மெக்சிகோவின் புதிய சட்டரீதியான கஞ்சா தொழில்துறை
கடந்த வாரம் VICE ஆனது வெளியிட்ட அறிக்கையொன்றில் எவ்வாறு மெக்ஸிகோவின் சுயாதீன விவசாயிகள் சிலர் சட்டரீதியான கஞ்சாவை உற்பத்தி செய்கின்றனர் என்பது தொடர்பாக குறிப்பிடப்பட்டிருந்தது. முன்னர் தங்களுக்கு தடையை உருவாக்கிய போதை மருந்து வியாபார கும்பல்களை அவர்கள் இம்முறை இணைத்துக்கொள்ளவில்லை. இதன் மூலம் நாடானது சட்டரீதியாக சந்தையை உருவாக்க விழைவது தெரிகிறது.
கஞ்சாவை சட்டரீதியாக்குவதற்கான முயற்சிகள் ஒக்டோபர் 2018 இல், மெக்சிகன் உச்ச நீதிமன்றம், “தனிநபருக்கான போதைப்பொருள் பாவனைக்கு எதிரான தடையானது சட்டத்துக்கு புறம்பானது” என அறிவித்ததில் இருந்தே ஆரம்பமாகின. அவர்கள் மெக்சிகோவின் சட்டவாக்க சபையினரை கஞ்சாவின் சட்டரீதியான உற்பத்தி மற்றும் பயன்பாட்டுக்கான மசோதாவை முன்வைக்குமாறு கேட்டுக்கொண்டனர்.
எவ்வாறு செயல் வடிவம் பெறுகிறது ?
ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு தற்போது அதற்காக வகுக்கப்பட்ட சட்டகங்கள் செயல் வடிவம் பெறுகின்றன. சட்டரீதியான முறையில் கஞ்சாவை உற்பத்தி செய்வது, வன்முறைமிக்க மெக்ஸிகன் கும்பல்களிடம் இருந்து தங்களுக்கு ஒரு பாதுகாப்பான சூழலை உருவாக்கித்தரும் என அவர்கள் நம்புவதோடு, தங்கள் வீட்டுத் தோட்டங்களிலும், பச்சை வீடுகளிலும் பயிரிடவும் ஆரம்பித்து விட்டனர்.VICE ற்கு அவர்கள் அளித்த கருத்துப்படி. விவசாயிகள் சுதந்திரமாகவும் தமது தேவைக்காகவுமே இவற்றை உற்பத்தி செய்வதாக கூறியுள்ளனர்.
எல்லா நல்ல செய்திகளோடும், கெட்ட செய்திகளும் வரத்தான் செய்கிறது. முன்னிருந்த அமைப்புகளின் உதவி இல்லாமல் விவசாயிகள் தற்போது இருக்கின்ற உட்கட்டமைப்பை நம்பி வாழ முடியாது. “ அவர்களே தமக்கான போக்குவரத்து சேவைகளை உருவாக்குவதோடு வியாபாரிகளை கண்டுபிடித்து அதனை மெக்சிகோவினை சுற்றிலும் உள்ள நகரங்களுக்கு பரப்புவதற்கும்,அவர்களாகவே வழிமுறைகளை தேட வேண்டி உள்ளது. எவ்வாறாயினும் முன்னர் இருந்த எதிர்ப்புகள மற்றும் மிரட்டல்கள் இம்முறை அவர்களுக்கு இல்லை என்பது ஒரு வகையில் சந்தோஷத்துக்குரிய விடயமே.
