தமிழ் கலாச்சாரம் – Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

பால்குடம் எதற்காக எடுக்கப்படுகிறது? அதன் நன்மைகள் என்ன?
image source

இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!! இணையத்தில் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்.

பால்குடம் எடுத்தல்

திருவிழாக்காலங்களில் கோவில்களில் பக்தர்களால் பால்குடம், பால் காவடி எடுக்கப்பட்டு கோவில் கருவறையில் உள்ள மூலவருக்கு பால் அபிஷேககமாக செய்யப்படுகிறது.

கிராமங்களில் திருவிழாக்களின்போது முக்கிய நிகழ்வாக பால்குடம் எடுப்பதை நாம் பார்த்திருப்போம். இன்றளவிலும் பால்குடம் எடுக்கும் மக்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது என்று சொல்லலாம்.

எதற்காக பால்குடம் எடுக்கப்படுகிறது? விரதமிருப்பது எப்படி? என்பதைப் பற்றி இப்பகுதியில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

பால்குடம் எடுப்பதற்கு விரதமிருப்பது எப்படி?

திருவிழாக்காலங்களில் கோவில்களில் பால்குடம் எடுப்பதற்கு கையில் காப்புக் கட்டி, எட்டு நாள் விரதம் இருக்க வேண்டும். பால்குடம் எடுக்கும் நாளில் அருகிலிருக்கும் விநாயகர் அல்லது சிவன் கோவிலுக்கு சென்று மஞ்சள் நிற ஆடை அணிந்து சொம்பு, தீர்த்தக்குடம் போன்றவற்றில் கறந்த பாலை ஊற்றி அதற்கு பூஜை செய்ய வேண்டும்.

பின் அங்கிருந்து ஊர்வலமாக பால்குடத்தை எடுத்து வந்து திருவிழா நடக்கும் கோவிலில் வீற்றிருக்கும் மூலவருக்கு பாலை அபிஷேகத்திற்கு பயன்படுத்த வேண்டும்.

பால்குடம் எதற்காக எடுக்கப்படுகிறது?

கோவிலில் சிலைகள் அமைக்கப்படும்போது பீடத்தில் மருந்துப் பொருட்களை வைத்து சிலைகளை அமைத்திருப்பார்கள். அச்சிலைகளின் மேல் பால் போன்றவைகளை கொண்டு அபிஷேகம் செய்வதால் சிலையின் பீடத்தில் உள்ள மருந்துப் பொருட்களில் பால் கலக்கிறது.

பின் அந்த அபிஷேக பால் கருவறையின் வெளியில் வைக்கப்பட்டிருக்கும் வடிகால் வழியாக வெளியே வரும். வடிகால் தொட்டியில் அபிஷேகம் செய்யப்பட்ட பாலை பக்தர்கள் எடுத்து பருகுவர். இந்த அபிஷேக பாலை பருகுவதால் பல மருத்துவப் பலன்களை பெறலாம் என்பது ஐதீகம். இதுதான் சிலைகளில் அபிஷேகம் செய்வதன் நோக்கம். இது போன்ற காரணங்களால் தான் பால்குடம் எடுக்கப்படுகிறது.

நன்மைகள்

வேண்டுதல்கள், நேர்த்திக்கடன், குடும்ப வளமை போன்ற காரணங்களால் பால்குடம் எடுக்கின்றார்கள்.

அம்பிகைக்கும், ஆறுமுகப் பெருமானுக்கும் நேர்த்திக்கடனாகப் பால்குடம் எடுப்பது வழக்கம். இதுபோன்ற நேர்த்திக்கடன்களின் வாயிலாக, நம்முடைய வாழ்வில் ஏற்படும் துயரங்களில் இருந்து விடுபட இயலும்.

பால் வெண்மை நிறம் உடையது. நம்முடன் பழகுபவர்கள் வெள்ளை மனம் படைத்தவர்களாக அமைந்து, நமக்கு வெற்றியைத் தேடித் தர வேண்டும் என்பதற்கான பரிகாரம் இது.

ஐயப்பனுக்கு நெய் கொண்டு செல்வது ஏன்?

wall image

ஐயப்பனுக்கு நெய் கொண்டு செல்வது ஏன்?
இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!! இணையத்தில் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்.

ஐயப்பன் ஸ்பெஷல் சபரிமலை பக்தர்கள் நெய் கொண்டு செல்வதற்கான காரணம் இதுதானோ

ஐயப்பன் கோவிலில் நெய்யால் ஐயப்பனுக்கு அபிஷேகம் நடக்கும். ஆனால், தனி நெய்யையோ, தனி தேங்காயையோ நிவேதனம் செய்யமாட்டார்கள். தேங்காய்க்குள் நெய் ஊற்றி நெய் தேங்காயையே நிவேதனமாக்கினார்கள்.

நெய் தேங்காய்

முக்கண் கொண்ட தேங்காய் சிவனை ஞாபகப்படுத்தும். பசு நெய் கோபாலனாகிய மகா விஷ்ணுவை நினைவுப்படுத்தும். சிவன், விஷ்ணு இருவருடைய அருள் கதிரொளியின் சக்தியாக அவதரித்தவர் ஐயப்பன். இதனால் சிவவிஷ்ணு வடிவமான நெய் தேங்காயை அவருக்கு நிவேதனம் செய்கின்றனர்.

நெய் எதற்காக

ஐயப்பனுக்கு காணிக்கையாய் நெய் கொண்டு செல்வது காலம் காலமாய் இருந்து வருகிறது. இந்த வழக்கம் ஏன் ஏற்பட்டது தெரியுமா?

பந்தள மன்னனின் மனைவி வயிற்று வலியால் அவதிப்படுவதாக பொய்யுரைத்தாள். அரசவை வைத்தியரை, புலிப்பால் குடித்தால் மட்டுமே தன் வயிற்று வலி தீரும் என கூற வைத்தாள். தாய்க்கு புலிப்பால் கொண்டு வர காடு நோக்கி புறப்பட்டான் ஐயப்பன்.

தந்தையான பந்தள மன்னன் மிக வருத்தத்துடன் மகனை வழியனுப்பும்போது, காட்டில் உண்ண உணவுகள் பல நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்க நெய்யில் தயாரித்த சில உணவு வகைகளை ஒரு முடியாக கட்டினார். அதே சமயம், சிவபக்தனான பந்தள மன்னன், முக்கண்ணனான சிவனின் அம்சம்போல் ஒரு தேங்காயை மற்றொரு முடியில் கட்டிக் கொடுத்தார்.

அந்த இருமுடிகளையும் ஏந்திய சிறுவன் மணிகண்டன், புலிப்பால் கொண்டுவர காட்டுக்குச் சென்றான். இருமுடியை முதன்முதலில் தலையில் ஏற்றியது ஐயப்பன் என்று புராணம் கூறுகிறது. இவ்வாறு இருமுடியை தலையில் தாங்கி ஐயப்பனை வழிபடும் முறை நாளடைவில் நிலைத்துவிட்டது.

