் அவற்றைப் பார்த்து ரசிக்கலாம்.
பாரிய பள்ளத்தாக்கு தேசிய பூங்கா – அமெரிக்கா
Image source : https://www.abc15.com/news/national/fatal-falls-are-not-the-main-reason-people-die-at-grand-canyon-national-park
ஐந்து மில்லியன் மக்கள் வருடாந்தம் இந்த இடத்தைச் சென்று பார்ப்பதற்கு காரணம் இல்லாமல் இல்லை. பார்ப்பதற்கு மாயாஜாலம் போல தோன்றும் இந்த இடம் கண்களுக்கு ஒரு மிகச்சிறந்த விருந்தாகும். இதனைப்பற்றி நீங்கள் எவ்வளவு வாசித்தாலும் நேரில் பார்க்கும் பொழுது நிச்சயம் அது உங்களை ஆச்சரியப்படுத்த தவறாது. ஏழு அதிசயங்களுள் ஒன்றாக கருதப்பட்ட ஒரு அழகிய கலை அம்சம் இந்த இடம். இது வடக்கு கிழக்கு மற்றும் தெற்கு என மூன்று பாகங்களாக பிரிந்து இருந்தாலும் அதிகமான மக்களால் விரும்பி பார்க்கப்படுவது தெற்கு பிரதேசமே. சூரிய எழுச்சியும் – சூரிய வீழ்ச்சியும் இந்த இடத்தில் தெரிவதைப் போல அழகாக வேறு எங்குமே தெரியாது என்கிறார்கள் மக்கள்.
ஹுவாகச்சினா – பெரு
Image source :https://peru.info/en-us/tourism/news/3/16/huacachina–the-natural-oasis-of-the-americas
இந்த பாலைவனச்சோலை தன்னுடைய தனித்துவத்தாலும், அழகாலும் உங்களை முற்றிலுமாக கவர்ந்து இழுக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. பாலைவனத்திற்கு நடுவில் ஒரு இடத்தில் அமர்ந்திருந்து அடிவானம் மஞ்சள் போன்ற பல்வேறு நிறங்களில் சூரியனை பிரதிபலிப்பது பார்க்கும் கொள்ளை கொள்ளும் காட்சியை நினைத்துப் பாருங்கள். மிகவும் சொகுசு வாய்ந்த விடுதிகளிலும் பனை மரங்களாலும் சூழப்பட்ட பாலைவனச் சோலையாக இது அமைந்திருக்கிறது. புதிர்களுக்கும் ,அதிரடிக்கும் ,காதலுக்கும் இது மிகச்சிறந்த இடம்.
Salar de Uyeni – பொலிவியா
Image source : https://www.nationalgeographic.com/travel/destinations/south-america/bolivia/how-to-see-salar-de-uyuni-salt-flats-bolivia/
உலகின் மிகப்பெரிய உப்பளங்கள் இவைதான். அதுமட்டுமில்லாமல் மிகவும் அழகானவையும் பார்ப்பதற்கு ஒரு ஓவியம் போல் தெரிய கூடியவையும் ஆகும். தென்னமெரிக்காவின் கண்ணாடியாக இதனை கருதுகிறார்கள். இந்தப் பரந்த பாலைவனத்தின் அழகு உங்களை பேச்சு இழக்கச் செய்யும்.
Plitvice அருவி இயற்கை பூங்கா – குரோசியா
Image source : https://www.chasingthedonkey.com/plitvice-lakes-national-park-vs-krka-or-plitvice/
இந்த பட்டியல் மட்டுமல்ல உலகத்தின் எந்த அழகான இடங்களின் பட்டியலை எடுத்துப் பார்த்தாலும் இந்த இடம் இல்லாமல் நிறைவு பெறாது. இந்த மிரளவைக்கும் அழகிய பூங்கா மற்றும் மிகவும் புகழ்பெற்ற அதன் 16 தெளிவான ஓடைகள் பல நீர்வீழ்ச்சிகள் மூலமாக ஒன்றாக இணைந்து பயணிக்கின்ற அழகை பார்க்க இரண்டு கண்கள் போதாது. நீங்கள் இந்த பூங்காவினை ஒட்டு மொத்தம் 18 கிலோமீட்டர்களையும் மர நடைபாதைகள் மூலமாகவும் பாலங்கள் மூலமாகவும் அங்கங்கு வெளிப்படும் பாம்புகளோடு இணைந்து கண்டுகளிக்கலாம். கூட்டம் கூட்டமாக பறந்து திரியும் வண்ணத்துப் பூச்சிகளும் உங்களை இந்த பயணத்தில் உற்சாகமூட்டும். வருடாந்தம் 12 லட்சம் பேரை இந்த இடம் ஈர்க்கிறது என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை.