விவசாயிகளின் நிலைப்பாடு
“நாம் கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள வேண்டும். கண்டுபிடிப்புக்களே தற்போது விற்பனையை அதிகரிக்கின்றன. விதைகள் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் இருந்து சில ஆண்டுகள் முன்பு வந்துவிட்டன.முதலில் மக்கள் தங்கள் தோட்டத்தில் மட்டுமே பயிரிட்டு வந்தனர். அவர்கள் அதை யாருக்கும் பகிர விரும்பவில்லை. ஆனால் தற்போது தேவைக்கு அதிகமாகி விட்டதால் கட்டயாமாக பகிர வேண்டி உள்ளது.” – Ricardo
மெக்சிகோவின் போதைப்பொருள் தொழில்துறையானது, தேவைக்கும் கேள்விக்குமேற்ப மாறுபடுவதோடு தன்னை இயைபாக்கியும் கொள்கிறது. சட்டரீதியற்ற மெக்சிகோவின் இதற்கான கேள்வியானது அமெரிக்காவில் மாநிலரீதியான சட்டபூர்வமாக்கல் வீழ்ச்சியடைய ஆரம்பித்ததோடு வீழ்ந்து போனது.இது போதைக் கூட்டமைப்புக்களான Sionla மற்றும் Jaliso ஆகியவற்றை தமது பாதையினை ஹெரோயின் மற்றும் கொக்கெயினின் பக்கத்துக்கு திருப்பச் செய்தது.இதன் விளைவாக SInolaவில் வேலை செய்த அனைத்து விவசாயிகளுக்கும் கஞ்ஜா பயிரிடல் நிறுத்தப்பட்டது.
அமெரிக்காவில் கஞ்சாவினால் கிடைத்த ஆதாயத்தை பெற மாற்றீடாக பயன்பட்டு வந்த ஒபியொட், அதிகமாக பயன்படுத்தப்பட்டு தட்டுப்பாடு ஏற்பட்டது.ஆகவே அந்த இடத்தை நிரப்ப ஹெரோயினுக்கு அதிக கேள்வி எழுந்தது. அனால், அதிக விநியோகம் மற்றும் ஒபொயிட் பெடனையில் வருகையோடு அதுவும் சந்தையிழந்தது.
திடமாக மற்றும் நிலையான வியாபார வளர்ச்ச்சியை எது காட்டுகின்றதோ அதுவே சட்டரீதியாக்கபடமுடியும். விற்பனையாளர்கள் கஞ்சாவை “சாதனைகள் கடந்த விற்பனையாக” பதிவு செய்தாலும், COVID-19 காரணாமாக சற்று வளர்ச்சி குன்றியுள்ளது.எவ்வாறாயுனும் புதிய சட்டரீதியாக்க்கப்பட்ட கஞ்சா ஆனது விவசாயிகளுக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளது.
“கேள்வி யாதெனில் இது எவ்வளவு பெரிய சந்தையைக் கொண்டு வரும் என்பதும் சட்டத் துறையினர் இதில் எவ்வாறான தாக்கங்களை செலுத்தவுள்ளனர் என்பதுமே. அவர்கள் சந்தையை திறப்பார்களாயின் துணிகரமான முதலீடுகள் உள்வருவதை நாம் காணக்கூடியதாக இருக்கும்.” –Lopez
எவ்வாறாயினும், மெக்சிகோவின் கஞ்சாக்கள் இவ்வாண்டு இறுதியில் சட்டரீதியாக்கப்பட்டதும், சிறிய அளவிலான விவசாயிகள் கூட பெரிய வியாபாரங்களை விஞ்சி விடுவார்கள்.VICE குறிப்பிடுவதன்படி, இந்த சந்தை வளர வளர மீண்டும் கும்பல்கள் இந்த துறைக்குள் புக ஆரம்பிப்பார்கள். உண்மையிலேயே இத்துறை லாபகரமானதாக மாறினால் விவசாயிகள் தம்மை துப்பாகிகளினுடனான மனிதர்களின் கைப்பிடியில் காண நேரும் என்பதை உணர வேண்டும் என்பதையும் குறிப்பிடுகிறார் LOPEZ.
ஆனால், மெக்சிகன் அரசாங்கத்தால் இந்த சட்டரீதியான் கஞ்சா துறையை முன்னெடுத்துச் செல்ல முடியுமாக இருந்தால்,அது விவசாயிகளுக்கு சாதகமான ஒரு சூழலை உருவாக்கும். ஆனால் அதெல்லாம் இந்த துறை எவ்வளவு தூரம் பெரிதாக வளர்கிறது என்பதிலும் எந்த அளவு கும்பல்களின் தலையீடு இல்லாமல் அரசாங்கம் பார்த்துக் கொள்கின்றது என்பதிலும்தான் உள்ளது.
இதுபோல மேலும் சுவாரசியமான தகவல்களுக்கு இங்கே பார்க்கவும்.
image source: https://unsplash.com/s/photos/hemp-field