இருமுடியில் நெய் தேங்காய் சுமந்து செல்வதற்கான காரணம்

தன் அவதார காரணம் பூர்த்தி பெற்றதால் தான் சபரிமலையில் தவமிருக்கப் போவதாகவும், தன்னை தரிசிக்க வேண்டுமானால் அங்கு வருமாறும் ஐயப்பன் கூறினார்.

பந்தள மன்னன், மணிகண்டா! நீ காட்டுக்குள் குடியிருக்க போவதாய் சொல்கிறாய். நாங்கள் உன்னை காண வேண்டும் என்றால் மலைகளை கடந்து வர வேண்டும். வயதான நான் உன்னை காண எப்படி வருவேன்? என்றார். அதற்கு மணிகண்டன் உங்களுக்கு ஒரு கருடன் வழிகாட்டும். அந்த வழிகாட்டுதலின்படி நீங்கள் எனது இடத்திற்கு வந்துவிடலாம் என அருள்பாலித்தார்.

அதன்படி ஆண்டுக்கு ஒருமுறை ஐயப்பனை காண பந்தள மன்னன் மலைக்கு செல்வார். மகனை காண செல்லும்போது ஐயப்பனுக்கு பிடித்தமானவற்றை எல்லாம் எடுத்து செல்வார். நெய் இலகுவில் கெட்டு போகாத ஒன்று. எனவே நெய்யில் செய்த பலகாரங்களை கொண்டு செல்வார்.

மேலும் நெய்யை தேங்காய்க்குள் ஊற்றி கொண்டு சென்றால் இன்னும் பல நாள் கெடாமல் இருக்கும். பந்தள மன்னன், ஐயப்பனை காண நடந்தே மலை ஏறுவார். மலையை அடைய பல நாட்களாகும். எனவே கெட்டுப் போகாத நெய்யை எடுத்துச் செல்லும் வழக்கம் உருவானது. இதன்மூலம் இருமுடிகட்டில் நெய் தேங்காய் முக்கியமானது.

ஐயப்பனின் பதினெட்டு படி உணர்த்தும் குணங்கள்

wall image

ஐயப்பனின் பதினெட்டு படி உணர்த்தும் குணங்கள்..!
இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!! இணையத்தில் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்.

image source

மோகம்

பற்று உண்டானால் பாசம், மோகம் ஏற்பட்டு புத்தி நாசமடைந்து அழிவு ஏற்படும் என்பதை உணர்த்துகிறது.

குரோதம்

கோபம் குடியைக் கெடுத்து, கோபம் கொண்டவனையும், அவன் சுற்றத்தையும் சேர்த்து அழித்துவிடும் என்பதை உணர்த்துகிறது.

லோபம்

பேராசைக்கு இடம் கொடுத்தால் இருப்பதும் போய்விடும், ஆண்டவனை அடைய முடியாது என்பதை உணர்த்துகிறது.

மதம்

யானைக்கு மதம் பிடித்தால் ஊரையே அழித்துவிடும். அந்த யானையை அப்போது யாராவது விரும்புவார்களா? அதுபோல் வெறி பிடித்தவனை ஆண்டவன் வெறுத்துவிடுவான் என்பதை உணர்த்துகிறது.

மாத்ஸர்யம்

மனதில் பொறாமையை நிலைநிறுத்தி வாழ்பவனுக்கு, வேறு பகையே வேண்டாம். அதுவே அவனை அழித்துவிடும் என்பதை உணர்த்துகிறது.

வீண் பெருமை

இது பெரிய அசுர குணத்தை உருவாக்கும். ஆகவே, அசுர குணமானது நமக்குள் இருக்கக்கூடாது என்பதை உணர்த்துகிறது.

அகந்தை

தான் என்ற அகந்தை கொண்டவன் ஒருபோதும் வாழ்வில் முன்னேற முடியாது. அகந்தை என்பது முடிவில்லா ஒரு சோகச்சுமை என்பதை உணர்த்துகிறது.

சாத்வீகம்

விருப்பு, வெறுப்பு இன்றி கர்மம் செய்தல் வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

ராஜஸம்

அகங்காரத்தோடு கருமம் செய்தல் கூடாது என்பதை உணர்த்துகிறது.

அற்ப புத்தியுடன் செயல்படுவது, மதி மயக்கத்தால் தீமை செய்வது ஆகியவை கூடாது என்பதை உணர்த்துகிறது.

ஞானம்

எல்லாம் ஆண்டவன் செயல் என்று அறியும், பேரறிவு என்பதை உணர்த்துகிறது.

மனம்

நம் மனம் கெடாது, பிறர் மனம் வருந்தாது வாழவேண்டும். எப்போதும் ஐயன் நினைவே மனதில் இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

அஞ்ஞானம்

உண்மைப் பொருளை அறிய மாட்டாது மூடி நிற்கும் இருள் என்பதை உணர்த்துகிறது.

கண்

ஆண்டவனை கண்கூட பார்க்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

காது

ஆண்டவனின் மேலான குணங்களை கேட்டு, அந்த ஆனந்த கடலில் மூழ்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

மூக்கு

ஆண்டவனின் சன்னதியிலிருந்து வரும் நறுமணத்தை முகர வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

நாக்கு

கடுஞ்சொற்கள் பேசக்கூடாது என்பதை உணர்த்துகிறது.

மெய்

இரு கரங்களால் இறைவனை கைகூப்பி தொழ வேண்டும். கால்களால் ஆண்டவன் சன்னதிக்கு நடந்து செல்ல வேண்டும். உடல் பூமியில் படும்படி விழுந்து ஆண்டவனை நமஸ்கரிக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

சபரிமலையில் நடக்கும் இந்த விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா

wall image

சபரிமலையில் நடக்கும் இந்த விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா?
image source

சபரிமலையில் உள்ள பஸ்ம குளத்தில் குளித்தால் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

ஐயப்பனின் படையில் சேனாதிபதியாக இருந்த கடுத்த சுவாமி (கருப்பசாமி) பதினெட்டுப் படிக்கு அருகில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். அவருக்கு முந்திரி, திராட்சை படைத்து வழிபட்டால் தோஷங்கள் விலகி நன்மை உண்டாகும்.

சபரிமலை ஐயப்பனுக்கு மாலை நேரத்தில் அர்ச்சனை செய்வார்கள். அர்ச்சனை சீட்டு பின்பக்கத்தில் உங்கள் ராசி, நட்சத்திரத்தை ஆங்கிலத்தில் எழுதி கொடுத்தால் அர்ச்சனை செய்து தருவார்கள்.

சபரிமலையில் பக்தர்கள் கொடுக்கும் பொருட்கள், சன்னிதானம் அருகே வாரம் இருமுறை ஏலம் விடப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் ஏலம் எடுக்கலாம்.

சபரிமலை ஐயப்பன் கோவில் ஒவ்வொரு மாதமும் 5 நாட்கள் திறந்து இருக்கும். அந்த நாட்களைத் தெரிந்து கொண்டு பக்தர்கள் சென்று வரலாம்.