Milford sound – நியூசிலாந்து
Image source :https://www.telegraph.co.uk/travel/destinations/oceania/new-zealand/articles/Milford-Sound-New-Zealand-how-to-visit-cruises-and-the-best-tours/
சிட்னியின் ஒபேரா மண்டபம், வெயிடோமோ குகைகள், உலகின் மிகப்பெரிய முருகை பாறைகள், சிட்னியின் துறைமுகப் பாலம் என அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நீங்கள் பலவற்றில் ஆழ்ந்து போயிருக்கலாம். ஆனால் Milford sound இனை கண்ட மாத்திரத்தில் மற்றவை எல்லாம் உங்களுக்கு மறந்து போய்விடும். இந்த 1692 மீட்டர் உயரமான மலைகள் உங்களுக்கு லார்ட் ஆஃப் த ரிங்க்ஸ் திரைப்படத்தின் கதைகள் அனைத்தையும் நினைவுபடுத்தும். இதனைப் பார்க்கும் முதல்பார்வையிலேயே உங்கள் வயிற்றுக்குள் பட்டாம்பூச்சிகள் பறப்பதை உணரலாம். வருடாந்தம் ஐந்து லட்சம் பேர் இந்த இடத்துக்கு ஈர்க்கப்படுவதாக தரவுகள் கூறுகின்றன.
வானவில் மலைகள் – சீனா
Image source : https://steemit.com/travel/@dazzy/the-surreal-destination
உங்களுக்கு பாரிய பள்ளத்தாக்கு பிடிக்கும் என்றால் அதனை விடவும் அழகான ஒரு இடம் ஆசியாவிலேயே இருக்கிறது. அந்த இடம்தான் வானவில் மலைகளின் தேசிய புவியியல் பூங்கா. பாரிய பள்ளத்தாக்கை போலவே மிகவும் ஈர்க்கக் கூடியது கண்களை மயக்கும் மரூன், அஜந்தா மற்றும் மஞ்சள் பச்சை ஆகிய நிற கனியுப்பு படிமங்களையும் மணற் பாறைகளையும் கொண்டது.
மாச்சு பிச்சு – பெரு
Image source : https://www.actionperutreks.com/blog/important-info-travelers-machu-picchu-summer/
இன்கா இன மக்களின் தொலைந்துபோன நகரமாக கருதப்படும் மாச்சு பிச்சு 1450 களில் கட்டப்பட்டு ஸ்பானிய வெற்றிக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை மக்களால் பயன்படுத்தப் பட்டதாக கூறப்படுகிறது. இந்த நகரமானது கண்டுபிடிக்கப்பட்ட பின்பும் இருபதாம் நூற்றாண்டுகளில் முற்பகுதி வரையான காலப்பகுதிக்கு அனைவராலும் மறக்கப்பட்டு இருந்தது. இது காணப்படும் மலைக்கு மேலே ஏறுவது ஒரு தனி சுவாரஸ்யம் என்றால் சற்றும் சிதைவடையாமல் நிற்கின்ற இந்த நகரத்தை பார்ப்பது ஒரு தனிச் சுவை.
ஆகவே நாம் நமது உலக சுற்றுலாவை முடித்தாகி விட்டது. இந்த இடங்கள் உங்களுக்கும் பிடித்திருக்குமென நம்பலாம். அடுத்ததாக உலகில் மிகவும் பயங்கரமான இடங்களின் பட்டியலைப் பார்வயிடுவோமா ? இங்கே அழுத்துங்கள்.