Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
சடாரி

சடாரியை ஏன் தலையில் வைக்கிறார்கள்? சடாரி வைப்பதால் என்ன பலன்?

  • November 30, 2021
  • 329 views
Total
1
Shares
1
0
0

இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!! இணையத்தில் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்.

Bhakti News, Lord Vishnu blesses his devottes with Sadari in Temple |  ஸ்ரீசடாரி எனும் நம்மாழ்வார் மூலம் ஆலயங்களில் பக்தர்களுக்கு அருள் புரியும்  விஷ்ணு | Lifestyle News in Tamil

பெருமாள் கோயில்களில் பெருமாளை தரிசித்த பின் பக்தர்களுக்கு துளசி தீர்த்தம் கொடுத்த பிறகு சடாரி எனப்படும் சடகோபத்தை பக்தர்கள் தலையில் வைத்து பின்பு எடுப்பார்கள். நம்மில் இக்காட்சியை காணாதவர்கள் இல்லை.

எதற்காக அந்த சடாரி வைக்கப்படுகிறது? சடாரி என்ற பெயர் எப்படி வந்தது? சடாரியை ஏன் தலையில் வைக்கிறார்கள்? போன்றவற்றை பற்றி பார்க்கலாம் வாங்க

சடாரி என்றால் என்ன?

சடாரியை ஏன் தலையில் வைக்கிறார்கள்? சடாரி வைப்பதால் என்ன பலன்?

சடாரி அல்லது சடகோபம் என்பது திருமாலின் திருப்பாதம் பொறிக்கப்பெற்ற கிரீடமாகும். இந்த சடாரி வைணவ கோயில்களில் இறை தரிசனத்திற்கு பிறகு, பெருமாளின் திருவடிகளாக பாவித்து, பக்தர்களின் தலையில் வைத்து எடுக்கப்படுகிறது.

சடம் ஹரி (பாதம்) ஸ்ரீ சடாரி என்று அழைக்கப்படுகிறது.

சடாரி வைக்கும் பொழுது பணிந்து புருவங்களுக்கு நடுவில் வலக்கையின் நடுவிரலை வைத்து மூக்கு மற்றும் வாயை பொத்தி, குனிந்து பெருமாளின் திருப்பாதத்தினை ஏற்றுகொள்ள வேண்டும்.

சடாரியை ஏன் தலையில் வைக்கிறார்கள்?

Sadari - Copper |Jadari Temple puja Items
image source

முன்பொரு சமயம் திருமால் வாமனனாக வந்து, திரிவிக்கிரமனாக வளர்ந்து, ஓங்கி உலகளந்த வேளையில் தனது வலது திருவடியால் மண்ணுலகையும், இடது திருவடியால் விண்ணுலகத்தையும் அளந்தார் என்பதை நாம் அறிவோம்.

அப்போது மண்ணுலகை அளந்த வலது திருவடியை உலகில் உள்ள அனைத்து உயிர்களின் தலையிலும் பதித்தார் திருமால். அந்த நேரத்தில் நாம் புல்லாகவோ, செடியாகவோ, எறும்பாகவோ இருந்திருப்போம்.

நம் தலைகளிலும் அவர் திருவடியைப் பதித்ததன் விளைவாகவே, மெல்ல மெல்ல அறிவு முதிர்ச்சி பெற்று இன்று மனிதர்களாகப் பிறந்துள்ளோம்.

அவ்வாறு இறைவன் நம் தலைகளில் திருவடியைப் பதித்ததன் நினைவாகவே இன்றும் கோயில்களில் இறைவனின் திருவடிகளுக்கும், திருவடி நிலைக்கும் பிரதிநிதியான சடாரியை நம் தலைகளில் வைக்கிறார்கள்.

சடாரி வைப்பதால் என்ன பலன்?

சடாரியை தலையில் வைப்பதால் நம் மனதில் உள்ள துன்பங்கள் நீங்கப் பெற்று இறைவனிடம் பக்தி கொள்ள வேண்டும், அறவழியில் நடக்க வேண்டும் என்ற நல்லெண்ணங்கள் தோன்றுகின்றன.

அதன் மூலம் ஒருவரது மனதில் உள்ள அகந்தை அகன்று,மனதில் அமைதியும், மகிழ்ச்சியும் குடிகொள்வதாக நம்பிக்கை. சம்பிரதாய ரீதியாக சடாரி வைக்கும் போது, குனிந்து, புருவங்களுக்கு மத்தியில், வலதுகை நடுவிரலை வைத்து, வாய் பொத்தி ஏற்றுக்கொள்வது முறையாகும்.சடாரியை நம் தலையில் வைக்கும் பொழுது பேரானந்தமும் நம் மனதில் ஏற்படும்.

wall image

Post Views: 329
Total
1
Shares
Share 1
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
கண்ணாடி

உங்கள் பிள்ளைகளுக்கான கண்ணாடி..!

  • November 29, 2021
View Post
Next Article
FBI

FBI இன் மின்னஞ்சல் Servers ஹேக் செய்யப்பட்டுள்ளது..!

  • December 1, 2021
View Post
You May Also Like
பால்குடம்
View Post

பால்குடம் எதற்காக எடுக்கப்படுகிறது? அதன் நன்மைகள் என்ன?

ஐயப்ப
View Post

ஐயப்பனுக்கு நெய் கொண்டு செல்வது ஏன்?

ஐயப்பனின்
View Post

ஐயப்பனின் பதினெட்டு படி உணர்த்தும் குணங்கள்..!

சபரி
View Post

சபரிமலையில் நடக்கும் இந்த விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா?

தீ மிதி
View Post

தீ மிதிப்பது ஏன்? அதன் அறிவியல் காரணம் என்ன தெரியுமா?

சபரி
View Post

சபரிமலைக்கு முதல் முறையாக மாலை அணிந்தவரா?

சபரிமலை
View Post

சபரிமலையின் ஏழு அம்சங்கள்..!

சரணம்
View Post

சரணம் என்ற சொல்லிற்கு என்ன பொருள்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.