சபரிமலையில் தினமும் அதிகாலை 3 மணிக்கு கோவில் திறந்ததும் சுப்ரபாதம் பாடப்படும்.

ஐயப்பனுக்கு தினமும் இரவு 8 மணிக்கு புஷ்பாஞ்சலி நடத்தப்படும். பக்தர்களே பூக்களை கூடையில் எடுத்து வந்து கொடுக்கலாம்.

ஐயப்பனுக்கு விபூதி, சந்தனம், பால், பன்னீர், 108 ஒரு ரூபாய் நாணயம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர் ஆகிய எட்டும் கொண்டு செய்யப்படும் அபிஷேகத்திற்கு அஷ்டாபிஷேகம் என்று பெயர்.

சபரிமலை பொன்னம்பல மேட்டில் மகர சங்கராந்தியன்று தோன்றும் ஜோதியை அப்பாச்சிமேடு, பம்பை, பெரியானை வட்டம், புல்மேடு ஆகிய இடங்களில் இருந்தும் காணலாம். புல்மேடு பகுதியில்தான் இந்த ஜோதி நன்றாக தெரியும்.

சபரிமலை ஐயப்பன் உற்சவம் ஆண்டுக்கு ஒரு தடவை பம்பை ஆற்றுக்கு கொண்டு வரப்பட்டு ஆராட்டு உற்சவம் நடைபெறும். பிறகு ஐயப்பனை அலங்கரித்து பம்பா விநாயகர் கோவில் முன்பு மக்கள் தரிசனத்திற்காக 3 மணி நேரம் வைப்பார்கள். சபரிமலை வர இயலாதவர்கள் இந்த சமயத்தில் ஐயப்ப உற்சவரை தரிசிக்கலாம்.

சபரிமலை செல்லும் வழியில் ஒரு பள்ளிவாசல் உள்ளது. பக்தர்கள் இங்கு சென்று தாங்கள் விரதத்தையும், பிரம்மச்சர்யத்தையும் முழுமையாக கடைபிடித்தோம் என்று உறுதி செய்துவிட்டுதான் சபரிமலைக்கு செல்ல வேண்டும் என்பது ஐதீகம்.

பந்தளத்தில் இருந்து சபரிமலை வரை ஐயப்பனின் ஆபரணப் பெட்டியை சுமந்துவர 15 சங்கங்கள் உள்ளன.

ஐயப்ப பக்தர்கள், ஐயப்பனுக்கு மாலை அணிந்து சபரிமலை செல்ல தயாராகி கொண்டு வருகிறார்கள். ஐயப்பனை நினைத்து கடுமையான விரதமுறையை மேற்கொண்டு வருகிறார்கள்.

ஐயப்ப பக்தர்கள் ஏன் கார்த்திகை மாதம் விரதத்தை மேற்கொள்கிறார்கள்? ஏன் ஐயப்ப பக்தர்கள் சரண கோஷம் எழுப்புகிறார்கள்? ஐயப்ப பக்தர்கள் வெந்நீரில் குளிக்கக்கூடாது என்பது ஏன்? என்பதை பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்.

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் விரதம் இருப்பது ஏன்?

IMAGE SOURCE

பழங்காலத்தில் மகர ஜோதி தரிசனம் மட்டுமே சபரிமலை யாத்திரையாக கருதப்பட்டு வந்தது. அப்போதெல்லாம் டிசம்பர் மாத இறுதியில் பக்தர்கள் யாத்திரையை துவங்குவார்கள். இதன்படி, ஒருவர் சபரிமலைக்கு செல்ல வேண்டுமானால், அவருடைய விரத நாட்களை அதற்குள் முடித்து, பின்னர் இருமுடி எடுத்து செல்ல வேண்டும். இதன்படி, ஒருவர் கார்த்திகை மாதம் முதல்நாள் மாலையிட்டால் தான், மகர ஜோதி தரிசனத்திற்கு யாத்திரை மேற்கொள்ள முடியும்.

ஐயப்ப பக்தர்கள் சரண கோஷத்தை உரத்த குரலில் எழுப்புவது ஏன்?

ஐயப்பனின் திருநாமங்களை சொல்லும்போது கவனம் திசை திரும்பாது. அந்த ஒலி அலைகள் அந்த இடம் முழுக்கப் பரவி பக்தி அதிர்வை ஏற்படுத்தும். இது வீட்டில் இருப்பவர்கள், மற்ற சிந்தனைகளுடனோ அல்லது வேறு பேச்சுக்களிலோ இருந்தால் அவர்களது கவனமும் ஐயப்பனை பற்றிய எண்ணத்தில் திரும்பும்.

ஐயப்ப பக்தர்கள் ஏன் வெந்நீரில் குளிக்கக்கூடாது?

வெளிப்புற தட்பவெப்பநிலை குளுமையாக இருக்கும் காலம் (மழை, பனி) என்பதால் குளிர்ந்த நீரில் குளிப்பதே நல்லது. சபரிமலை யாத்திரை செல்ல வேண்டுமானால் உடல்நலம் சீராக இருக்க வேண்டும். அதற்காகத்தான் இந்த விதிமுறை. குளிப்பதால் ஏற்படும் குளுமை உடலில் சீராக பரவ வேண்டும் என்பதற்காகவே சந்தனம் இட்டுக்கொண்டு செல்கின்றனர்.

ஐயப்ப பக்தர்கள் தினமும் சொல்லி வழிபாடு செய்ய வேண்டிய ஐயப்பன் நமஸ்காரம்

ஹரிஹரபுத்ரா அன்பா நமோ நமோ
சபரிகிரீசா சாஸ்தா நமோ நமோ
பதினென் படிவாழ் பரமா நமோ நமோ
ஐயங்கரன் சோதரா ஐயப்பா நமோ நமோ
பொன்னம் பலத்துறை புண்ணியா நமோ நமோ
புலிப்பால் ஈந்த புண்ணியா நமோ நமோ
மஹிஷி மர்த்தனா மணிகண்டா நமோ நமோ
சரணம் சரணம் சபரிகிரீசா
சரணம் சரணம் சத்ய ஸ்வரூபா
சரணம் சரணம் சர்வ தயாளா
சரணம் சரணம் சுவாமியே சரணம்.

சபரிமலைக்கு முதல் முறையாக மாலை அணிந்தவரா?

wall image

தீ மிதிப்பது ஏன்? அதன் அறிவியல் காரணம் என்ன தெரியுமா?
இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!! இணையத்தில் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்.

image source

தீ மிதித்தல்

திருவிழாக்களில் தீ மிதித்தல் நடப்பதைப் பார்த்திருக்கிறோம். தீ மிதித்தல் என்பது  பல கோவில்களில் நடைபெறுகிறது.

தீ மிதித்தல் என்பது இந்து சமய நேர்த்திக்கடன்களில் ஒன்றாகும். இதனை அக்னி குண்டம் இறங்குதல், பூ மிதித்தல் என்ற பல பெயர்களில் அழைக்கின்றார்கள். இவ்வாறு தீ மிதிப்பவர்களை மருளாளிகள் என அழைக்கின்றார்கள்.

மருட்சி உடையவர்கள் மருளாளிகள். இவர்களுக்கு தீயும், பூவும் ஒன்றாக தெரியும். இதனால் தான் தீ மிதித்தலை, பூ மிதித்தல் என்று கூறுகிறார்கள். நம்பிக்கை இல்லாமலோ அல்லது சோதித்துப் பார்க்கவோ பூக்குழி இறங்கினால் கஷ்டம்தான்.

எவ்வாறு கொண்டாட வேண்டும்?

image source

தீ மிதித்தலுக்காக காப்பு கட்டி பக்தர்கள் விரதம் இருக்கின்றார்கள். அம்மன் கோயில்களின் முன்பு தீ மிதித்தலுக்காக அக்னி குண்டம் தயார் செய்யப்படுகிறது. அம்மன் கோயில் திருவிழாக்களின்போது, சாமியாடிக் கொண்டு நீர்நிலைகளிலிருந்து நீராடி மாலையணிந்து பூக்குழிக்கு வருகின்றார்கள். பக்தியின் பரவசத்தில் இருந்துகொண்டு வரிசையாக பூக்குழிக்குள் இறங்குகிறார்கள்.

இவ்வாறு பூக்குழி இறங்குவதற்கு முன்னர் பூக்கள், விறகுகள், சூடம் போன்றவை நேர்த்திக்கடன்களாக செலுத்தப்படும்.

அதன்பின் அக்னி குண்டத்தின் முன் மற்றும் பின் பகுதியில் ஒரு சிறு தொட்டியை அமைப்பார்கள். அதில் பின் பகுதியில் தண்ணீரும், முன்பகுதியில் பாலும் இருக்கும். இவற்றில் பக்தர்கள் பாலை நேர்த்திக்கடனாக ஊற்றுவார்கள்.

இதற்கு காரணம் என்ன தெரியுமா? பக்தர்கள் தீ மிதிப்பதற்கு முன்பு நீரால் கால்களை பலமுறை கழுவி படுக்கையைச் சுற்றி வருவார்கள். நீரில் கழுவிய கால் மண்ணில் பட்டால் அதில் உள்ள அழுக்கு காலில் ஒரு அடுக்கை உண்டாக்கும். இந்த அழுக்கு நெருப்பிற்கும், காலிற்கும் இடையில் இருந்து கால் விரைவில் சூடேறுவதைத் தடுக்கிறது.

மேலும் பூக்குழி இறங்குபவர்களுக்கு காயம் ஏற்பட்டாலோ, அதில் விழுந்தாலோ அவை அபசகுனமாக கருதப்படுகிறது.

தீக்குழி

தீக்குழியானது 10அடி முதல் 12அடி நீளம் இருக்கும். ஆனால் 20அடிக்கு மேல் இருக்காது. கட்டைகளைப் போட்டு எரிய விட்டு அது எரிந்தவுடன் தணலால் ஆன கரியாக இக்குழி இருக்கும்.

இதைப் பகலில் பார்த்தால் கரியின் மீது சாம்பல் படிந்திருப்பது நன்கு தெரியும். பொதுவாக இந்த நிகழ்ச்சி இரவில் மட்டுமே நடத்தப்படுகிறது. இரவில் இது ஒளிரும் சிகப்பு விளக்காக தெரியும்.

பூக்குழி இறங்கிய பின் கல் உப்பை பூக்குழியின் மீது கொட்டுவார்கள். இது காற்றில் உள்ள ஈரத்தை இழுத்துக் கொள்ளும்.

அறிவியல் உண்மை

தீ மிதிப்பவர்கள் குறிப்பாக ஆடி மாதத்தில் தான் மிதிப்பர். ஆடி மாதம் என்பது வெயில் மற்றும் மழைக்காலத்திற்கு இடையிலான காலம். இக்காலத்தில் பலவிதமான நோய் தொற்றுக்கள் எளிதில் உண்டாகும்.

தீ மிதிப்பதால் உடலின் பல நோய்கள் நீங்கும் மற்றும் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும். எனவே தான் பழங்காலத்தில் மஞ்சள்காமாலை முதலிய நோய்களுக்கு காலில் சூடு வைத்து குணப்படுத்தப்பட்டது. இதுவே தீ மிதித்தலுக்குப் பின் உள்ள அறிவியல் உண்மையாகும்.

சபரிமலைக்கு முதல் முறையாக மாலை அணிந்தவரா?

wall image

சபரிமலைக்கு முதல் முறையாக மாலை அணிந்தவரா?
இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!! இணையத்தில் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்.

சபரிமலைக்கு முதல் முறையாக மாலை அணிந்தவரா?

ஐயப்பன் ஸ்பெஷல் கன்னி சாமிகள் செய்ய வேண்டிய பூஜை முறைகள் என்ன?

மாலை அணிந்து சபரிமலை சென்று ஐயப்பனை தரிசனம் செய்தால் கஷ்டங்கள் நீங்கி வாழ்க்கை செழிப்பாக இருக்கும்.

சபரிமலைக்கு முதல்முறையாக செல்லும் பக்தர்கள் அதாவது, கன்னி சாமிகள் செய்ய வேண்டிய பூஜை முறைகள் என்ன? என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

கன்னி சாமிகள் சபரிமலை செல்வதற்கு முன் படுக்கை பூஜை அல்லது வெள்ளம் குடி பூஜையை கட்டாயம் நடத்த வேண்டும்.

பூஜை செய்யும் முறை

வீட்டின் கிழக்கு பாகத்தில் ஏழு கோல் சதுரத்தில் பந்தல் அமைத்து, பந்தலை அலங்கரித்து, நடுவில் அலங்கார மண்டபம் அமைக்க வேண்டும்.

மண்டபத்தில், ஐயப்பன் படம் அல்லது சிலையை அமைக்க வேண்டும். மேலும் கணபதி, மாளிகைப்புரத்தம்மன், கருப்பசாமி, கடுத்தசுவாமி, வாபர்சுவாமி மற்றும் ஆழி ஆகியவற்றை அமைக்க உரிய இடங்களை தேர்வு செய்ய வேண்டும்.

இந்த இடங்களில் குத்துவிளக்கு ஏற்றி வைத்து சாமிகளுக்கு முன் அவல், பொரி, பழம் ஆகியவற்றை படைக்க வேண்டும்.

நடுப்பாகத்தில் ஐயப்பனை ஒரு பீடத்தின் மீது வைத்து பட்டு விரித்து அதன் முன்னால் இலை போட்டு நெல்லும், அரிசியும் நிரப்பி வைக்க வேண்டும். கிழக்கு திசையை நோக்கி தேங்காயை வைக்க வேண்டும்.

அலங்கார மண்டபத்தின் கிழக்கு பாகத்தில் ஆழி அமைப்பதற்கு இடம் ஒதுக்க வேண்டும். அதில் விறகுகளை அடுக்கி ஆழி வளர்க்க வேண்டும். பூவரசு அல்லது பல விறகுகளை ஆழியில் போட வேண்டும்.

ஐயப்பனுக்கு தீபாராதனை நடத்திய பிறகு ஆழியை ஏற்ற வேண்டும். அனைத்து ஐயப்பன்மார்களும் ஆழியை வலம் வர வேண்டும். பூஜை முடிந்த பிறகு அனைத்து பக்தர்களுக்கும் உணவு வழங்க வேண்டும். இதுதான் முறையான ஐயப்ப பூஜை ஆகும். கூட்டாகவும் இந்த பூஜையை நடத்தலாம்.

விரத காலத்தில் செய்ய வேண்டியவை

எளிமை, சுகாதாரம், புனித எண்ணங்கள் ஏற்படுதல் ஆகியவையே ஐயப்பன் விரதத்தில் முக்கியமானவை. உடலும், மனமும் சுத்தமாக இருக்க வேண்டும். ஐயப்பனை கற்பூர தீபப்பிரியன் என்பர். எனவே தினமும் காலையும், மாலையும் கற்பூர தீபம் காண்பிக்க வேண்டும்.

ஐயப்பனை அன்னதான பிரபு என்று அழைப்பார்கள். எனவே கன்னி சாமிகள் அன்னதானம் செய்வது மிகவும் நல்லது. முடிந்தவரை கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு பொருள் அல்லது உடல் உழைப்பால் உதவி செய்ய வேண்டும்.

சபரிமலையில் நடைபெறும் பூஜை முறைகள் என்னென்ன?

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் பூஜை முறைகள்…!!

சபரிமலை கோவிலில் பலவிதமான பூஜை முறைகள் பின்பற்றப்படுகின்றன. அவை உஷத் கால பூஜை, உச்சி கால பூஜை, அத்தாழ பூஜை, மாத பூஜையாக படி பூஜை மற்றும் உதயாஸ்தமன பூஜை ஆகியவை ஆகும்.

உஷத் கால பூஜை

அதிகாலையில் ஐயப்பன் சன்னதி நடை திறந்த உடனே அபிஷேகம் நடைபெறும். காலையில் கணபதி ஹோமத்துடன் உஷத் பூஜை நடைபெறும்.

அப்போது நைவேத்தியமாக இடித்து பிழிந்த கேரள பாயாசம் படைக்கப்படும். அதன்பின் நடை மூடப்படும். கணபதி மற்றும் நாகராஜா சன்னதி பூஜைகள் முடிந்ததும், பிரசன்ன பூஜை நடைபெறும்.

பின்னர் மீண்டும் நடை திறக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும். உஷத் பூஜைக்கு பின்னர் நெய் அபிஷேகம் நடைபெறும். இதன்பின்னர் கோவில் சுத்தம் செய்யப்படும்.

உச்சி கால பூஜை

உச்சி கால பூஜை என்பது நண்பகலில் நடைபெறும் பூஜையாகும். இச்சமயம் ஐயப்பனின் முழு சாந்நித்யமும் சன்னதியில் பரவி கிடக்கும். பூஜை முடிந்த பின்னர் நடை மூடப்படும். மீண்டும் மாலை வேளையில் நடை திறக்கப்பட்டு தீபாராதனையும், புஷ்ப அபிஷேகமும் நடைபெறும்.

புஷ்ப குவியலில் சிறு குழந்தையாக சுவாமியின் முகம் மட்டும் தெரியும். நீளமாக ஐயப்பன் முன்பு பூக்குவியல் சமர்ப்பிக்கப்படும். இதனை காண கண்கோடி வேண்டும்.

காலையில் பல மணிநேரம் தொடர்ந்து நெய் அபிஷேகம் நடைபெறுவதால் ஐயப்ப விக்கிரகத்தில் ஏற்படும் உஷ்ணத்தை சரி செய்ய புஷ்ப அலங்கார பூஜை நடைபெறுகிறது. பக்தர்கள் முன்கூட்டியே புஷ்ப அலங்காரம் செய்ய பணம் செலுத்தி பங்கு கொள்ளலாம்.

அத்தாழ பூஜை

உச்சி கால பூஜை முடிந்த பின்னர் அத்தாழ பூஜை எனப்படும் இரவு நேர சயன பூஜை நடைபெறும். ஐயப்பன் நெய் அபிஷேகத்தில் சர்வ காலமும் இருப்பதால் உஷ்ணத்துடன் திருமேனி விளங்கும்.

எனவே, உண்ணியப்பம் மற்றும் பானகம் நிவேதனம் செய்யப்படுகிறது. பூஜை முடிந்ததும் பக்தர்களுக்கு பானகம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதை தொடர்ந்து ஹரிவராசனம் (தாலாட்டு பாட்டு) பாடி திருச்சன்னதியின் நடை மூடப்படுகிறது.

இவை தவிர, மாத பூஜை நடைபெறும் நாட்களில் தினமும் இரவில் படி பூஜை மற்றும் உதயாஸ்தமன பூஜை நடைபெறுகிறது.

ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா

சபரிமலையின் ஏழு அம்சங்கள்

wall image

சடாரியை ஏன் தலையில் வைக்கிறார்கள்? சடாரி வைப்பதால் என்ன பலன்?
இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!! இணையத்தில் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்.

பெருமாள் கோயில்களில் பெருமாளை தரிசித்த பின் பக்தர்களுக்கு துளசி தீர்த்தம் கொடுத்த பிறகு சடாரி எனப்படும் சடகோபத்தை பக்தர்கள் தலையில் வைத்து பின்பு எடுப்பார்கள். நம்மில் இக்காட்சியை காணாதவர்கள் இல்லை.

எதற்காக அந்த சடாரி வைக்கப்படுகிறது? சடாரி என்ற பெயர் எப்படி வந்தது? சடாரியை ஏன் தலையில் வைக்கிறார்கள்? போன்றவற்றை பற்றி பார்க்கலாம் வாங்க

சடாரி என்றால் என்ன?

சடாரி அல்லது சடகோபம் என்பது திருமாலின் திருப்பாதம் பொறிக்கப்பெற்ற கிரீடமாகும். இந்த சடாரி வைணவ கோயில்களில் இறை தரிசனத்திற்கு பிறகு, பெருமாளின் திருவடிகளாக பாவித்து, பக்தர்களின் தலையில் வைத்து எடுக்கப்படுகிறது.

சடம் ஹரி (பாதம்) ஸ்ரீ சடாரி என்று அழைக்கப்படுகிறது.

சடாரி வைக்கும் பொழுது பணிந்து புருவங்களுக்கு நடுவில் வலக்கையின் நடுவிரலை வைத்து மூக்கு மற்றும் வாயை பொத்தி, குனிந்து பெருமாளின் திருப்பாதத்தினை ஏற்றுகொள்ள வேண்டும்.

சடாரியை ஏன் தலையில் வைக்கிறார்கள்?

image source

முன்பொரு சமயம் திருமால் வாமனனாக வந்து, திரிவிக்கிரமனாக வளர்ந்து, ஓங்கி உலகளந்த வேளையில் தனது வலது திருவடியால் மண்ணுலகையும், இடது திருவடியால் விண்ணுலகத்தையும் அளந்தார் என்பதை நாம் அறிவோம்.

அப்போது மண்ணுலகை அளந்த வலது திருவடியை உலகில் உள்ள அனைத்து உயிர்களின் தலையிலும் பதித்தார் திருமால். அந்த நேரத்தில் நாம் புல்லாகவோ, செடியாகவோ, எறும்பாகவோ இருந்திருப்போம்.

நம் தலைகளிலும் அவர் திருவடியைப் பதித்ததன் விளைவாகவே, மெல்ல மெல்ல அறிவு முதிர்ச்சி பெற்று இன்று மனிதர்களாகப் பிறந்துள்ளோம்.

அவ்வாறு இறைவன் நம் தலைகளில் திருவடியைப் பதித்ததன் நினைவாகவே இன்றும் கோயில்களில் இறைவனின் திருவடிகளுக்கும், திருவடி நிலைக்கும் பிரதிநிதியான சடாரியை நம் தலைகளில் வைக்கிறார்கள்.

சடாரி வைப்பதால் என்ன பலன்?

சடாரியை தலையில் வைப்பதால் நம் மனதில் உள்ள துன்பங்கள் நீங்கப் பெற்று இறைவனிடம் பக்தி கொள்ள வேண்டும், அறவழியில் நடக்க வேண்டும் என்ற நல்லெண்ணங்கள் தோன்றுகின்றன.

அதன் மூலம் ஒருவரது மனதில் உள்ள அகந்தை அகன்று,மனதில் அமைதியும், மகிழ்ச்சியும் குடிகொள்வதாக நம்பிக்கை. சம்பிரதாய ரீதியாக சடாரி வைக்கும் போது, குனிந்து, புருவங்களுக்கு மத்தியில், வலதுகை நடுவிரலை வைத்து, வாய் பொத்தி ஏற்றுக்கொள்வது முறையாகும்.சடாரியை நம் தலையில் வைக்கும் பொழுது பேரானந்தமும் நம் மனதில் ஏற்படும்.

wall image

சபரிமலையின் ஏழு அம்சங்கள்..!
சபரிமலையின் ஏழு அம்சங்கள்

சபரிமலை, எழில் மிகுந்த புனித பூமியாகும். இத்தகைய திருத்தலத்திற்கு யாத்திரை சென்று, தரிசனம் செய்வதாலும், அங்குள்ள புனிதத் தீர்த்தத்தில் நீராடுவதாலும் அனைத்துப் பாவங்களும் நீங்கி, கோடி புண்ணியம் கிடைக்கும் என்று சாஸ்திரம் கூறுகிறது. ஐயப்பன் எழுந்தருளியுள்ள சபரிமலை ஏழு அம்சங்களை கொண்டு திகழ்கிறது.

சபரிமலை

பதினெட்டு மலைகள் சூழ்ந்த நிலையில் சபரிமலை சுயம்புவாக எழுந்து அனைத்து மலைகளையும்விட உயர்ந்து காணப்படுகிறது. இங்கு ஒவ்வொரு வருடமும் மகாசங்கராந்தி புனித நாளில் ஜோதி உருவாய் பொன்னம் பல மேட்டில் ஐயப்பன் காட்சி தந்து அருள்கிறார்.

பம்பை

பம்பை நதிக்கரையில் முனிவர்கள், குடில்கள் அமைத்து யாகம் செய்திருப்பதாகப் புராண வரலாறு கூறுகிறது. அதனால் இது மகாயாகம் நடந்த யாக பூமியாகும். இன்றும் ஐயப்ப பக்தர்கள் இங்கு யாக பூஜை செய்வதைக் காணலாம்.

மகிஷன்

ரம்பாசுரனின் மகனாகப் பிறந்த மகிஷன் தவம் மேற்கொண்டு, பிரம்மனிடம் அரிய பல வரங்களைப் பெற்றான். அதனால் விளைந்த ஆணவத்தால் தேவர்களை துன்புறுத்தினான். தேவர்கள் பராசக்தியை வேண்டினர். பராசக்தி, மகிஷனிடம் போர்புரிந்து அவனை வதைத்தாள். அதனால் பக்திமார்க்க தர்மயுத்தம் நடந்த பலிபூமியானது.

ராம இலட்சுமணன்

ராமபிரானும் லட்சுமணனும் தேவியை தேடி கானகத்தில் அலைந்தனர். அப்போது மதங்க மாமுனிவர் ஆசிரமம் தென்படவே அங்கு சென்றார்கள். அவரது குடிலில் நீலி என்ற பெண் இருந்தாள். அவள் ராம லட்சுமணர்களை வரவேற்று தான் அங்கு முனிவருக்குப் பணிவிடை செய்வதாகவும், தாழ்த்தப்பட்ட இனத்தை சார்ந்தவள் என்றும் கூறினாள். ராமபிரான், மனிதர்கள் எல்லோரும் இறைவனால் படைக்கப்பட்டவர்கள். இதில் உயர்ந்த இனம், தாழ்ந்த இனம் என்ற பாகுபாடில்லை. உன்னை போற்றி புகழும் நிலையை உனக்கு அளிக்கிறேன் என்று சொல்லி அந்த பெண்ணை அழகான அருவியாக மாற்றி புனிதம்பெற அருள்புரிந்தார். மாறிய அந்த பெண் பம்பா நதியாக பாய்ந்து தட்சிண கங்கை என்று சிறப்பு பெயர் பெற்றாள்.

ஸ்ரீலலிதா திரிபுரசுந்தரி

ஸ்ரீலலிதா திரிபுரசுந்தரியை பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் தவமிருந்து வழிபட்டனர். அவர்கள்முன் தேவி தோன்றி, என்ன வரம் வேண்டும்? என்று கேட்டாள். தங்களின் விஸ்வரூப தரிசனத்தை என்று கேட்க உடனே தேவி விஸ்வரூப தரிசனம் தந்தாள். தேவி தன்னுடைய இதயத்தில் ஒரு லட்சம் இதழ்கள் கொண்ட தாமரைப் பூவில் ஒரு சக்தியை வைத்துக்கொண்டிருந்தாள்.

அந்த சக்திதான் மகாசாஸ்தா. இதனைக் கண்ட சிவனுக்கும், விஷ்ணுவுக்கும் ஏக காலத்தில் இந்த மகாசக்தி தங்களுக்கு குழந்தையாகப் பிறக்க வேண்டுமென்று மனதிற்குள் அவர்கள் நினைத்ததைப் புரிந்துகொண்ட தேவி, அவர்கள் விருப்பம் நிறைவேற ஆசிபுரிந்தாள். தேவி அருளிய வரத்தின்படி சிவனுக்கும், மோகினி அவதாரம் எடுத்துவந்த விஷ்ணுவுக்கும் ஹரிஹர அம்சமாக அவதரித்தார் சாஸ்தா.

பம்பா உற்சவம்

ஐயப்பன், மகிஷனின் சகோதரியான மகிஷியை வதம் செய்தார். இதனால் தேவர்களால் முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட தவபூமியானது. இந்த பம்பை நதிக்கரையில் மகரவிளக்குப் பூஜைக்கு முன்னர் விளக்கு உற்சவம் நடைபெறும். இதற்கு பம்பா உற்சவம் என்று பெயர்.

சபரி

ராமாயண காலத்தில், சபரி என்ற பெண் ராமபிரானை சந்திக்கும் பாக்கியம் பெற்றாள். அவள், ராமபிரானுக்கு சுவையுள்ள பழங்களைக் கொடுத்து உபசரித்தாள். அவள் இப்பகுதியில்தான் வசித்தாள் என்பர். மேலும் பல ரிஷிகள் பம்பை நதிக்கரையோரம் தவமிருந்ததால் இத்தலம் யோக பூமியாகவும், யோகிகள் வாழ்ந்த தபோ பூமியாகவும் போற்றப்படுகிறது.

சரணம் என்ற சொல்லிற்கு என்ன பொருள்

wall image

சரணம் என்ற சொல்லிற்கு என்ன பொருள்?
கார்த்திகை மாதம் ஆரம்பித்துவிட்டது. ஐயப்ப பக்தர்கள், ஐயப்பனுக்கு மாலை அணிந்து சபரிமலை செல்ல தயாராகி கொண்டு வருகிறார்கள்.

அவ்வாறு மாலை அணிந்து செல்லும் பக்தர்கள் ‘சுவாமி சரணம்” என்று அடிக்கடி கூறுவார்கள். அதில் சரணம் என்ற சொல்லிற்கு என்ன பொருள் என்று தெரிந்து கொள்வோம்.

சுவாமி என்பது முக்கணங்களான ரஜோ, தமோ, ஸ்தவகணங்களை ஜெபித்து இதனை அகற்ற வல்லது. சுவாமி என்ற உச்சரிப்பை சொல்லி படிப்பவர்களுக்கு சுபம் உண்டாகிறது.

‘ச” என்ற எழுத்திற்கு நம்மிடம் உள்ள காமக் கிராதிகள் எனும் சாத்தான்களை அழிக்கும் சத்தசம்ஹாரம் என்று பொருள்.

‘ர” என்ற எழுத்திற்கு ஞானத்தை தர வல்லது என்று பொருள்.

‘ண” என்ற எழுத்திற்கு சாந்தத்தை தரவல்லது என்று பொருள்.

‘ம்” முத்ரா என்ற எழுத்திற்கு துக்கங்களை போக்க வல்லது என்று பொருள். சுவாமிக்கு மகிழ்ச்சி தரக்கூடியது.

ஆகையால், நம்முடைய நாபி கமலத்தில் இருந்து எழும் பிராண வாயுவை இதய மார்க்கமாகச் செலுத்தி, நாவின் மூலம் சப்தமாக உயிர்ப்பித்து ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா என ஒலிக்கும்போது, மூல மந்திர ஒலியுடன் நம் காமக் கிராதிகளை அழித்து ஞானத்தைத் தர ஐயப்பனைச் சரணடைகிறோம் என்று பொருள்.

ஐயப்ப பக்தர்கள் தினமும் வழிபாடு செய்யும் போது சொல்ல வேண்டிய ஐயப்ப ஸ்லோகம்

அருணோதய ஸங்காசம் நீல குண்டலதாரிணம்
நீலாம் பரதரம் தேவம் வந்தேகம் பிரம்ம நந்தனம்

சாப பானம் வாம ஹஸ்தே ரௌப்பிய வேத ரஞ்ச தக்ஷிணே
விலசத் குண்டல தரம் வந்தேகம் விஷ்ணு நந்தனம்

வியாக் ராரூடம் ரக்த நேத்ரம் ஸவர்ண மால விபூஷ்ணம்
வீர பட்டதரம் கோரம் வந்தேகம் பாண்டிய நந்தனம்

கிங்கிண் யொட்டியாண பூஷேஷம் பூர்ண சந்திர நிபானணம்
கிராத ரூபா சாஸ்தாரம் வந்தேகம் பாண்டிய நந்தனம்

பூத வேதாள ஸம்ஸேயம் காஞ்சனாத்ரி நிவாஸினம்
மணிகண்ட மிதிக் யாதம் வந்தேகம் சக்தி நந்தனம்.

ஐயப்ப பக்தர்கள்.. கருமை, கருநீலம் நிறங்களில் உடை அணிவது ஏன்?

ஐயப்பனை பற்றிய சிறப்புகள்

கார்த்திகை மாதம் துவங்கியதும், ஐயப்ப பக்தர்கள் அனைவரும் ஐயப்ப பக்தியில் மூழ்கிப் போகின்றனர். இவர்கள் ஐயப்பனுக்காக மாலை அணிந்து பக்திச் செறிவுடன் ஐயப்பன் நாமத்தைச் சொல்லி விரதம் அனுசரிக்கிறார்கள்.

ஐயப்பன் கலியுக வரதன், கலிகால தோஷத்தை அகற்ற ஐயப்பனைத் தரிசித்தால் போதும் என்கிற உணர்வு மேலிடுகிறது. ஆண்டுதோறும் இருமுடி ஏந்தி, சபரிமலைக்குப் புனித யாத்திரை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே போகிறது.

ஐயப்பனின் சிறப்புகள்

ஐயப்பன் சபரிமலையை ஒட்டிய காடுகளில் தான் மகிஷாசுரனின் தங்கையாகிய மகிஷியை வதம் செய்தார்.

பதினெட்டு எனும் எண் ஐயப்பனுக்கு விசேஷமானது என்பது எல்லோருக்கும் தெரியும். உங்களுக்கு தெரியுமா? சபரிமலையை சுற்றிலும் 18 காடுகள் இருக்கின்றன.

உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான பக்தர்களை கவர்ந்திழுப்பது சபரிமலையும், அதில் வீற்றிருக்கும் ஐயப்பனும் தான்.

ஐயப்ப பக்தர்கள், சனிபகவானின் ஈசனாகிய ஸ்ரீ தர்மசாஸ்தாவின் பக்தர்கள். சனீஸ்வரனை மகிழ்விக்கும் விதமாக கருமை, கருநீலம் ஆகிய நிறங்களிலேயே உடை அணிகின்றனர்.

சபரிமலையில் ஐயனைத் தரிசிக்க ஆண்களுக்கு வயது வரம்பு இல்லை.

ஐயப்ப பக்தர்கள் சபரிமலை யாத்திரை துவங்கும் முன் 41 நாட்கள் விரதமிருக்க வேண்டும். விரத காலம் முழுவதும் தங்கள் குருசாமியால் அணிவிக்க பெற்ற துளசி மாலையையோ, ருத்ராட்ச மாலையையோ கழுத்தில் தவறாது அணிந்திருக்க வேண்டும்.

ஐயப்பன் கருவறை தரிசனம் செய்யும்போது பக்தர்கள் தாங்கள் கொண்டு வந்த நெய்யை சமர்ப்பிக்கிறார்கள். இந்த நெய்யை அளித்து மெய்யை பெற வேண்டும், தங்களுக்கு ஆத்மானுபவம் கிட்ட வேண்டும் என்ற வேண்டுதலே இதன் அடிப்படை நோக்கம்.

இருமுடி நிறங்கள்

முதல்முறை விரதமிருந்து ஐயப்பனை தரிசிக்க வருவோர் கன்னிசாமிகள். இவர்கள் செந்நிறத்தில் இருமுடியணிவார்கள்.

கன்னிசாமிகள் தவிர்த்து இதர ஐயப்ப பக்தர்கள் கருப்பு வண்ணத்தினாலான இருமுடியையோ அல்லது நீல வண்ணத்தினாலான இருமுடியையோ பயன்படுத்தி புனிதப் பயணம் மேற்கொள்வார்கள்.

ஐயப்பனின் மூல மந்திரம்

ஓம் க்ரும் நம பராய
கோப்த்ரே நம

கலியுகத்தில் எல்லாவிதமான துன்பங்களிலிருந்தும், ஆபத்துக்களிலிருந்தும் மக்கள் அனைவரையும் ரட்சித்து காப்பாற்றும் சக்தியுடைய கடவுள் ஐயப்பன் என்பதே இம்மூல மந்திரத்தின் பொருள்.

wall image

கார்த்திகை தீபத்திருநாள் ஏன் கொண்டாடப்படுகிறது?
image source

வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் தெய்வ சக்தி அதிகரிக்கும். தீபத்தின் சுடரில் மகாலட்சுமியும், ஒளியில் சரஸ்வதியும், வெப்பத்தில் பார்வதிதேவியும் எழுந்தருளுவதாக ஐதீகம். எனவே, தீபம் ஏற்றி இறை வழிபாடு செய்வதன் மூலம் முப்பெரும் தேவியரின் திருவருளையும் ஒருங்கே பெறலாம்.

கார்த்திகை மாதம் முழுவதும் தீபம் ஏற்றி வழிபட்டால் நினைத்த காரியம் வெற்றி பெறும். திருக்கார்த்திகையான இல்லங்களில் வரிசையாக தீப அலங்காரம் செய்வது தீய சக்திகளை விலக்கும். வீட்டில் மகாலட்சுமி குடி கொள்வாள்.

தீபம் ஏற்ற உகந்த நேரம்

பிரம்ம முகூர்த்தமான அதிகாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரையும்,

கார்த்திகை மகா தீப நேரம் மாலை 6 மணி என்பதால், மாலை 6 மணிக்கு ஏற்றுவது நல்லது.

விளக்கு தானாக அணையலாமா?

தீபம் ஏற்றிய பின் விளக்கு தானாக அணையக்கூடாது. விளக்கு ஏற்றிய பின் அது தானாக கருகி அணைந்து விடும். கையால் வீசியோ, வாயால் ஊதியோ விளக்கை அணைக்கக்கூடாது. பூவை பயன்படுத்தி விளக்கை குளிர்விக்க வேண்டும்.

சிவன் கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில் திருமால், பிரம்மன் இருவருக்கும் அக்னி வடிவமாக காட்சி தந்தார். இந்நாளே தீபத்திருநாளாக கொண்டாடப்படுகிறது.

கார்த்திகை மாதம் என்றாலே விளக்கிடும் மாதம் என்ற பெயர் உண்டு. விளக்கு ஏற்றி இறைவனை வழிபடக்கூடிய மாதம். கார்த்திகை மாதம் முழுவதும் நாம் விளக்கேற்றி வழிபடலாம். அப்படி வாய்ப்பில்லாதவர்கள் குறைந்தபட்சம் மூன்று நாட்களாவது வீட்டில் விளக்கேற்றி வழிபடுவது மிகவும் அவசியம்.

திருக்கார்த்திகை நாளை தான் நாம் கார்த்திகை தீபமாக காலங்காலமாக கொண்டாடுகிறோம். இந்த திருக்கார்த்திகை என்பது கார்த்திகை மாதத்தில் வருகின்ற பௌர்ணமி நாளும், கார்த்திகை நட்சத்திரமும் சேருகின்ற நாள் தான் திருக்கார்த்திகை.

அந்த நாளில் காலங்காலமாக மக்கள் தங்களுடைய வீடுகளிலும், கோவில்களிலும் அகல் விளக்குகள் ஏற்றி வைத்து, வெகு விமர்சையாக கொண்டாடுவார்கள்.

அவரவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு விளக்கு ஏற்றுவார்கள். ஒரு சிலர் குறிப்பிட்ட எண்ணிக்கையில் விளக்கு ஏற்றுவார்கள்.

அந்த வகையில் வீட்டு முற்றத்தில் 4 விளக்கு,
சமையல் கூடத்தில் 1 விளக்கு,
நடையில் 2 விளக்கு,
வீட்டின் பின்புறம் 4 விளக்கு,
திண்ணையில் 4 விளக்கு,
மாட குழியில் 2 விளக்கு,
நிலைப்படிக்கு 2 விளக்கு,
சாமி படத்துக்கு கீழே 2 விளக்கு,
வெளியே யம தீபம் ஒன்று,
திருக்கோலம் இட்ட இடத்தில் 5 என மொத்தம் 27 விளக்குகள் ஏற்றவேண்டும்.

27 விளக்குகள் என்பது 27 நட்சத்திரங்களை குறிக்கும். எனவே 27 விளக்குகளை ஏற்றி தீபத் திருநாளில் சுவாமியை வழிபடுங்கள்.

முதல் நாள் பரணி தீபத்தன்றும், அடுத்த நாள் கார்த்திகை தீபத்தன்றும், அதற்கு மறு நாளும் என மூன்று நாட்கள் விளக்கேற்ற வேண்டும்.

விளக்கேற்றும் நேரம்

தீபமானது அகல் விளக்கு, காமாட்சி விளக்கு, குத்து விளக்கு,  என பல வடிவங்களில் ஏற்றப்படுகிறது.

மண்ணாலான விளக்கில் பசு நெய் கொண்டு, பஞ்சு திரியிட்டு விளக்கேற்ற வேண்டும். அம்பிகை வாசம் செய்வதாக நம்பப்படும் பசு நெய்யை தீபத்தில் இடும்பொழுது, அது சிவமாகிய ஜோதியுடன் சேர்ந்து சிவசக்தி சொரூபமாகிறது.

வாழை இலை

தீபம் வைக்கும்போது கண்டிப்பாக சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய வாழை இலையை கீழே வைத்து அதன் மீது விளக்கு வைக்க வேண்டும். வாழை இலைக்கு பதில் பசு சாணம் கூட வைக்கலாம்.

wall image